search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மூன்று பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    மூன்று பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #XiaomiMi9 #Smartphone



    சியோமி நிறுவன சாதனங்களுக்கான தலைவர் தனது வெய்போ அக்கவுண்ட்டில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பின் அதனை உடனடியாக அழித்துவிட்டார். எனினும், அவர் அதனை தனது அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கும் முன் சில வாடிக்கையாளர்கள் அந்த புகைப்படத்தினை டவுன்லோடு செய்துவிட்டனர்.

    வெய்போவில் அவர் பிதிவிட்டு பின் அவசர அவசரமாக நீக்கிய புகைப்படம் சியோமியின் ஃபிளக்‌ஷிப் Mi9 ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. வெய்போவில் வெளியான புகைப்படத்தின் படி புதிய சியோமி ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் புதிய சியோமி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    சமீபத்தில் ரெட்மி பிராண்டு தலைவராக நியமிக்கப்பட்ட லு வெய்பிங் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் அந்நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

    இந்த ஸ்மார்ட்போன் Mi9 மாடலாக இருக்கும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் எதிர்பார்க்கலாம். சோனி IMX586 சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸருடன் உருவாகும் சியோமியின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என்றும் இது Mi மிக்ஸ் 3 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×