என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    52 எம்.பி. கேமராவுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்
    X

    52 எம்.பி. கேமராவுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்

    சோனி நிறுவனத்தின் புதிய XZ4 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் 52 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் உடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #XperiaXZ4 #Smartphone



    சோனி நிறுவனம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய எக்ஸ்பீரியா XZ4 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. 

    புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. 

    மூன்று பி்ரைமரி கேமராக்களில் 16 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.6, 52 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6 மற்றும் 0.3 எம்.பி. ToF சென்சார் வழங்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான ஹானர் வியூ20 மற்றும் ரெட்மி நோட் 7 போன்ற ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருந்ததால் புதிய எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனி்ல் 52 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: sumahoinfo

    புதிய எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் ToF சென்சார் புகைப்படம் எடுக்கும் போது ஆட்டோஃபோகஸ் வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டிருக்கிறது. சோனியின் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் CAD சார்ந்து வெளியாகியிருக்கிறது.

    மேலும் எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் ToF சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை கிடைத்திருக்கும் விவரங்கள் பல்வேறு தளங்களில் இருந்து வெளியாகி இருப்பதால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.
    Next Story
    ×