search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: winfuture
    X
    புகைப்படம் நன்றி: winfuture

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10e #Smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகின. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வளைந்த ஸ்கிரீன் அமைப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய கேலக்ஸி எஸ்10இ மாடலில் ஃபிளாட் ஸ்கிரீன் அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: winfuture

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டன் கூடுதலாக கைரேகை சென்சார் போன்று இயங்கும். அந்த வகையில் கேலக்ஸி எஸ்10இ மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இடம்பெறவில்லை. ஏற்கனவே கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போனிலும் கைரேகை சென்சார் பக்கவாட்டில் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டனுடன் பிக்ஸ்பி சேவையை இயக்க பிரத்யேக பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன், வைட் மற்றும் எல்லோ உள்ளிட்ட நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.
    Next Story
    ×