search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #VivoV15Pro #Smartphone



    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 64-பிட் 11nm பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. குவாட் பிக்சல் 1/2.25″ சென்சார், f/1.8 
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 8 எம்.பி. ஏ.ஐ. சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் டோப்பாஸ் புளு மற்றும் ரூபி ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ வி15 ப்ரோ விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    அறிமுக சலுகைகள்:

    - விவோ வி15 ப்ரோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக்.

    - ஸ்மார்ட்போன் வாங்கிய ஆறு மாதத்திற்குள் ஒரு முறை திரையை மாற்றிக் கொள்ளும் வசதி.

    - முன்பணம் இல்லாமல் மாத தவணையில் வாங்கிக் கொள்ளும் வசதி.
    Next Story
    ×