என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Sony



    சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்‌ஷிப் எக்ஸ்பீரியா 1 மாடலை போன்று இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட வைடு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, பேட்டரி, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    சோனி எக்ஸ்பீரியா 10 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/2.0
    - 5 எம்.பி. கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு பை 
    - 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி



    சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/1.75
    - 8 எம்.பி. கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு பை 
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

    சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் பிளாக், நேவி புளு, பின்க் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, நேவி புளு, மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 429.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    எல்.ஜி. நிறுவனம் தனது வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #LGV50ThinQ5G



    எல்.ஜி. நிறுவனம் ஜி8 தின்க் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இது எல்.ஜி.யின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 

    எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேப்பர் சேம்பர் சார்ந்து இயங்கும் வெப்பத்தை குறைக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    5ஜி ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. நிறுவனம் டூயல் ஸ்கிரீன் சாதனம் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் OLED 2160x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளேவை சேர்த்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போனுடன் போகோ பின் மூலம் இணைந்து கொள்கிறது.



    எல்.ஜி. வி50 தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU 
    - ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8, 1.22μm, 80° லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 1.12μm, 90˚ லென்ஸ்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
    - DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ
    - 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி சேவையை வழங்க எல்ஜி. பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokiamobile #MWC19



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. இதில் நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

    இதில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் ஐந்து பிரைமரி கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. நோக்கியாவின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக உருவாகி இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்

    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்‌ஷன் மற்றும் பிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

    நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
    சியோமி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MiMIX35G



    சியோமி நிறுவனம் Mi மிக்ஸ் 3 5ஜி, தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    சியோமியின் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், இரண்டாவது 12 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சாம்சங் S5K3M3+ சென்சார், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 2 எம்.பி. DOF சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர் 
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576
    - 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா (DOF), OV02A10 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 5ஜி சப்6, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

    சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை மே மாதத்தில் துவங்குகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வைபை சான்று பெற்றிருக்கிறது. #Nokia #Smartphone



    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. நோக்கியா நிறுவனம் TA-1157 என்ற மாடல் நம்பர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சமீப காலமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் மாடல் நம்பர் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது நோக்கியா 3.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 3.2 என்று அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: SlashLeaks

    தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் மேலும் சில விவரங்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் வைபை 802.11 b/g/n மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரியும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என தெரிகிறது. 

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யலாம்.
    சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள் காணப்படுகின்றன. #Xperia1 #Smartphone



    சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நெருங்கி வரும் நிலையில் புதிய சோனி ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    முன்னதாக சோனி நிறுவனம் எக்ஸ்.இசட்.4 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், எக்ஸ்பீரியா 1 எனும் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் எக்ஸ்பீரியா 1 மாடலின் விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.

    அதன்படி சோனி நிறுவன ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்பீரியா 1 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 



    தற்போதைய ஸ்மார்ட்போன்களை போன்று எக்ஸ்பீரியா 1 மாடலில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களின் இடையே பொருத்தப்பட்டிருக்கிறது.

    எக்ஸ்பீரியா 1 மாடலில் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 4K ஹெச்.டி.ஆர். OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது எக்ஸ்.இசட் பிரீமியம் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. 

    ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் என்பதால் புதிய சோனி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
    மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். இணைந்து மலிவு விலையில் 3ஜி / 4ஜி ஸ்மார்ட் ஃபீச்சர்போன்களை உருவாக்க ஒன்றிணைந்து இருக்கின்றன. #JioPhone #MediaTek



    இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகளவு ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களை உற்பத்தி செய்யும் நோக்கில் மீடியாடெக் மற்றும் கை ஓ.எஸ். டெக்னாலஜீஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இருக்கின்றன. கை ஓ.எஸ். டெக்னாலஜீஸ் நிறுவனம் ஜியோபோனிற்கு கை ஓ.எஸ். இயங்குதளத்தை வழங்கி வருகிறது. 

    இதுகுறித்து இருநிறுவனங்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஸ்மார்ட் ஃபீச்சர் போன் சாதனங்களில் 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பத்தை இயங்க வைக்கும் நோக்கில் புதிதாக மீடியாடெக் சிப்செட்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. 

    இந்த ஒப்பந்தத்தின் படி கை ஓ.எஸ். இயங்குதளம் இனி 3G MT6572 மற்றும் MT6731  தளங்களில் இயங்கும்ய இத்துடன் டூயல் 4ஜி சிம் கார்டுகளை சப்போர்ட் செய்யும் புதிய தளம் ஒன்று உருவாக்கப்பட இருக்கின்றன. கை ஓ.எஸ். சார்ந்த MT6572 மற்றும் MT6731 3ஜி/4ஜி சிப்செட்களை கொண்ட முதல் ஸ்மார்ட் ஃபீச்சர் போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு சமயத்தில் அறிமுகமாகிறது. 



    உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில் இதுவரை எட்டு கோடி சாதனங்களை விற்பனை செய்திருப்பதாக கை ஓ.எஸ். தெரிவித்துள்ளது. இந்த இயங்குதளம் HTML5 பிளாட்ஃபார்ம் மற்றும் இதர இணைய தொழில்நுட்பங்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 3ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.

    கை.ஓ.எஸ். இன் மற்றொரு முக்கிய அம்சம் இது குறைந்தளவு மெமரியை எடுத்துக் கொள்ளும். கூகுள் அசிஸ்டண்ட், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஃபீச்சர்போன் மாடல்களான ஜியோபோன் மற்றும் நோக்கியா 8110 4ஜி-யில் வழங்கி வருகிறது.

    மீடியாடெக் சிப்செட்களில் கை ஓ.எஸ். இயங்குதளம் வழங்குவதன் மூலம் ஃபீச்சர் போன்களில் 3ஜி மற்றும் 4ஜி வசதியை 256 எம்.பி. அல்லது 512 எம்.பி. மெமரி கொண்ட சாதனங்களிலும் வழங்க முடியும் என இருநிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
    சாம்சங் நிறுவனம் இரத்த கொதிப்பை கண்காணிப்பதுடன் ராணுவ தரத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. #GalaxyWatchActive



    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் முன்பை விட ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    மேம்பட்ட கேலக்ஸி ஹெரிடேஜ், ஃபிட்னஸ் மற்றும் உடல்நலன் சார்ந்த அம்சங்களை கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் கொண்டிருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இரத்த கொதிப்பை கண்காணிக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதற்கென பயனர்கள் மை பி.பி. லேப் (My BP Lab) செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த செயலியை மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.  

    கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் பயனர் ஓடுவது, நடப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தானாக கண்டறிந்து அதற்கேற்ற விவரங்களை வழங்கும். இந்த வாட்ச் அணிந்தபடி 39 பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் அன்றாட முன்னேற்றத்திற்கு இலக்கு நிர்ணயித்து, அதனை கண்காணிக்கவும் முடியும். 



    1.1 இன்ச் 360x360 பிக்சல் ஃபுல் கலர் AOD டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. 25 கிராம் எடை கொண்டிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் எக்சைனோஸ் 9110 பிராசஸர், 768 எம்.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. 

    இத்துடன் 5ATM+ IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் MIL-STD-810G சான்று பெற்றிருப்பதால் ராணுவ தரத்திற்கு இணையான உறுதித்தன்மையை கொண்டிருக்கிறது. இதில் டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0 வழங்கப்பட்டிருக்கிறது.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் 4.2, வைபை, 230 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும். இத்துடன் மூன்றாம் தரப்பு செயலிகளை சப்போர்ட் செய்யும். 

    கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சில்வர், பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சீ கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 7 ஆம் தேதி துவங்குகிறது. இதனை வாங்குவோருக்கு வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபோல்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyFold #FoldableSmartphone



    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை மட்டும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வில் சாம்சங் காட்சிப்படுத்தியது. 

    இதன் தொடர்ச்சியாக கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை விரிவாக அறிமுகம் செய்திருக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் அளவுகளில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை சக்தியூட்ட இருபுறங்களிலும் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டு, பிரத்யேக தொழில்நுட்பம் இருபேட்டரிகளில் இருந்து மின்சக்தியை ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறது.



    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு ஆடம்பர சாதனம் என்றே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம். புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

    ஸ்மார்ட்போனினை தேவைப்படும் போது மடித்து பயன்படுத்த ஏதுவாக மிக கடினமான கீல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் முதுகெலும்பு போன்று செயல்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கீல் தெரியாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் பார்க்க அழகாகவே காட்சியளிக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

    - 7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED பேனல்
    - 4.6 இன்ச் சூப்பர் AMOLED பேனல்
    - 12 ஜி.பி. ரேம்
    - 512 ஜி.பி. மெமரி
    - 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, டூயல் பிக்சல் AF, OIS, f/1.5 - f/2.4
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, PDAF, OIS, f/2.4
    - 10 எம்.பி. f/2.2 + 8 எம்.பி. டெப்த் கேமரா, f/1.9 (உள்புறம் இரு கேமரா செட்டப்)
    - 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2  
    - ஆண்ட்ராய்டு பை
    - 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)

    சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை சீராக இயங்க வைக்க கூகுளுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் உள்ளிட்டவை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் சீராக இயங்க வைக்க செயலிகள் பிரத்யேகமாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளன.



    கேலக்ஸி ஃபோல்டு விற்பனை விவரங்கள்:

    சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26, 2019 முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,41,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் கிரீன், புளு, சில்வர் மற்றும் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் 4ஜி எல்.டி.இ. மற்றும் 5ஜி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi 9 மற்றும் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #XiaomiMi9 #Smartphone



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi 9 மற்றும் Mi 9 எஸ்.இ. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கின்றன. 

    சியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர், கேம் டர்போ மாணிட்டரிங், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் லேசர் ஆட்டோஃபோகஸ், ஃபேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோ ஃபோக்கஸ் போன்ற அம்சங்களும், 12 எம்.பி. சாம்சங் S5K3M5 டெலிபோட்டோ கேமரா மற்றும் 16 எம்.பி. சோனி IMX481 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்டிருக்கிறது.



    சியோமி Mi 9 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி (டிரான்ஸ்பேரெண்ட் எடிஷன்)
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, CAF
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ்
    - 16 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 20 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi 9 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்தது. புதிய Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனில் 5.97 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சாம்சங் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.



    சியோமி Mi 9 எஸ்.இ. சிறப்பம்சங்கள்:

    - 5.97 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 10என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி. 
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.12μm பிக்சல்
    - 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.4, 1.12μm பிக்சல்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3070 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போன் புளு, வைலட் மற்றும் டார்க் கிரேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை 1,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,150) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2,299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.24,330) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சியோமி Mi 9 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,725), 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,900), சியோமி Mi 9 டிரான்ஸ்பேரெண்ட் லிமிட்டெட் எடிஷன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,300) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #VivoV15Pro #Smartphone



    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 64-பிட் 11nm பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. குவாட் பிக்சல் 1/2.25″ சென்சார், f/1.8 
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 8 எம்.பி. ஏ.ஐ. சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் டோப்பாஸ் புளு மற்றும் ரூபி ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ வி15 ப்ரோ விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    அறிமுக சலுகைகள்:

    - விவோ வி15 ப்ரோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக்.

    - ஸ்மார்ட்போன் வாங்கிய ஆறு மாதத்திற்குள் ஒரு முறை திரையை மாற்றிக் கொள்ளும் வசதி.

    - முன்பணம் இல்லாமல் மாத தவணையில் வாங்கிக் கொள்ளும் வசதி.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் உருவாகி வருகிறது. #GalaxyA50 #Smartphone



    சாம்சங் நிறுவனத்தின் 2019 கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராக்கள், 6.4-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகியிருக்கிறது. கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விவரங்களுடன் அதன் ரென்டர்களும் வெளியாகியிருக்கிறது.



    புகைப்படம் நன்றி: pricekart

    சாம்சங் கேலக்ஸி ஏ50 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 10nm பிராசஸர்
    - மாலி-G72 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.4 
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    ×