என் மலர்tooltip icon

    கணினி

    ஐ.ஆர்.சி.டி.சி.-யின் ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் கட்டணம் செலுத்த புதிய பேமென்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. #PhonePe #IRCTC
     

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. உடன் இணைவதை போன்பெ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு செயலியில் பணம் செலுத்த இனி போன்பெ பயன்படுத்தலாம்.

    இதனால் போன்பெ செயலியை பயன்படுத்தும் சுமார் ஒரு கோடி பயனர்கள் யு.பி.ஐ., கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் போன்பெ வாலெட் பயன்படுத்தி தங்களது வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.

    "இந்தியாவில் பயணங்களை மேற்கொள்ள முன்பதிவுகளுக்கு நம்பத்தகுந்த தளமாக இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியின் மூலம் இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிகரிக்க முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேமென்ட் வசதிகளுடன் பயனர்கள் இனி யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும்," என போன்பெ நிறுவனததின் கார்திக் ரகுபதி தெரிவித்தார்.

    "இந்த கூட்டணி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்கள் சிறப்பான முன்பதிவு அனுபவம் பெறுவதோடு டிஜிட்டல் பேமென்ட் நன்மைகளை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்கும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இ-வாலெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தட்கல் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலிய மூலம் முன்பதிவு செய்ய முடியும். வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நோக்கில் இ-வாலெட் சேவையில் பயனர்கள் முன்கூட்டியே பணத்தை சேர்த்து வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மொபைல் வாலெட் போன்றே இந்த பணம் கொண்டு டிக்கெட் முன்பபதிவின் போது பயன்படுத்தலாம்.
    சாம்சங் நிறுவனம் சார்பில் உலகின் முதல் 5ஜி மோடெம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 5100 5ஜி மோடெம் அனைத்து வித 5ஜி தரத்துக்கும் உகந்தது. #SamsungIoT #5G


    தென்கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் உலகின் முதல் 5ஜி மோடெமை அறிமுகம் செய்துள்ளது. எக்சைனோஸ் 5100 5ஜி மோடெம் அனைத்துவித 5ஜி தரத்துக்கும் உகந்தது என சாம்சங் தெரிவித்துள்ளது. 

    புதிய மோடெம் அதிக சக்திவாய்ந்த 10 என்.எம். பிராசஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோடெம் ரேடியோ அக்சஸ் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளது.

    ஓவர்-தி-ஏர் (OTA) 5ஜி-என்.ஆர். டேட்டா கால் சோதனை வயர்லெஸ் சூழலில் 5ஜி பேஸ் ஸ்டேஷன் மற்றும் எக்சைனோஸ் மோடெம் 5100 பொருத்தப்பட்ட பயனர் பயன்படுத்தக்கூடிய ப்5ஜி ரோடோடைப் சாதனத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது. 



    இத்துடன் சந்தையில் 5ஜி மொபைல் தகவல் பரிமாற்றத்தை கொண்டு வர பல்வேறு சர்வதேச டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து சாம்சங் பணியாற்றி வருகிறது. 

    எக்சைனோஸ் 5100 மோடெம் 3ஜிபிபியின் 5ஜி தரத்திற்கு உகந்த எம்.எம். அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம்கள் மற்றும் 2ஜி GSM/CDMA, 3ஜி WCDMA, TD-SCDMA, HSPA மற்றும் 4ஜி எல்.டி.இ. போன்றவற்றை ஒற்றை சிப் மூலம் சப்போர்ட் செய்கிறது.

    புதிய மோடெம் 5ஜி-யின் 6 ஜிகாஹெர்ட்ஸ் செட்டிங் மற்றும் எம்.எம். வேவ் செட்டிங்கில் நொடிக்கு 6ஜிபி செட்டிங்கில் அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான டவுன்லின்க் வேகம் வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இது தற்போதைய டேட்டா வேகங்களை விட 1.7 மடங்கு மற்றும் ஐந்து மடங்கு வரை அதிகம் ஆகும். #SamsungIoT #5G
    இந்தியாவில் X மற்றும் XII வகுப்பு கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்திருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. #cbse #MicrosoftEdu


    இந்திய பள்ளிகளில் நடத்தப்படும் X மற்றும் XII வகுப்பு தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் சி.பி.எஸ்.இ. இணைந்திருக்கிறது. இதன் மூலம் கேள்வித்தாள்கள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த திட்டம் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு 847 மையங்களில் மொத்தம் 4000 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஆஃபீஸ் 365 மென்பொருள் மூலம் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முழு நடவடிக்கைகளையும் டிராக் செய்ய முடியும்.

    முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதோடு அனைத்து வழிமுறைகளும் தானாக நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் கேள்வித்தாள்களை டவுன்லோடு செய்ய முடியும் என்பதோடு இவை இரண்டடுக்கு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 



    கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் மற்றும் வாட்டர்மார்க் செய்து ஆஃபீஸ் 365 அம்சங்களை பயன்படுத்துகிறது. வாட்டர்மார்க்-இல் ஒவ்வொரு தேர்வு மையத்தின் குறியீடு இடம்பெற்றிருக்கும் என்பதால் எளிமையாக டிராக் செய்ய முடியும். ஒருவேளை அனைத்தையும் கடந்து கேள்வித்தாள் லீக் ஆகும் பட்சதித்ல் அதனை எளிதில் டிராக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. தேர்வு கண்காணிப்பாளர் கேள்வித்தாள் விநியோகத்தை துவக்குவார். இவ்வாறு செய்ததும், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு ஒன்டிரைவ் லின்க்-க்கு கேள்வித்தாள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும், இதனை குறிப்பிட்ட தேர்வு மையங்கள் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தனியார் மற்றும் பொது கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கல்வி முறையை நவீனத்துவமாக்கி, மாணவர்களுக்கு குறைந்த கட்டத்தில் பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய பணியாற்றி வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
    ஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.12,999 முதல் துவங்குகிறது. #smarttv


    சீன நிறுவனமான ஸ்கைவொர்த் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் இன்பில்ட் கேம், வைபை, லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. சீரிஸ் DTS சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், சிறப்பான ஆடியோ அனுபவம் கிடைக்கும். கூடுதலாக பயனர் விருப்பப்படி தேர்வு செய்ய பல்வேறு பிக்சர் மற்றும் ஆடியோ மோட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 49-இன்ச் மாடலை தவிர்த்து 32 மற்றும் 43-இன்ச் மாடல்களில் ஐ.பி.எஸ். பேனல் கொண்ட ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்கைவொர்த் எம்20 சீரிஸ் பேஸ் மாடலாக இருக்கும் 32-இன்ச் டி.வி.யில் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, 1366×768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், குவாட்-கோர் பிராசஸர் மற்றும் டூயல்-கோர் கிராஃபிக்ஸ் பிராசஸர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய எம்20 சீரிஸ் 43 இன்ச் மாடலில் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1920×1080 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இறுதியில் 49-இன்ச் மாடலிலும் ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 2 ஹெச்.டி.எம்.ஐ., 2 யு.எஸ்.பி. மற்றும் ஒரு வி.ஜி.ஏ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஆப் ஸ்டோர் மற்றும் ஏ.பி.கே. செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி 32-இன்ச் வேரியன்ட் விலை ரூ.12,999, 43-இன்ச் வேரியன்ட் ரூ.22,999 மற்றும் 49-இன்ச் வேரியன்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் மூன்று டி.வி. மாடல்களையும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. #smarttv
    கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyUnpacked #GalaxyHome


    சாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி வாட்ச் சாதனங்களுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. 

    பிக்ஸ்பி ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வசதியுடன், எட்டு ஃபியர்-பீல்டு மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் குரல் அங்கீகார வசதி அறையில் எங்கிருந்து பேசினாலும் சீராக வேலை செய்யும். புதிய ஸ்பீக்கரை சாம்சங் நிறுவனம் 160 கேலக்ஸி ஹோம் ஸ்பீக்கர்களில் இருந்து அறிமுக ஆடியோவினை இயக்கி அறிமுகம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

    புதிய ஸ்பீக்கர்கள் இயற்கை தரத்தில் ஆடியோவை அதன் சக்திவாய்ந்த ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர்கள் சிறப்பாக பிரதிபலிக்கிறது. AKG-டியூன் செய்யப்பட்ட டைரெக்ஷனல் ஸ்பீக்கர்கள் இருப்பதோடு சாம்சங் ஸ்மார்ட் ஹோம் தளத்தை சப்போர்ட் செய்கிறது. இதனால் ஸ்மார்ட்திங்ஸ் சாதனங்களை வாய்ஸ் கமான்ட் மூலம் இயக்க முடியும்.

    இத்துடன் ஸ்பாடிஃபையுடன் இணைந்திருப்பதால் சாம்சங் மற்றும் ஸ்பாடிஃபை அக்கவுன்ட்மூலம் லின்க் செய்து இசையை அனைத்து சாம்சங் சாதனங்களிலும் கேட்க முடியும்.

    சாம்சங் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சார்ந்த மற்ற விவரங்கள், விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்டவை இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் சாம்சங் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய டேப்லெட் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyTab


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டேப்லெட்-இல் 10.5 இன்ச் WUXGA டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டம், 4ஜி எல்.டி.இ. வசதி கொண்டிருக்கும் புதிய டேப்லெட் 7300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) சிறப்பம்சங்கள்

    – 10.5 இன்ச் 1920×1200 பிக்சல் WUXGA 16:10 ரக TFT எல்.சி.டி. டிஸ்ப்ளே
    – 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    – அட்ரினோ 506 GPU
    – 3 ஜிபி ரேம்
    – 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    – 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    – 5 எம்பி செல்ஃபி கேமரா
    – 4 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
    – 4ஜி எல்டிஇ, வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி
    – 7,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) எபோனி பிளாக் மற்றும் அர்பன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட்-இல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் கேலக்ஸி டேப் ஏ (2018) விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய கேலக்ஸி டேப் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2750 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் அடுத்த நான்கு ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன. #Samsung  #GalaxyTab
    ஜெ.பி.எல். நிறுவனத்தின் புதிய ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் தள்ளுபடி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #headphones


    இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெ.பி.எல். நிறுவனத்தின் இரண்டு சாதனங்கள்: ஜெ.பி.எல். கோ பிளஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஜெ.பி.எல். T250BT ஹெட்போன் உள்ளிட்டவற்றை அறிமுகமாகி உள்ளன.

    இத்துடன் ஆகஸ்டு 7, 2018 துவங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் அனைத்து ஜெ.பி.எல். சாதனங்களிலும் அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும். மேலும் ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கு அவரவர் வாங்கும் பொருளுடன் இலவச ஜெ.பி.எல். ஸ்போர்ட்ஸ் இயர்போன் வழங்கப்படுகிறது.



    சிறப்பு விற்பனையின் கீழ் அனைத்து சாதனங்களுக்கும் ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் துவங்கி, ஹோம் மற்றும் மல்டிமீடியா சாதனங்களும் புதிய ஜெ.பி.எல். ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுன்கிறன.

    புதிய சாதனங்களின் படி ஜெ.பி.எல். கோ பிளஸ் ஆல்-இன்-ஒன் ஸ்பீக்கர் இசையை ப்ளூடூத் வழியே ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் இருந்து இசைக்கிறது. இதனுடன் 5 மணி நேர பிளேடைம் கொண்டுள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் நாய்ஸ்-கேன்சலிங் வசதி கொண்ட ஸ்பீக்கர்போன் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் ஸ்பீக்கரை ஆஃப் செய்யாமல் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்து பேச முடியும்.



    இத்துடன் ஜெ.பி.எல். TBT ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 12.5 எம்எம்-இல் டிரைவர்கள் மற்றும் ஒற்றை பட்டன் கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் மியூசிக் பிளேபேக் இயக்குவதோடு, அழைப்புகளையும் பேச முடியும்.

    மூன்று நிறங்களில் கிடைக்கும் ஜெ.பி.எல். கோ பிளஸ் ஸ்பீக்கர் விலை ரூ.3499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜெ.பி.எல். T205BT ஹெட்போன் விலை ரூ.2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இரண்டு சாதனங்களும் தற்சமயம் ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஜெ.பி.எல். சாதனங்கள் பிரத்யேகமாக ஜெ.பி.எல். வலைதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. #headphones #speakers
    ஃபேஸ்புக் F8 டெவலப்பர்கள் நிகழ்வில் தனது டேட்டிங் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்த நிலையில், இந்த சேவைக்கான சோதனை துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Facebook


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வு இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. 

    இந்நிலையில், அறிவிப்பு வெளியான சில மாதங்களில் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரித்துள்ளது.



    புதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

    ஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. #Facebook
    இந்தியாவில் கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம். #garmin


    கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும். 

    விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது. 



    கார்மின் விவோஆக்டிவ் 3 சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 240x240 பிக்சல் ஃபுல்-கலர் கார்மின் க்ரோமா டிஸ்ப்ளே
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM)
    - ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் வேலை செய்யும்
    - ஸ்டெப் கவுன்ட்டர், மூவ் பார்
    - ஆட்டோ கோல்
    - ஸ்லீப் மானிட்டரிங், கலோரி உள்ளிட்ட உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி
    - மியூசிக் ஸ்டோரேஜ்: அதிகபட்சம் 500 பாடல்களை பதிவு செய்யும் வசதி
    - பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் 15 ஸ்போர்ட் செயலிகள் 
    - கார்மின் எலிவேட் ரிஸ்ட் இதய துடிப்பு மானிட்டர்
    - பாரோமெட்ரிக் ஆல்டிமீட்டர், காம்பஸ், தெர்மோமீட்டர்

    ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இந்தியாவில் விவோஆக்டிவ் 3 மியூசிக் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேண்ட் உடன் வருகிறது. கார்மின்ஸ்டோர், பேடிஎம் மால், அமேசான், ப்ளிப்கார்ட், ஹீலியோஸ் வாட்ச் ஸ்டோர் மற்றும் பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. #garmin #Smartwatch
    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியின் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற வாக்கில் பலமுறை தகவல்கள் வெளியாகி, பின் அவை வதந்தி என கூறப்பட்டது. ஆனால் இம்முறை வாட்ஸ்அப் உண்மையாகவே கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    அதன்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்கு பின் பதில் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ்அப் செயலியை கூர்ந்து கவனிப்பவராக இருந்தால், சில நிறுவனங்கள் உங்களை அணுக வாட்ஸ்அப் மூலம் அனுமதி கேட்டிருக்கலாம், மேலும் இதே வழிமுறையை ஃபேஸ்புக் பின்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    புதுவகையான விளம்பரங்கள் மூலம் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அழைப்பு விடுக்காமல், நேரடியாக நிறுவனங்களை வாட்ஸ்அப் மூலம் தங்களது சந்தேகங்கள் அல்லது புகார்களை தெரிவிக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம் வசூலிக்கும்.

    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உபெர் என ஏற்கனவே கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை சோதனை செய்ய துவங்கியிருக்கின்றன. எனினும் புதிய ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் 2019 முதல் தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேட்டஸ் பகுதியில் பயனர் எழுத்து, புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை வைக்கலாம், இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்து போகும்.

    உலகில் இதுவரை சுமார் 45 கோடி பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் ஏற்கனவே விளம்பரங்கள் வருகின்றன. #WhatsAppBusiness #Apps
    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை ஃபேஸ்புக் துவங்கியது. அதன்படி போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கவுன்ட்கள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. #Facebook


    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 ப்ரோஃபைல்கள் மற்றும் 8 பக்கங்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் ஃபேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.


    கோப்பு படம்

    மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் ஃபேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    "போலி நடிகர்கள் ஃபேஸ்புக்கில் இயங்குவிடாமல் செய்திருக்கிறோம்," என ஃபேஸ்புக் மூத்த அலுவலர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார். 

    "இதன் பின் யார் இயங்குகிறார்கள் என்பது குறித்து எங்களது ஆய்வின் இந்த சூழலில், எங்களிடம் போதுமான தொழில்நுட்ப ஆதாரம் இல்லை," ஃபேஸ்புக்கின் சைபர்செக்யூரிட்டி திட்டங்களுக்கான தலைவர் நதேனியல் லெய்ச்சர் தெரிவித்தார்.

    17 ப்ரோஃபைல்கள், எட்டு பக்கங்கள் மற்றும் ஏழு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் அக்கவுன்ட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டும், சமீபத்திய அக்கவுன்ட் மே மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட்டதில் ஒரு பக்கங்களை சுமார் 2,90,000 அக்கவுன்ட்களை பின்தொடரப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன்களுடன், புதிய ஆப்பிள் வாட்ச், விலை குறைந்த மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சற்றே சிறியதாகவும், ஸ்மார்ட் கனெக்டர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, ஹெட்போன் ஜாக் இல்லாமல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் 10.5 இன்ச் டிஸ்ப்ளே, அளவுகளில் 247.5மில்லிமீட்டர் உயரம், 178.7மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6மில்லிமீட்டர் தடிமனாக இருக்கிறது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட சிறியதாகும். 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை பொருத்த வரை 280மில்லிமீட்டர் உயரம், 215மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6.4 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய வடிவமைப்புகளின் படி ஐபேட் மெல்லிய பெசல்களுடன் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதில் ஹோம் பட்டன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சாதனத்தில் ட்ரூடெப்த் கேமரா சிஸ்டம் மூலம் ஃபேஸ் ஐடி வசதி வழங்கப்படலாம். இதேபோன்று புதிய ஐபேட் மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படாது என கூறப்படுகிறது.



    ஐபோன்களில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு பெரிய பேட்டரி, டாப்டிக் இன்ஜின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதேபோன்று ஐபேட் மாடலில் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்க இடவசதியில்லாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் டைமன்ட் கட் முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோன்று புதிய ஐபேட் மாடல்களில் ஸ்மார்ட் கனெக்டர் பக்கவாட்டில் இருந்து லைட்னிங் போர்ட் அருகே கீ்ழ்பக்கமாக மாற்றப்படுகிறது. இதனால் சற்றே செங்குத்தான கீபோர்டு இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் ஃபேஸ் ஐடி அம்சம் தான் என்றும், இது செங்குத்தான நிலையில் மட்டுமே வேலை செய்யும், எனினும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி கிடைமட்டமாக வேலை செய்யும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அம்சம் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #ipadpro #Apple
    ×