search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிதாக வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கும் சியோமி
    X

    புதிதாக வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கும் சியோமி

    சியோமி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கி வருகிறது. இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. #Xiaomi #Wireless



    சியோமி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சியோமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏர்டாட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது, எனினும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் சியோமி மற்றொரு புதிய வயர்லெஸ் இயர்பாட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. சியோமியின் புதிய வயர்லெஸ் இயர்பட்கள் பற்றிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவும் பார்க்க ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    இணையத்தில் வெளியாகி இருக்கும் சியோமி ஏர்டாட்ஸ் ரென்டர்களின் படி வயர்லெஸ் பட்களைத் தொடர்ந்து சிறிய ஸ்டெம் ஒன்று காணப்படுகிறது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் சாதனத்தை விட தடிமனாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதில் பேட்டரி மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.


    புகைப்படம் நன்றி: mysmartprice

    புதிய இயர்பட்கள் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற சாதனங்கள் பெரும்பாலும் இவ்வாறே உருவாக்கப்படுகிறது. 

    இயர்பட்களின் மவுத் பகுதியில் சிலிகான் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதும் ரென்டர்களில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய இயர்பட்கள் பயன்படுத்த சௌகரியமாக இருக்கும். இவற்றுடன் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    சார்ஜிங் கேஸ் பார்க்க ஏர்டாட்ஸ் போன்று இல்லையென்றாலும், இதன் வடிவமைப்பு அம்சங்கள் ஆப்பிளின் ஏர்பாட்ஸ்-க்கு வழங்கப்படும் கேஸ் போன்று காட்சியளிக்கிறது. முந்தைய ஏர்டாட்ஸ் போன்றே புதிய வயர்லெஸ் இயர்பட்களிலும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வயர்லெஸ் இயர்பட்களில் ப்ளூடூத் 5.0 மற்றும் தொடுதிரை வசதி வழங்கப்படுகிறது. இவற்றை கொண்டு பிளே / பாஸ் ஆடியோ, எனேபிள் / டிசேபிள் அசிஸ்டண்ட் மற்றும் அழைப்புகளை ஏற்கும் / நிராகரிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ஏர்டாட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய இயர்பட்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.
    Next Story
    ×