என் மலர்

  தொழில்நுட்பம்

  புகைப்படம் நன்றி: OnLeaks
  X
  புகைப்படம் நன்றி: OnLeaks

  அசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆன மோட்டோ இசட் 4 பிளே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoZ4Play #Smartphones  மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ்: மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே உள்ளிட்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

  இந்நிலையில், மோட்டோரோலாவின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மோட்டோ இசட் 4 பிளே என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் லீக் ஆகியுள்ளது.

  அதன்படி மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதன் வால்யூம் ராக்கர் பட்டன்கள் போனின் வலதுபுறம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பின்புறம் ஒற்றை கேமரா யூனிட் மற்றும் மோட்டோ மாட் வசதிக்கான கனெக்டர்கள் காணப்படுகிறது.  3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படும் மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும், உயர் ரக பிரிவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போனில் ஃபிளாக்‌ஷிப் பிராசஸர் வழங்கப்படலாம்.

  இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி மோட்டோரோலா தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. முதற்கட்டமாக மோட்டோ ஜி7 சீரிஸ் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
  Next Story
  ×