search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: 91Mobiles
    X
    புகைப்படம் நன்றி: 91Mobiles

    48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் சீன நிறுவன ஸ்மார்ட்போன்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #OppoF11Pro #Smartphone



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் 2019 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் ஒப்போ எஃப்11, எஃப்11 ப்ரோ மற்றும் ஆர்17 நியோ என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரென்டர் வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மா்ட்போனின் ரென்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கிறது.

    அதில் ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன், பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபி கேமரா காணப்படவில்லை என்பதால் விவோ நெக்ஸ் போன்று ஒப்போ ஸ்மார்ட்போனிலும் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: 91Mobiles

    ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் புளு மற்றும் பர்ப்பிள் நிறங்களை தழுவியிருக்கிறது.

    ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி். சிமாஸ் கேமரா வழங்கப்படுகிறது. இதேபோன்ற கேமரா ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்போ தவிர விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×