search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Whatasapp"

    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். தளத்தில் விளம்பரங்கள் தோன்ற இருப்பதாகவும், இதற்கான சோதனை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரியான் ஆக்டன் ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் பிரபல செயலியில் விளம்பரங்களை வழங்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் திட்டமிட்டு இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில், செயலியை கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், செயலியில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து @WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விளம்பரங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தோன்றும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் ஸ்டோரீஸ் அம்சத்தில் விளம்பரங்கள் தோன்றுகின்றன. எனினும் இந்த விளம்பரங்கள் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    வாட்ஸ்அப் செயலி முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதால், ஃபேஸ்புக்கால் பயனர் விவரங்களை அறிந்து கொள்ள முடியாது. எனினும், வாட்ஸ்அப் நம்பர்களுடன் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பயனர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்க முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஐபோன் மாடல்களில் இதற்கான அப்டேட் வரும் மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் வெளியான தகவல்களில் விளம்பரம் சார்ந்த வியாபாரத்திற்கு வாட்ஸ்அப் மாற இருப்பதாக கூறப்பட்டது. 

    வாட்ஸ்அப் செயலியிலின் ஸ்டேட்டல் பகுதியில் தோன்றும் விளம்பர அமைப்பு முற்றிலுமாக பேஸ்புக் மூலம் இயங்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் போன்று அனைத்து தளங்களிலும் விளம்பரங்களை புகுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலர் மேட் இடிமா தெரிவித்துள்ளார்.
    ×