search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்
    X

    பாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்

    விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #VivoV15Pro #Smartphone



    விவோ நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விவோ தனது வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    அதன்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மாபர்ட்போனின் கீழ்புறம் பெசல் எதுவும் காணப்படவில்லை. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் சந்தையில் கிடைக்கும் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் விவோ நிறுவனத்தின் முதல் மாடலாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.



    இத்துடன் ஸ்மார்ட்போனில் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் சூப்பர் AMOLED அல்ட்ரா ஃபுல்வியூ டிஸ்ப்ளே, FHD பிளஸ், 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். சிப்செட், அட்ரினோ 612 GPU, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த சென்சார்கள் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கும். இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படும் என தெரிகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×