search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    இந்தியாவில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் கே1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #OppoK1 #Smartphone



    ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புதிய கே1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள கே1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது. 



    ஒப்போ கே1 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. ரேம் 
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மோக்கா ரெட் மற்றும் கோ புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    அறிமுக சலுகைகள்:

    - புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி

    - ப்ளிப்கார்ட் வழங்கும் மொபைல் பாதுகாப்பு வசதி

    - ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் எட்டு மாதங்களுக்கு 90% வரை பைபேக் சலுகை ரூ.1 கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது.
    Next Story
    ×