என் மலர்tooltip icon

    கணினி

    இந்தியாவில் வு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 100-இன்ச் 4K UHD எல்.இ.டி. டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv #androidoreo

     

    அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஆடம்பர தொலைகாட்சி மாடல்களை விற்பனை செய்து வரும் வு டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    100-இன்ச் அளவு கொண்ட புதிய டிவி ஆன்ட்ராய்டு 4K UHD தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. புதியு வு100 டிவி மாடல் ஆன்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளம் மற்றும் முழுமையான மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளது. 4K HDR10 பேனல் கொண்டிருக்கும் புதிய டிவியில் 2.5 பில்லியன் கலர் மற்றும் வைடு கலர் கமுட், பில்ட்-இன் ஊஃபர் மற்றும் 2000 வாட் ஜெ.பி.எல். ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. 

    இத்துடன் வு ஆக்டிவாய்ஸ் ரிமோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, யூடியூப் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றுக்கு ஹாட்கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர், ஹாட்ஸ்டார், ஆல்ட் பாலாஜி, சோனி லிவ் மற்றும் பல்வேறு இதர செயலிகளை கொண்டுள்ளது.



    வு 100 100-இன்ச் ஆன்ட்ராய்டு 4K UHD எல்இடி டிவி சிறப்பம்சங்கள்:

    - 100 இன்ச் 3480x2160 4K UHD A+ கிரேடு ஐ.பி.எஸ். பேனல்
    - குவாட்-கோர் பிராசஸர்
    - 2.5 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0
    - டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட் போர்ட்
    - MPEG/H.264/H.265 டீகோடர்
    - 12 + 12 + 12 வாட் பில்ட்-இன் ஜெ.பி.எல். சவுன்ட்பார், ஊஃபர், DTS ட்ரு சரவுன்டு, டால்பி டிஜிட்டல்
    - வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட், ஹாட்கீ

    வு 100 டிவி விலை இந்தியாவில் ரூ.20,00,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வு அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும் வு 100 டிவி விரைவில் மற்ற விற்பனையகங்களிலும் கிடைக்கச் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் பயன்படுத்திய சுமார் 3.8 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. #Hacking



    ஆகஸ்டு 21-ம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை ப்ரிடிஷ் சேவையை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

    இரண்டு வாரங்கள் நீடித்த ஹேக்கிங்கில் வாடிக்கையாளர்களின் பயண விவரங்களோ அல்லது பாஸ்போர்ட் விவரங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஹேக்கிங் குறித்து உடனடியாக விசாரணை துவங்கப்பட்டு இருப்பதாகவும் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.



    "ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வர்த்தக விவரங்கள் திருடப்பட்டு விட்டன," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    "ஹேக் சரி செய்யப்பட்டு வலைத்தளம் இப்போது இயல்பாக இயங்கி வருகிறது. ஹேக்கிங் சார்ந்த விவரங்கள் காவல் துறை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்." என தெரிவித்துள்ளது.

    ஹேக்கிங்கில் சிக்கியதாக நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவுறுத்தியுள்ளது. 

    இழப்பீடு வழங்குவது தொடர்பாக விரைவில் வாடிக்கையாளர்களை ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hacking 

    ஸ்கைப் கால் செய்வோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முற்றிலும் கிளவுட் சார்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஸ்கைப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் செயலியை மேலும் எளிமையாக்கும் நோக்கில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்தது.

    அந்த வகையில், ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் தற்சமயம் வழங்கப்படாத நிலையில் விண்டோஸ் 10 தளத்திற்கு வரும் வாரங்களில் வழங்கப்படும் என மைக்ரோசாஃப்ட் உறுதி அளித்துள்ளது. அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். 



    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை பயனர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அழைப்புகளை பதிவு செய்ய, திரையின் கீழே காணப்படும் "+" குறியை க்ளிக் செய்து, பதிவு செய்ய துவங்கலாம். மொபைல் செயலியில் அழைப்புகளை பதிவு செய்ய வட்ட வடிவில் காணப்படும் "+" குறியை க்ளிக் செய்ய வேண்டும்.

    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, சாட் ஸ்கிரீன் சென்று மோர் -- சேவ் டு டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், அழைப்பு பயனரின் டவுன்லோடு ஃபோல்டரில் பதிவு செய்யப்படும். மொபைலில் ரெக்கார்டெட் கால் ஆப்ஷனை க்ளிக் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும். 

    கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்படும் அழைப்புகள் MP4 வடிவில் சேமிக்கப்படும்.
    சியோமி நிறுவனத்தின் Mi வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சாதனங்களில் பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி Mi வயர்லெஸ் சார்ஜரில் டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் மற்றும் ஓவர்-வோல்டேஜ் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சியோமி Mi மிக்ஸ் 2எஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் 7.5 வாட்ஸ் அவுட்புட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 9 மற்றும் இதர மாடல்களுக்கு அதிகபட்சம் 10 வாட் வரையிலான அவுட்புட் வழங்குகிறது.



    சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சிறப்பம்சங்கள்:

    அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜரின் மேல்பக்கம் சிலிகான் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்துவித சாதனங்களுக்கும் பொருந்திக் கொள்ளும் வகையில், Qi தரத்திற்கான சப்போர்ட் கொண்டுள்ள Mi வயர்லெஸ் சார்ஜரில் உள்ள எல்.இ.டி. இன்டிகேட்டரை பார்த்தே பயனர்கள் தங்களது சாதனத்தின் சார்ஜிங் விவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

    மேலும் இதன் வயர்லெஸ் சார்ஜிங் தூரம் 4எம்.எம். வரை இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் கேசில் இருந்து எடுத்தாலும் சார்ஜ் ஆகும்ம். இத்துடன் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று பயனர்களின் சாதனங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய Mi வயர்லெஸ் சார்ஜரில் க்விக் சார்ஜ் 2.0 அல்லது க்விக் சார்ஜ் 3.0 அடாப்டர் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 7.5 வாட் அல்லது 10 வாட் திறன் வழங்குகிறது. இந்த சார்ஜரை வழக்கமான 5V/ 2A அல்லது 5V/ 2.4A உடன் இணைக்கும் போது 5வாட் திறன் வழங்கும்.



    சியோமி Mi வயர்லெஸ் சார்ஜரில் யு.எஸ்.பி. டைப்-சி இன்டர்ஃபேஸ் மற்றும் அதிகபட்சம் 40 டிகிரி வரையிலான வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது. புதிய சார்ஜருடன் யு.எஸ்.பி. டைப்-சி – யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்படுகிறது.

    சீனாவில் புதிய சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் விலை CNY 69 அதாவது இந்திய மதிப்பில் ரூ.721 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே விற்பனை துவங்கியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. #KeralaFloodRelief #ASUS



    கேரளாவில் வரலாறு காணாத பலத்த மழை, அம்மாநிலத்தில் பெருமளவு பொருட்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன். இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.

    அந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிறுவப்படுகின்றன.

    தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

    உதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார். #RaviShankarPrasad #Google



    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார்.

    இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்று பல்வேறு இதர திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும், என சுந்தர் பிச்சையிடம் தெரிவித்ததாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். 

    "கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் கூகுள் நிறுவன குழுவினருடன் சிறப்பான சந்திப்பு. இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்ற பல்வேறு திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் கேட்டுக் கொண்டேன்," என ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நவீன விவசாய முறை மற்றும் வானிலை குறித்த விவரங்களை இந்திய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூகுளிடம் கேட்டுக் கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு மூன்று நாட்கள் அலுவல் ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரவி சங்கர் பிரசாத், தொழில்நுட்பத் துறையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் டிஜிட்டல் பரிணாமத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
    எல்ஜி எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் அல்ட்ராகியர் கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் மானிட்டரில் அல்ட்ராவைடு 21:9 ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. #gamingmonitor



    எல்ஜி எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் அல்ட்ராகியர் கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மானிட்டரில் அல்ட்ராவைடு 21:9 ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும். முன்னதாக இந்த மானிட்டர் 2018 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    அல்ட்ராகியார் ஃபிளாக்ஷிப் மாடல் – 34GK950G நானோ ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் வருவதால், DCI-P3 கலர் ஸ்பேசில் 98 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளும். இத்துடன் NVIDIA G-SyncTM கிராஃபிக் பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால், கேமிங்கின் போதும் சீராக இயங்கும்.

    இந்த மானிட்டர் 34-இன்ச் டிஸ்ப்ளே, அல்ட்ராவைடு QHD 3440x1440 இமேஜ் ரென்டரிங் கொண்டுள்ளது. இதனால் கேமர்கள் தங்களுக்கான பிரத்யேக ஆம்பியன்ஸ் உருவாக்கிக் கொள்ள முிடயும். இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்பியர் லைட்டிங் ஆறு வெவ்வேறு நிறங்களுக்கான செட்டிங்களை கொண்டுள்ளது.
    சியோமி இந்தியா நிறுவனத்தின் Mi எல்இடி டிவி மாடல்கள் ஆறு மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #XIAOMI



    இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் Mi எல்இடி டிவி மாடல்கள் விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. 

    சியோமி Mi எல்இடி டிவி 4 55 இன்ச், Mi எல்இடி டிவி 4ஏ 32 இன்ச் மற்றும் Mi எல்இடி டிவி 4ஏ 43 இன்ச் மாடல்கள் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவை Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிரான்டாக இருக்கும் சியோமி Mi டிவி மாடல்களில் புதிதாக டிஜிட்டல் தரவுகள் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் சமீபத்தில் வைரல் ஃபீவர் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. மேலும் Mi டிவி மாடல்களுக்கென இரோஸ் நௌ தளத்துடன் இணைந்திருக்கிறது. அதன்படி ரூ.49 விலையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

    புதிய மைல்கல் சாதனையை Mi ப்ரியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். வன்பொருள் வடிவமைப்பு, ஸ்மார்ட் பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் மென்பொருள் சார்ந்த கூட்டணிகளை முடிவு செய்ய சில ஆண்டுகள் திட்டமிட வேண்டியிருந்தது. இதன் மூலம் ப்ரியர்களுக்கு சிறப்பான ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்க முடிகிறது. தற்சமயம் மிக குறுகிய காலக்கட்டத்தில் ஐந்து லட்சம் இந்தியர்கள் பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என சியோமி இந்தியா ஆன்லைன் விற்பனை பிரிவு தலைவர் ரகு ரெட்டி தெரிவித்தார்.
    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களது டேட்டா முழுமையாக அபேஸ் ஆகிவிடும். #WhatsApp


    வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் டிரைவில் உள்ள விவரங்களை தானாக பேக்கப் செய்யவில்லை எனில், அவை தானாக அழிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் உடன் மீடியாக்களை பேக்கப் செய்யாதவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. 

    கடந்த ஒருவருடமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களது டேட்டாவை பேக்கப் செய்யவில்லை எனில், அவை அனைத்து தானாக அழிக்கப்படலாம். மேலும், வாட்ஸ்அப் தகவல்களை பேக்கப் செய்ய கூகுள் டிரைவ் கணக்கில் சைன்-இன் செய்து ஒரு வருடமாக பேக்கப் செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் கூகுள் டிரைவ் பேக்கப் அழிக்கப்பட்டு விடும். வாட்ஸ்அப் விவரங்களை பேக்கப் செய்ய இறுதி நாள் நவம்பர் 12 ஆகும்.

    "ஒரு வருடத்திற்கும் அதிகமாக அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்அப் பேக்கப்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் இருந்து தானாக அழிக்கப்பட்டு விடும். இதை தவிர்க்க, வாட்ஸ்அப் தகவல்களை நவம்பர் 1, 2018க்குள் தானாக பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது,” என வாட்ஸ்அப் வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    மல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாயந்த செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அந்த வகையில் பலரும் தங்களது புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவில் பேக்கப் செய்துள்ளனர். கூகுள் டிரைவில் 15 ஜிபி அளவு இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படும் நிலையில், வாட்ஸ்அப் பேக்கப்கள் அதிகளவு கூகுள் டிரைவ் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

    வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் கூகுளுடன் இணைந்து வாட்ஸ்அப் பேக்கப் ஃபைல்களை கூகுள் டிரைவில் இலவசமாக பேக்கப் செய்ய இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தம் நவம்பர் 12-ம் தேதி முதல் செயல்பாட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் ஸ்டோரேஜ்-க்கான இலவச கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பெற பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் டேட்டாக்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.
    மத்திய அரசு விதித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அது மட்டும் முடியாது என வாட்ஸ்அப் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

    இந்தியா வந்திருந்த வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் சில தினங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த வாட்ஸ்அப் தற்சமயம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறோம், எனினும் குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


    கோப்பு படம்

    பயனரின் விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்பதால் அவற்றை அரசிடம் வழங்க முடியாது என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி சார்ந்த வல்லுநர்கள் கூறும் போது, பயனர்களின் சில விவரங்கள் மட்டும் ஆஃப்லைன் சேவை வழங்கும் நோக்கில் கேச் செய்யப்படுகிறது, எனினும் இவை அந்நிறுவன சர்வர்களில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் பயனரின் சாதனத்தில் ஸ்டோர் செய்யப்படுகிறது. மத்திய அரசு சார்பில் கேட்கப்படும் டீக்ரிப்ஷன் வழிமுறை வாட்ஸ்அப் மட்டுமின்றி கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன குறுந்தகவல் சேவைகளை முழுமையாக மாற்ற வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகள் டீப்ரிஷன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உலகில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்திய இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்து பண பரிமாற்ற வசதி, விளம்பரதாரர்களுக்கான சேவை வழங்குவது குறித்த பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. எனினும் இவற்றின் அறிமுக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    இந்தியாவில் ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிரீவியூ சலுகைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #JioGigafiber


    ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், சேவை இன்னும் முழுவீச்சில் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. எனினும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஜியோஃபைபர் பிரீவியூ சலுகை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்படும் போதும் இதேபோன்ற பிரீவியூ சலுகைகள் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் மூன்று மாத காலத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர்கள் ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 முன்பணம் செலுத்தி சேவைகளை பெறலாம். முதல் மூன்று மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சலுகைகளை பெற முடியும்.

    வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் அதிகளவு முன்பதிவு பெறும் நகரத்தில் சேவை முதலில் துவங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ டெலிகாம் சேவையில் ஆறு மாத காலம் இலவச பிரீவியூ சலுகை வழங்கப்பட்ட நிலையில், ஜிகாஃபைபர் சலுகையிலும் இலவச பிரீவியூ சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா மட்டுமின்றி கூடுதல் டேட்டா பெற டேட்டா டார்-அப் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்கள் அதிவேக பிராட்பேன்ட் சேவையை சீராக பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேட்டா டாப்-அப் சலுகையிலும் குறைந்தபட்சம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் டேட்டா டாப்-அப்களை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25 முறை பயன்படுத்த முடியும், இதனால் அதிகபட்சம் 1100 ஜிபி டேட்டா பெற முடியும். கடந்த வெளியான புகைப்படங்களின் படி பிரீவியூ சலுகை சார்ந்த விவரங்கள் தெரியவந்தது.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Zebronics #Bluetooth


    கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உபகரணங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் ஜெப்ரானிக்ஸ் தனது புதிய சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ப்ரிசம் என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரில் ஆர்.ஜி.பி. அம்சம் மற்றும் கேபாசிட்டிவ் டச் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை ஜெப்ரானிக்ஸ் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைத்துள்ளது. கேபாசிட்டிவ் டச் கன்ட்ரோல் இருவித அம்சங்களை வழங்குவதோடு மென்மையான RGB எல்.இ.டி. மின்விளக்கு மிருதுவாகவும் தெளிவான வடிவமைப்பு பார்க்க மிக எளிமையாக காட்சியளிக்கிறது.

    பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் வழங்கும் ஸ்பீக்கரை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு விளக்கு போன்று தெரிகிறது. புதிய ஸ்பீக்கர் கொண்டு அதிகாலை வேளைகளில் மங்களகரமான இசையைக் கேட்பது அல்லது மென்மையான RGB ஒளிக்கலவையை ரசிப்பத்துக் கொண்டே தொடங்கலாம். 



    மாலையில் களைப்பை போக்கி நிம்மதியான மனநிலை தேவைப்படும் போது ப்ரீஸ்ம் வயர்லெஸ் ஸ்பீக்கர், உங்கள் அறையில் புதிய அனுபவத்தைத் தரும் வகையில் மென்மையான LED விளக்குகளுடன் மனநிலையை மாற்றுவதற்கான வேலையைச் செய்கிறது. விளக்குகள் இரட்டை முறையிலோ, கைமுறை பயன்பாட்டிலோ அல்லது சிறந்த அமைப்பு அனுபவத்திற்காகத் தானியங்கி முறையிலும் வேலை செய்கிறது.

    LED நிறத்தை ஒரு க்ளிக் மூலம் மாற்றும் வசதி கொண்டுள்ள ப்ரிசம் ஸ்பீக்கரில் கேபாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது அல்லது ஒலியளவை மெதுவான நகர்வுடன் அதிகரிக்கவும் / குறைக்கவும் முடியும்.

    ப்ரிசம் ஸ்பீக்கரில் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது வயர்லெஸ் ஆப்ஷன் மூலம், உங்கள் பாடல்களை மொபைலில் இருந்து கேட்க முடியும். மைக்ரோ SD கார்டு மூலமாகவும் பாடல்களை இயக்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டைக் கேட்க AUX கேபிளைச் செருகலாம். கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும், பில்ட்-இன் FM ரேடியோ வசதியும் கொண்டுள்ளது.
    ×