என் மலர்tooltip icon

    கணினி

    டி.சி.எல். நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு QLED டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. #smarttv



    டி.சி.எல். எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு QLED டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. டி.சி.எல். 65X என அழைக்கப்படும் முதல் டி.வி. மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் மற்றும் 4K UHD டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஆன்ட்ராய்டு டி.வி.யில் 4K UHD 3840x2160 பிக்சல் மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே காட்சிகளை மிக தெளிவாகவும், இயற்கை நிறங்களை பிரதிபலிக்கும் வசதி கொண்டுள்ளது. குவான்டம் டாட் QLED தொழில்நுட்பம் நிறங்களை இயற்கையாக பிரதிபலிக்கச் செய்கிறது. 

    டி.சி.எல். புதிய டி.வி. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. டி.சி.எல். 65X4 மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், டால்பியின் மேம்படுத்தப்பட்ட டி.டி.எஸ். (DTS) போஸ்ட் பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. 64-பிட் குவாட்-கோர் சி.பி.யு. மற்றும் டூயல்-கோர் ஜி.பி.யு., 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.



    இத்துடன் வாய்ஸ் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், டி.வி.யை குரல் மூலம் எளிமையாக இயக்க முடியும். இத்துடன் பில்ட்-இன் குரோம்கேஸ்ட் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், விரும்பிய கேம்கள், வீடியோ மற்றும் மொபைல் போனில் உள்ள செயலிகளை காஸ்ட் செய்து கொள்ள முடியும்.

    டி.சி.எல். நிறுவனம் புதிய டி.வி.யுடன் டி.சி.எல். எஸ்6500 அறிமுகம் செய்துள்ளது. இதில் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மற்றும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் IPQ இன்ஜின், ஹெச்.டி.ஆர். 10 சப்போர்ட், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்கேஸ்ட் மற்றும் வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லைட், 1.5 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    டி.சி.எல். 65X4 அக்டோபர் 25-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும், பின் இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது, எனினும் அமேசானில் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் இந்த டி.வி. ரூ.1,09,990 விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    இன்ஸ்டாகிராம் சேவையில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அந்நிறுவனம் மேலும் சில அம்சங்களை சோதனை செய்கிறது. #instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை இன்ஸ்டா பயனர்களை மற்றவர்களுடன் இணைய வைக்கும் வகையில் இருக்கிறது.

    இரண்டு அம்சங்களில் ஒன்றாக நேம்டேக்ஸ் (nametags) இருக்கிறது. இந்த அம்சம் பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய கிராஃபிக்ஸ் படங்கள் ஆகும். இது கியூ.ஆர். கோடுகளை போன்று வேலை செய்கின்றன. செயலியினுள் இவற்றை ஸ்கேன் செய்ததும், பயனர் குறிப்பிட்ட பயனரின் ப்ரோஃபைலுக்கு நேரடியாக செல்ல முடியும்.



    நேம்டேக்ஸ்-களை பல்வேறு விதங்களில் மாற்றிக் கொள்ள முடியும். பயனர்கள் நேம்டேக் நிறம், எமோஜி அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம். பயனர்கள் நேம்டேக்ஸ்-ஐ இன்-ஆப் கேமரா மூலம் ஸ்கேன் செய்யவோ அல்லது நேம்டேக் வியூ பட்டனை கிளிக் செய்து பெற முடியும். இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்கனவே நேம்டேக்ஸ் இருக்கிறது.

    மற்றொரு அம்சம் டைரக்டரி போன்று வேலை செய்கிறது. இது பயனர்களை அவரவர் படித்த கல்லூரிகளின் அடிப்படையில் பிரிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அவர்களது கல்லூரி தோழமைகளுடன் இணைப்பில் இருக்க முடியும். மாணவர்கள் தங்களது நண்பர்களை இன்ஸ்டாகிராமில் கண்டறிய இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். 



    துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் பயனர்களை கல்லூரி கம்யூனிட்டி ஒன்றில் இணையக் கோரும், பின் மற்ற மாணவர்களுடன் இணைக்கும் ஆப்ஷனை வழங்கும். எனினும் கம்யூனிட்டியை பயனர் தேர்வு செய்தால், அவர்களது பட்டப்படிப்பு ஆண்டு அவர்களின் ப்ரோஃபைலில் சேர்க்கப்படும். மேலும் மாணவர்களை அவரவர் படிக்கும் வகுப்புவாரியாகவும் பிரிக்கிறது.

    பயனர்கள் தங்களது நண்பர்களை வீடியோவில் டேக் செய்யும் ஆப்ஷனையும் இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. போட்டோக்களில் இருப்பதை போன்று இல்லாமல், புதிய அம்சம் டேக் செய்யப்பட்ட அனைவரையும் காண்பிக்கும் தனி பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

    தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சில பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #earphones #wireless

     

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெறும் 5 கிராம் எடை கொண்டிருக்கிறது, மேலும் இது 3.5 மணி நேரங்களுக்கு பிளே டைம் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேஸ் மூன்று சார்ஜ்களை தாங்கும் என்பதால், 16 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. 

    நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்களில் நெக்பேன்ட் வடிவமைப்பு, 10 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள பில்ட்-இன் வைப்ரேஷன் அம்சம் அழைப்புகள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஸ்மார்ட் மேக்னெடிக் இயர்பட்கள் அழைப்புகள் மற்றும் இசையை இயக்குவது என தனித்தனியாக பிரிக்கிறது. 

    இரண்டு மாடல்களிலும் ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.  



    நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன் சிறப்பம்சங்கள்:

    - ப்ளூடூத் 4.2 மற்றும் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ள மல்டிபாயின்ட் கனெக்ஷன்
    - ஹெச்.டி. ஆடியோ அனுபவம்
    - காந்த சக்தி அம்சங்கள்: அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, இசையை இயக்குவது
    - பவர் ஆன்/ஆஃப், அழைப்புகளை ஏற்பது/நிராகரிப்பது, வால்யூம் கன்ட்ரோல், டிராக் கன்ட்ரோல் பட்டன்கள்
    - 3 இயர்பட்கள் (S, M, L) மற்றும் 3 ஜோடி எர்கோனோமிக் இயர்டிப்கள் (S, M, L)
    - ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் பாதுகாப்பு
    - ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி ஆடியோ பிளேபேக்



    நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:

    - ப்ளூடூத் 5.0
    - ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட் (IPX4)
    - 3 இயர்பட்கள் (S, M, L)
    - இயர்பட் அளவு 22.3 x 14 எம்.எம்., சார்ஜிங் கேஸ் 100 x 22எம்.எம்.; எடை: 5 கிராம் ஒரு இயர்பட்
    - யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் கேஸ்
    - ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மணி நேர டாக்/மியூசிக் டைம்
    - அதிகபட்சம் 70 மணி நேர ஸ்டான்ட்-பை டைம்
    - போர்டபிள் சார்ஜிங்
    - 14 மணிநேர பிளேபேக் அல்லது 16 மணி நேர டாக்டைம்

    நோக்கியா ட்ரூ இயர்பட்ஸ் விலை 129 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,960 என்றும் ப்ரோ வயர்லெஸ் இயர்போன் விலை 69 யூரோ இந்திய மதிப்பில் ரூ.5,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 என இந்த வாட்ச் அழைக்கப்படுகிறது. #LGWatchW7



    எல்.ஜி. நிறுவனம் வி40 தின்க்யூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. 

    எல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக அமைந்திருக்கும் டபுள்யூ7 கூகுளின் வியர் ஓ.எஸ். மற்றும் வழக்கமான கடிகாரங்களில் உள்ளதை போன்ற முள் அமைப்பு கொண்டுள்ளது. குவார்ட்ஸ் அசைவுகளுடன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சோப்ராட் எஸ்.ஏ. உடன் இணைந்து எல்.ஜி. உருவாக்கியிருக்கிறது. இதில் ஆல்டிமீட்டர், பாரோமீட்டர், ஸ்டாப்வாட்ச், டைமர் மற்றும் காம்பஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது.

    வழக்கமான பயன்பாடுகளில் இரண்டு நாட்கள் வரையிலும், அனலாக்-ஒன்லி (analog-only) மோடில் வைத்தால் மூன்று முதல் அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் அம்சங்களை டிசேபிள் செய்த நிலையில், 100 நாட்கள் முதல் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இயங்கும்.



    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 360x360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
    - 768 எம்.பி. LPDDR3 ரேம்
    - 4 ஜி.பி. eMMC
    - கூகுளின் வியர் ஓ.எஸ்.
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
    - அசைவுகள்: 2 ஹேன்ட்ஸ் குவார்ட்ஸ் மூவ்மென்ட் / மைக்ரோ கியர்பாக்ஸ்
    - புளூடூத் 4.2 LE, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - சென்சார்கள்: 9-ஆக்சிஸ் (கைரோ/ அக்செல்லோமீட்டர்/ காம்பஸ்), பிரெஷர் சென்சார்
    - 240 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 கிளவுட் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான 22 எம்.எம். வாட்ச் பேன்ட்களுடன் பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 விலை 450 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.33,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ப்ரோ 6, சர்ஃபேஸ் லேப்டாப் 2, சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 மற்றும் புதிய சர்ஃபேஸ் ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Microsoft



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் ப்ரோ 6, சர்ஃபேஸ் லேப்டாப் 2, சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 மற்றும் புதிய சர்ஃபேஸ் ஹெட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    சர்ஃபேஸ் ப்ரோ 6 மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் குவாட் கோர் பிராசஸர்களுடன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள் சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    சர்ஃபேஸ் லேப்டாப் 2 மாடலில் 8-ம் தலைமுறை இன்டெல் குவாட் கோர் பிராசஸர்களுடன் பிளாட்டினம், பர்கன்டி மற்றும் கோபால்ட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் 14.5 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் வேகமான மற்றும் சத்தமில்லா டைப்பிங் அனுபவம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 6 (2018) சிறப்பம்சங்கள்

    - 12.3 இன்ச் 2736x1824 பிக்சல் 3:2 பிக்சல் சென்ஸ் 10 பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - 8th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், UHD கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. அல்லது 16 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. (எஸ்.எஸ்.டி)
    - 8.0 எம்.பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி
    - 5.0 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 1080p வீடியோ பதிவு செய்யும் வசதி
    - வைபை, ப்ளூடூத், ஃபுல்-சைஸ் யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர், மினி டிஸ்ப்ளே போர்ட்
    - 1.6W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ பிரீமியம், ஸ்டீரியோ மைக்ரோபோன்
    - அதிகபட்சம் 13.5 மணி நேர வீடியோ பிளேபேக்



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 2 சிறப்பம்சங்கள்

    - 13.5 இன்ச் 2256x1504 பிக்சல், பிக்சல் சென்ஸ் 10 பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 8th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், UHD கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. அல்லது 16 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. (எஸ்.எஸ்.டி)
    - விண்டோஸ் 10
    - 720 பிக்சல் ஹெச்.டி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ மைக்ரோபோன், ஆம்னிசோனிக் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம்
    - வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர், மினி டிஸ்ப்ளே போர்ட், சர்ஃபேஸ் கனெக்ட்
    - அதிகபட்சம் 14.5 மணி நேர வீடியோ பிளேபேக்

    சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 ஆல்-இன்-ஒன் பி.சி. 50% அதிக கிராஃபிக்ஸ் செயல்திறன், 28" பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி.-சி சப்போர்ட், எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் பில்ட்-இன் கேமிங்-கிளாஸ் செயல்திறன் கொண்டுள்ளது. இந்த கம்ப்யூட்டருடன் சமீபத்திய சர்ஃபேஸ் பென் சாதனத்துடன் வருகிறது. புதிய சர்ஃபேஸ் பென் டில்ட் ஸ்டேபிலிட்டி மற்றும் 4096 பிரெஷர் கொண்டுள்ளது.



    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஸ்டூடியோ 2 சிறப்பம்சங்கள்

    - 28 இன்ச் 4500x3000 பிக்சல், பிக்சல்சென்ஸ் மல்டி-டச் 3:2 டிஸ்ப்ளே
    - இன்டெல் கோர் 7th Gen i7-7820HQ பிராசஸர்
    - NVIDIA GeForce GTX 1060 6 ஜி.பி. GDDR5 கிராஃபிக்ஸ் / GTX 1070 8 ஜி.பி. GDDR5 கிராஃபிக்ஸ்
    - 16 ஜி.பி. அல்லது 32 ஜி.பி. ரேம்
    - 1000 ஜி.பி. அல்லது 2000 ஜி.பி. சாலிட்-ஸ்டேட் டிரைவ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - சர்ஃபேஸ் பென், ஜீரோ கிராவிட்டி ஹின்ஜ்,, TPM 2.0 சிப்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ஸ்டீரியோ 2.1 ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், டூயல் மைக்ரோபோன்கள்
    - 4 x யு.எஸ்.பி. 3.0, ஃபுல்-சைஸ் எஸ்.டி. கார்டு ரீடர், 1 x யு.எஸ்.பி.-சி, 1 ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட்
    - வைபை, ப்ளூடூத், எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் பில்ட்-இன்



    புதிய சர்ஃபேஸ் ஹெட்போன்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மற்றும் ஸ்மார்ட் ஹெட்போன்களாக இருக்கின்றன. இதில் தரமான ஆடியோ மற்றும் 40 எம்.எம். ஃப்ரீ எட்ஜ் டிரைவர், ஹேன்ட்ஸ்-ஃப்ரீ காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நாய்ஸ் கான்செலேஷன், ஆட்டோமேடிக் பாஸ் மற்றும் பிளே அம்சம் கொண்டுள்ளது.

    இத்துடன் பில்ட்-இன் கார்டனா டிஜிட்டல் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் யு.எஸ்.பி.-சி கனெக்டர் மூலம் சார்ஜிங் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ கனெக்டர் உள்ளிட்டவை கொண்டுள்ளது. இதன் பேட்டரி 15 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் சென்னையில் நடத்திய கேமிங் எக்ஸ்போ கண்காட்சி கேமிங் பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. #Zebronics #gaminglife



    ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உதிரிபாகங்கள், சவுண்ட் சிஸ்டம், லைஃப்ஸ்டைல்/மொபைல் பாகங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை ஃபீனிக்ஸ் கேமிங்க் எக்ஸ்ஃபோ 18 எனும் நிகழ்ச்சியில் செப்டம்பர் 28 முதல் 30வரை இடம்பெறச் செய்திருந்தது. 

    இந்த கேமர்ஸ் டிரீம் நிகழ்ச்சியில் சேசிஸ், பவர் சப்ளை, ஹெட்போன்ஸ், கீ போர்டுகள், மவுஸ் மற்றும் பல்வேறு இதர சாதனங்கள் சிறப்பு விலையில் இடம்பெற்றிருந்தது. 

    சிறப்பு கட்டண பொருட்களில் மிகவும் வினோதமான அமைப்புகள் அதாவது சேசிஸில் உறுதியான கண்ணாடி, ஆர்.ஜி.பி. மின்விளக்குகள் உடன் கொண்ட மின்விசிறிகள் விற்பனை செய்யப்பட்டன.



    பொருட்களை வாங்குவதற்கு முன் அதைத் தொட்டுப்பார்த்து, உணர்ந்து அதனை அனுபவிக்கும் வசதியை இந்த நிகழ்ச்சி கேமர்களுக்கு வழங்கியது. 

    இதேபோன்று சிறப்புக் கட்டண விளையாட்டுப் பொருட்களை 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி விற்பனை செய்தபோது அது சந்தையில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.

    கேமிங்க் எக்ஸ்ஃபோ விழாவில் பங்கேற்று உரையாற்றிய ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குனர் ராஜேஷ் தோஷி, "இந்த எக்ஸ்ஃபோதான் விளையாட்டு வர்த்தகத்தினை புரிந்துகொள்ள ஒரு சரியான மற்றும் சுவாரஸ்யமான வழியாகும். எங்களது சிறப்புக் கட்டண பொருட்களில் பல்விதமான விளையாட்டுப் பொருட்களின் தயாரிப்புகள் இந்தியாவிலிருந்து வந்திருப்பினும் அவைகளை மேலை நாட்டு தயாரிப்புகளுக்குச் சமமாக தரம், கட்டமைப்பு மற்றும் கலையுணர்வினைக் கொண்டுள்ளது" என கூறினார்.
    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். தளத்தில் விளம்பரங்கள் தோன்ற இருப்பதாகவும், இதற்கான சோதனை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரியான் ஆக்டன் ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் பிரபல செயலியில் விளம்பரங்களை வழங்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் திட்டமிட்டு இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில், செயலியை கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், செயலியில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து @WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விளம்பரங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தோன்றும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் ஸ்டோரீஸ் அம்சத்தில் விளம்பரங்கள் தோன்றுகின்றன. எனினும் இந்த விளம்பரங்கள் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    வாட்ஸ்அப் செயலி முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதால், ஃபேஸ்புக்கால் பயனர் விவரங்களை அறிந்து கொள்ள முடியாது. எனினும், வாட்ஸ்அப் நம்பர்களுடன் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பயனர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்க முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஐபோன் மாடல்களில் இதற்கான அப்டேட் வரும் மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் வெளியான தகவல்களில் விளம்பரம் சார்ந்த வியாபாரத்திற்கு வாட்ஸ்அப் மாற இருப்பதாக கூறப்பட்டது. 

    வாட்ஸ்அப் செயலியிலின் ஸ்டேட்டல் பகுதியில் தோன்றும் விளம்பர அமைப்பு முற்றிலுமாக பேஸ்புக் மூலம் இயங்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் போன்று அனைத்து தளங்களிலும் விளம்பரங்களை புகுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலர் மேட் இடிமா தெரிவித்துள்ளார்.
    ஃபேஸ்புக் போஸ்ட்களில் மியூசிக் சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த அம்சம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் புகைப்படங்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாகவும், முதற்கட்டமாக இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இதே அம்சம் போட்டோ மற்றும் வீடியோ போஸ்ட்களில் பாடல்களை சேர்க்கக்கோரும் புதிய ஆப்ஷன் ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஸ்டோரி மற்றும் நியூஸ் ஃபீட் போஸ்ட்களில் வழங்கப்பட இருக்கிறது.

    ஃபேஸ்புக்கில் முதற்கட்டமாக போட்டோ அல்லது வீடியோவை அப்லோடு செய்ய வேண்டும், இனி ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து அங்கு இருக்கும் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான இசையை தேர்வு செய்ய வேண்டும். இசையை தேர்வு செய்த பின், ஃபேஸ்புக் குறிப்பிட்ட பாடலை லோடு செய்யும்.



    அடுத்து பாடலில் உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இந்த போஸ்ட்டில் பாடல் தலைப்பு மற்றும் பாடியவர் விவரம் போஸ்ட்டில் ஸ்டிக்கர் வடிவில் இடம்பெற்று இருக்கும்.

    லிப் சின்க் லைவ் மற்றும் 360 கோணங்களில் உள்ள வீடியோக்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்குவதற்கு என ஃபேஸ்புக் நிறுவனம் இசைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு அதிகப்படியான விருப்பங்களை வழங்க முடியும்.

    எனினும் புதிய அம்சம் தற்சமயம் வரை குறுகிய எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் விரைவில் மற்ற பகுதிகளிலும் அதிகளவு பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    சியோமி நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #MiTV4APro #MiTV4Pro



    சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi டி.வி. 4சி ப்ரோ, Mi டி.வி. 4ஏ ப்ரோ மற்றும் Mi டி.வி. 4 ப்ரோ ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    மூன்று புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களிலும் பேட்ச்வால் டி.வி. அனுபவம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு டி.வி. மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால் புதிய டி.வி.க்களில் கேம் மற்றும் செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியும். 

    இத்துடன் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், மொபைலில் உள்ள தரவுகளை Mi டி.வி.யில் கண்டுகளிக்க முடியும். ப்ளூடூத் Mi ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் வசதி இருப்பதால் ஆன்லைன் செயலிகளில் விருப்பமான தரவுகளை மிக எளிமையாக தேடி பார்க்கலாம்.

    இம்முறை பேட்ச்வால் அம்சத்தில் ஜியோசினிமா, இரோஸ் நௌ, ஹூக் மற்றும் எபிக் விரைவில் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவை வழங்கப்படுகறது. புதிய பேட்ச்வால் அனைத்து Mi டி.வி. மாடல்களிலும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ (32) சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
    - மாலி-450 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
    - வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
    - MPEG1/2/4, REAL, H.265, H.264 வசதி
    - 2 x 10 வாட் ஸ்பீக்கர்கள்
    - ஸ்டீரியோ, டி.டி.எஸ்.



    சியோமி Mi டி.வி. 4ஏ ப்ரோ (49) சிறப்பம்சங்கள்:

    - 49 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
    - மாலி-450 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
    - வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
    - MPEG1/2/4, REAL, H.265, H.264 வசதி
    - 2 x 10 வாட் ஸ்பீக்கர்கள்
    - ஸ்டீரியோ, டி.டி.எஸ்.



    சியோமி Mi டி.வி.4 ப்ரோ (55) சிறப்பம்சங்கள்:

    - 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
    - மாலி-டி830 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
    - வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி, யு.எஸ்.பி. 3.0 x 2, யு.எஸ்.பி. 2.0 x1, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
    - டால்பி பிளஸ் டி.டி.எஸ். சினிமா ஆடியோ

    சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ (32) மற்றும் Mi டி.வி. 4ஏ ப்ரோ (49) விலை முறையே ரூ.14,999 மற்றும் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் அக்டோபர் 9-ம் தேதி துவங்குகிறது. Mi டி.வி. 4 ப்ரோ (55) மாடல் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 10-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் Mi வலைத்தளஙங்களில் நடைபெற இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. #Apple
     


    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஏப்ரல் 1976-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உருவாகி வருகின்றன.

    இந்த நிலையில் இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. கலிபோர்னியாவில் மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் இருந்த இந்த கம்ப்யூட்டர் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    அதை ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தனர். தொடக்கத்தில் இந்த கம்ப்யூட்டர் 666.68 அமெரிக்க டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.



    ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக்கும் இணைந்து மொத்தம் 200 ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை வடிவமைத்தனர். இவற்றில் 175 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது ஒன்றுதான் ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்த கம்ப்யூட்டர் ஜூன் 2018-இல் மீண்டும் சீராக இயங்கும் நிலைக்கு சரி செய்யப்பட்டது. இந்த பணியினை ஆப்பிள் 1 வல்லுநரான கோரி கோஹென் மேற்கொண்டார். தற்சமயம் ஏலத்தில் விற்பனையாகி இருக்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சீராக வேலை செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

    மற்ற ஆப்பிள் 1 போர்டுகளை போன்று இல்லாமல், ஏலத்தில் விற்பனையான போர்டில் எவ்வித மாறுதல்களும் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் இதன் ப்ரோடோடைப் பகுதி பயன்படுத்தாமல், சுத்தமாக இருக்கிறது.
    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #Jio



    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. போட்டி நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை குறைத்தும், ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளில் கூடுதல் பலன்களை அறிவித்து வருகின்றன.

    புதிய சலுகை மட்டுமின்றி நாட்டில் 4ஜி சேவை பயன்பாடும் வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிகமுக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில், மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே 5ஜி சேவைகளையும் முதலில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 



    இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    “5ஜி-க்கு தேவையான எல்.டி.இ. நெட்வொர்க் ஜியோவிடம் தயார் நிலையில் இருக்கிறது, மேலும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆறு மாதங்களில் வழங்க முடியும்,” என பெயர் அறியப்படாத அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எனினும் இதை செயல்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால், புதிய தொழில்நுட்பத்தை சீராக இயக்கும் சாதனங்கள் வெளிவர வேண்டும். புதிய தொழில்நுட்பம் தற்போதைய 4ஜி-யை விட அதிவேகமாக இணைய இணைப்பை பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதன் விற்பனை சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #MiBand3



    சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேன்ட் சாதனம் அமேசான் வலைதளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அமேசானில் இடம்பெற்றிருந்த டீசரின் படி Mi பேன்ட் 3 சாதனம் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

    செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் இணைக்கப்பட்ட சாதனங்களுடன் சியோமியின் புதிய Mi பேன்ட் 3 சாதனமும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரின்படி Mi பேன்ட் 3 மாடலில் ரியல்-டைம் ஃபிட்னஸ் டிராக்கிங் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi பேன்ட் 3 முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 



    சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:

    - 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
    - கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
    - போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
    - இதய துடிப்பு சென்சார்
    - உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
    - செடன்ட்டரி ரிமைன்டர்
    - 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
    - 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
    - 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி

    சியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×