search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ரெட்மி கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி கோ என அழைக்கப்படுகிறது. #RedmiGo #Smartphone



    சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் இயங்கும் என தெரிகிறது. இதுபற்றி ரெட்மி தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மியின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சியோமி ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஒன் தளத்தில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.



    ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன்
    - குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 8.1
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர ரெட்மி கோ பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என சியோமி பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் தெரிகிறது. ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஜெர்மனியை சேர்ந்த வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி ரோ ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ. வழங்கப்படுகிறது. ஐரோப்பாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத துவக்கத்தில் விற்பனைக்கும் வரும் என்றும் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×