என் மலர்
கணினி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள் வெளியாகியுள்ளது. #JioGigafiber #offer
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிராட்பேன்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.
முழுவீச்சில் சேவைகள் துவங்கப்படும் முன்பாகவே பிரீவியூ சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சலுகையின் படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு வேகத்தை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
எனினும், 100 ஜிபி டேட்டாவை ஒரே மாதத்திற்குள் பயன்படுத்திவிட்டால், பிரீவியூ சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது. பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தில் டேட்டா வேகத்தை பொருத்த வரை நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் 4K தரம் கொண்ட வீடியோக்களையும் ஸ்டிரீம் செய்து கண்டுகளிக்க முடியும். முன்பதிவு செய்யக்கோரும் வலைத்தளத்தில் ஜிகாபிட் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் போது விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாட முடியும்.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை பயன்படுத்த பாதுகாப்பு முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் ஜிகாஹப் ஹோம் சேவைக்கான நுழைவுத்தளமாக இருக்கும். முதற்கட்ட முன்பண கட்டணம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ மனி அல்லது பே.டி.எம். மூலம் செலுத்த முடியும். மொபைல் வயர்லெஸ் சேவையை போன்றே பிராட்பேன்ட் சேவைகளும் பிரீபெயிட் திட்டங்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
90 நாட்கள் பிரீவியூ திட்டம் நிறைவுற்றவுடன் வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். சேவையை தொடர விருப்பமில்லாதவர்கள் தங்களது சேவையை துண்டித்து, பாதுபாக்கு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #socialmedia
ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனம் அமேசான் எக்கோ போன்றே வேலை செய்யும்.
இருவித அளவுகளில் உருவாகி இருக்கும் ஃபேஸ்புக் போர்டல் சேவை முன்னதாக மே மாதத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது, எனினும் நம்பிக்கையில்லா காரணத்தால் தாமதமானதாக கூறப்படுகிறது.
பயன்படுத்தாத போது கேமரா லென்சை மறைக்க ஷட்டர் ஒன்றும் இந்த சாதனத்தில் வழங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஃபிரேமில் உள்ளவர்களை கண்டறிந்து பின் அவர்கள் அறையினுள் எங்கு சென்றாலும் பின்தொடரும். ஃபேஸ்புக் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து புதிய ஷட்டர் ஆப்ஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கோப்பு படம்
அமேசான் அலெக்சா வாய்ஸ் இன்டகிரேஷன் வசதியுடன் வரும் போர்டல் சாதனத்தில் பயனர்கள் இசையை அனுபவிப்பதோடு, வீடியோக்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடியும்.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்த சாதனத்தை தனது ஊழியர்களை வைத்து சில மாதங்களாக சோதனை செய்து வந்தது. பின் இந்த சாதனம் சில விற்பனையாளர்களிடமும் காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இரண்டு வேரியன்ட்களில் உருவாகி இருக்கும் போர்டல் சாதனத்தின் விலை 400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,894) மற்றொரு மாடல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,670) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஐஃபால்கான் பிரான்டு 32 இன்ச் டி.வி. மாடலில் ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியை உலகில் முதல் முறையாக வழங்கியுள்ளது. #smarttv
டி.சி.எல் நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. பிரான்டு ஆன ஐஃபால்கான் உலகில் முதல் முறையாக 32-இன்ச் (32F2A) ஹெச்.டி. ரெடி, கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி.யை ஏ.ஐ. அசிஸ்டண்ட் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.
ஐஃபால்கான் 32F2A டி.வி.-யில் மைக்ரோ டிம்மிங் மற்றும் வைட் எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரையில் நிறங்கள் பிரகாசமாகவும், இயற்கை நிறங்களை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கும். ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் இன்-பில்ட் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பொழுதுபோக்கு மற்றும் இதர விவரங்களை தேடுவது எளிமையாவதோடு வீட்டில் உள்ள மற்ற கனெக்ட்டெட் சாதனங்களை குரல் மூலம் இயக்க முடியும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 32-இன்ச் 32F2 மாடலை போன்றே டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஐஃபால்கான் 40F2A மற்றும் ஐஃபால்கான் 49F2A ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அக்டோபர் 2018-இல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி 32, 40 மற்றும் 49 இன்ச் தவிர, ஐஃபால்கான் நிறுவனம் 65 மற்றும் 75 இன்ச் டி.வி. மாடல்களை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
75 இன்ச் டி.வி. மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆடியோ அனுபம் சிறப்பாக இருக்கும் என ஐஃபால்கான் தெரிவித்துள்ளது. புதிய ஃபால்கன் 32F2A ஸ்மார்ட் டி.வி. விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரயிருக்கும் நிலையில், இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சாம்சங் இந்தியா நிறுவனம் உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Samsung #LED
உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீனை சாம்சங் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவ் எல்.இ.டி. என்றும் அழைக்கக் கூடிய ஸ்கிரீன் வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முதல் எல்.இ.டி. ஆகும்.
வீட்டினுள் பொழுதுபோக்கு இடைவெளியை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டும் இந்த எல்.இ.டி. வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கும்.

சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கும், தலைசிறந்த ஆடியோ மற்றும் வீடியோ தரவுகளை சூப்பர் பிரீமியம் திரையில் பார்க்க விரும்புவோரை குறிவைத்து புதிய எல்.இ.டி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரையால் மிகவும் நுணுக்கமான வீடியோ தரத்தை துல்லியமாக வழங்க முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
மெல்லிய வடிவமைப்பில் மாட்யூலர் ஃபார்மேஷன் தொழில்நுட்பம் மூலம் பொருத்தக்கூடிய வகையில், பயனர்கள் விரும்பும் படி ஸ்கிரீன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர் விரும்பும் படி திரையை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.
ஹெச்.டி.ஆர். பிக்சர் ரிஃபைன்மென்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் திரையில் வீடியோ பார்க்க நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும் என்றும் காட்சிகள் மிகத்துல்லியமாக தெரியும். திரையை சுற்றி நிலவும் வெளிச்சங்களால் காட்சியில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸ்-இல் 110-இன்ச் FHD, 130-இன்ச் FHD, 220-இன்ச் UHD மற்றும் 260-இன்ச் UHD அளவுகளில் கிடைக்கிறது. இந்த திரை 1,00,000-க்கும் அதிக மணி நேரங்கள் உழைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சாம்சங் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீன் அளவுகளுக்கு ஏற்ப விலை ரூ.1 கோடியில் துவங்கி அதிகபட்சம் ரூ.3.5 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சோனி நிறுவனம் பிரேவியா A9F 4K HDR OLED டி.வி. சீரிஸ் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Sony #smarttv
சோனி நிறுவனம் பிரேவியா A9F 4K HDR OLED டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரு அளவுகளில் அறிமுகமாகி இருக்கும் மாஸ்டர் சீரிஸ் மாடலில் புதிதாய் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை பிக்சர் பிராசஸர் X1 அல்டிமேட் வழங்கப்பட்டுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள ஆப்ஜக்ட் சார்ந்த சூப்பர் ரெசல்யூஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால், வீடியோ தரம் சிறப்பானதாக இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்.டி.ஆர். தொழில்நுட்பம் திரையில் வீடியோக்களை அதிகளவு உண்மையானதாக பிரதிபலிக்கும் என சோனி தெரிவித்துள்ளது.

சோனி பிரேவியா A9F (65″ மற்றும் 55″ ) 4K HDR OLED டி.வி. அம்சங்கள்:
- 55-இன்ச் / 65-இன்ச் 3840x2160 பிக்சல் 4K OLED TRILUMINOS H டிஸ்ப்ளே
- சூப்பர்பிட் 4K HDR, பிரெசிஷன் கலர் மேப்பிங், லைவ் கலர் தொழில்நுட்பம்
- பிக்சல் கான்ட்ராஸ் பூஸ்டர், 80 லட்சம் செல்ஃப் இலுமினேட்டிங் பிக்சல்கள்
- OLED-க்கான சோனி-ஒரிஜினல் கன்ட்ரோலர்
- பிக்சர் பிராசஸர் X1 அல்டிமேட்: ஆப்ஜக்ட் சார்ந்த சூப்பர் ரெசல்யூஷன்
- ஆப்ஜக்ட் சார்ந்த HDR ரீமாஸ்டர், சூப்பர் பிட் மேப்பிங் 4K HDR
- டூயல் டேட்டாபேஸ் பிராசஸிங்
- அகௌஸ்டிக் சர்ஃபேஸ் ஆடியோ பிளஸ்
- 16 ஜிபி மெமரி
- நெட்ஃப்ளிக்ஸ் கேலிபிரெட்டெட் மோட்
- கேல்மேன் ரெடி
- ஹெச்.டி.எ.ம்.ஐ – 4, வைபை 802.11 ac, ப்ளூடூத் 4.2, ஈத்தர்நெட்
- குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்கிரீன் மிரரிங்
- ஆன்ட்ராய்டு டிவி
சோனி A9F BRAVIA OLED 55 இன்ச் மற்றும் 65 இன்ச் OLED டிவி மாடல்களின் விலை முறையே ரூ.3,99,990 மற்றும் ரூ.5,59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி முதல் துவங்குகிறது.
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏ.கே.ஜி. ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Wireless #earphones
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏ.கே.ஜி. ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்போன்கள் பேலன்ஸ் செய்யப்பட்ட ஸ்டூடியோ தர ஆடியோ அனுபவத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏ.கே.ஜி. N700NC மாடல் இசை விரும்பிகளுக்கு ஏற்றதாக ஸ்டூடியோ தர ஆடியோ வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் N700NC ஹெட்போன் கொண்டு பயனர்கள் வெளிப்புற சத்தம் எந்தளவு தங்களுக்கு கேட்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
இதனுடன் அழைப்புகளை மேற்கொள்ளும் போது நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஆம்பியன்ட் அவேர்னஸ் போன்றவற்றை சம அளவில் இயக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே.ஜி. Y500 மாடலில் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு ப்ளூடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்துக் கொள்ள வழி செய்கிறது. ஹெட்போன்கள் எடுக்கப்பட்டதும், அவை தானாக ஆடியோவை நிறுத்தி விடும் (pause), பின் மீண்டும் காதில் வைத்ததும் ஆடியோ தானாக இயங்க ஆரம்பிக்கும்.
ஏ.கே.ஜி. வயர்லெஸ் Y100 இயர்போன் குறைந்த எடையில் அதிக உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை க்ளிக் மூலம் ஆம்பியன்ட் அவேர் அம்சத்தை இயக்கும் வசதி கொண்டுள்ளது. Y500 மற்றும் Y100 வயர்லெஸ் ஹெட்போன்கள் விலை அமெரிக்காவில் முறையே 149.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.10,810 என்றும் 99.95 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
N700NC விலை 349.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.25,320 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஹெட்போன்களும் அமெரிக்காவில் ஏ.கே.ஜி. அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் மற்றும் சாம்சங் வலைத்தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Wireless #earphones
ஐபோன் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleWatch
இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டதைப் போன்றே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். + செல்லுலார் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் 3 புதிய விலை 279 டாலர்கள் முதல் துவங்குகிறது. சில தினங்களுக்கு முன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதும், ஆப்பிள் வாட்ச் 3 ஜி.பி.எஸ். விலை அதிகரித்தது. விலை குறைப்புக்கு பின் ஆப்பிள் வாட்ச் 3 விலை ரூ.28,900 முதல் துவங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜி.பி.எஸ். 38எம்.எம். மாடல் ரூ.32,380 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ.3,480 குறைக்கப்பட்டு ரூ.28,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜி.பி.எஸ். + செல்லுலார் 38 எம்.எம். மாடல் ரூ.1,180 குறைக்கப்பட்டு ரூ.37,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் 399 டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். + செல்லுலார் மாடல் 499 டாலர்கள் முதல் துவங்குகிறது. செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய ஆப்பிள் வாட்ச் 4 விலை மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்கள், அவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent #AppleWatch4
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகி இருக்கிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
புதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நுகர்வோர் நேரடியாக பயன்படுத்தும் வகையில் இ.சி.ஜி. சேவை முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் 4 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.28,686) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.35,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இந்த நாடுகளில் செப்டம்பர் 14-ம் தேதி முதல் செய்யப்பட்டு விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குகிறது. புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பழைய ஆப்பிள் வாட்ச் 3 விலை 279 டாலர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleWatch4
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் ஹெச்.டி., 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 50 இன்ச் ஃபுல் ஹெச்.டி. வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஆப்டொய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் வயர்லெஸ் கன்ட்ரோல் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை டி.வி.யுடன் எளிமையாக இணைத்து, முழு டி.வி. மற்றும் கேம்களை விளையாட முடியும்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:
- 32 இன்ச் (1366x768 பிக்சல்) ஹெச்.டி. ரெடி
- 40 இன்ச் / 50 இன்ச் (1920x1080) ஃபுல் ஹெச்.டி. டைரக் எல்.இ.டி. பேனல்
- குவாட்-கோர் பிராசஸர் டூயல் கோர் GPU
- 1 ஜிபி ரேம்
- 5.5 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு டி.வி. சார்ந்த ஆன்ட்ராய்டு 7.0
- வைபை 802.11b/g/n, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட் போர்ட்
- 24W இன்பில்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் வேரியன்ட் விலை ரூ.13,999 என்றும், 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 50 இன்ச் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களுக்கென பிரத்யேக ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SnapdragonWear3100
குவால்காம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ஸ்மார்ட்வாட்ச்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அல்ட்ரா-லோ பவர் சிஸ்டம் சார்ந்த வடிவமைப்பு அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அதிக இன்டராக்ஷன்களை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் சிப் சீராக வேலை செய்ய, கூகுள் நிறுவனத்தின் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக குவால்காம் தெரிவித்துள்ளது.
மேலும் ஃபாஸில் குழுமம், லூயிஸ் வியூட்டன் மற்றும் மான்ட்பிளாக் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களில் தனது சிப்கள் வழங்கப்பட இருப்பதை குவால்காம் உறுதி செய்துள்ளது.

குவால்காம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸரில் குவாட்கோர் ஏ7 பிராசஸர்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., அல்ட்ரா-லோ பவர் கோ-பிராசஸர் QCC1110 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கோ-பிராசஸர் மிகவும் சிறியதாகவும், குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கும் வியர் 3100 பிராசஸரில் புதிய டி.எஸ்.பி. ஃபிரேம்வொர்க் சப்போர்ட் வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த தலைமுறை சென்சார் பிராசஸிங் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும். புதிய வியரபிள் பவர் மேனேஜ்மென்ட் சப்-சிஸ்டம் வழங்கபப்ட்டுள்ளதால் குறைந்த மின்சாரம் மற்றும் அதிக இன்டகிரேஷன் உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்யும்.

ஸ்னாப்டிராகன் வியர் 3100 (MSM8909w / APQ8009w) சிறப்பம்சங்கள்:
- அதிகபட்சம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
- QCC1110 கோ-பிராசஸர் மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மற்றும் பிரத்யேக ஸ்போர்ட் மற்றும் வழக்கமான வாட்ச் மோட்களை சப்போர்ட் செய்கிறது. பிரசாஸருடன் இணைந்தும் தனியாகவும் இயங்கும்.
- அட்ரினோ 304 GPU: OpenGL ES 3.0, அணியக்கூடிய சாதனங்களில் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பவர்
- 400 MHz LPDDR3, eMMC 4.5, இது 4×4 மற்றும் 8×8 போன்ற அமைப்புகளில் சப்போர்ட் செய்யும்
- அதிகபட்சம் 640x480 டிஸ்ப்ளேவினை 60fps, கொண்டுள்ளது. அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது, MIPI மற்றும் SPI சப்போர்ட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடெம், அதிகபட்சம் 1 Gbpsடவுன்லோடு வேரம் மற்றும் to 150 Mbps வேகத்தில் அப்லோடு செய்யும் வசதி
- WCN3620 – லோ-பவர் வைபை மற்றும் ப்ளூடூத், அணியக்கூடிய சாதனங்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது 802.11b/g/n (2.4GHz), குவால்காம் லொகேஷன் தொழில்நுட்பம், யுஎஸ்பி 3.0, ப்ளூடூத் 4.1 + ப்ளூடூத் லோ எனெர்ஜி, இன்டகிரேட்டெட் என்.எஃப்.சி. மற்றும் NXP சப்போர்ட்
- குவால்காம் நாய்ஸ் மற்றும் எக்கோ கான்செலேஷன், குவால்காம் வாய்ஸ் சூட், குவால்காம் வாய்ஸ் ஆக்டிவேஷன், குவால்காம் அகௌஸ்டிக் ஆடியோ கோடெக் மற்றும் ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபையர்
- ஜென் 8C சாட்டிலைட்: ஜென் 8C சாட்டிலைட்: ஜி.பி.எஸ்., க்ளோனஸ், பெய்டௌ, கலீலியோ, டெரெஸ்ட்ரியல்: வை-பை, செல்லுலார், PDR3.0
ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் வேலை செய்யும்படி மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2018 நான்காவது காலாண்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாதனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதிய சர்ஃபேஸ் சாதனம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Microsoft
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போதைய சர்ஃபேஸ் நோட்புக் மாடல்களுக்கு புதிய சர்ஃபேஸ் ப்ரோ மற்ரும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பாக்கெட் சர்ஃபேஸ் சாதனம் ஆன்ட்ரோமெடா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக மலிவு விலை சர்ஃபேஸ் கோ டேப்லெட் மாடலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஹார்டுவேர் சார்ந்த அப்கிரேடுகளை எதிர்பார்க்கலாம்.
அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ மாடலில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய பிராசஸர்கள், பெரிய பேட்டரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான சர்ஃபேஸ் லேப்டாப் மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டூயல்-டிஸ்ப்ளே சர்ஃபேஸ் சாதனத்தை தனது புதிய நோட்புக் மாடல்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இரண்டு திரைகளுடன் இந்த சாதனம் மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
லெனோவோ நிறுவனத்தின் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Lenovo
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட் பேன்ட் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 0.96 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் பேன்ட் உடன் மேம்படுத்தப்பட்ட லெனோவோ லைஃப் ஃபிட்னஸ் ஆப் வழங்கப்படுகிறது. இந்த செயலியில் உணவு கட்டுப்பாடு குறித்த விவரம், உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட விளையாட்டுக்கள் சார்ந்த பரிந்துரை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த செயலியில் ரியல் டைம் டிராக்கர் இருப்பதால், பிழைகளை சரி செய்து நடவடிக்கைகளுக்கான முடிவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் சிறப்பம்சங்கள்
- 0.96 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
- இதய துடிப்பு, நடை, தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
- கால் ரிமைன்டர்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன், சைலன்ட் அலாரம்
- ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் டிராக்கர், கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
- வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
- ப்ளூடூத்
- ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் வேலை செய்யும்
- பத்து நாட்கள் வரையிலான பேட்டரி
லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் ஃபிட்னஸ் பேன்ட் பிளாக், ரெட் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட் பேன்ட் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






