என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரும் நிகழ்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எதிர்பார்க்கப்படும் சாதனங்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent
ஆப்பிள் நிறுவனம் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மிகப்பெரும் நிகழ்வினை அக்டோபர் 30ம் தேதி நடத்த இருக்கிறது. இரண்டாவது விழா நியூ யார்க் நகரின் புரூக்லின் அகாடமியில் நடைபெற இருக்கிறது.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்தது.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஏற்பாடு செய்திருக்கும் புதிய விழாவின் தீம் “மேக்கிங்” என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் தொழில் செய்வோருக்கு ஏற்ற புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் வெறும் ஐபோன் மட்டுமின்றி அன்றாட தொழில் செய்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்துடன் விலை குறைந்த மேக்புக் மற்றும் புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் மேக் மினி 2014ம் ஆண்டில் இருந்து அப்டேட் செய்யப்படவில்லை. இத்துடன் வேகமான இன்டெல் பிராசஸர்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஐமேக், ஐமேக் ப்ரோ மற்றும் 12-இன்ச் மேக்புக் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பயனர்கள் தங்களது லிப் சின்க் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Lasso
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய செயலியில் பயனர்கள் பிரபல பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வீடியோக்களை படமாக்கி, அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஃபேஸ்புக்கின் புதிய லஸ்ஸோ செயலி டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக இருக்கும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிக்டொக் செயலி இளைஞர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை செய்யும் வகையில் இருக்கிறது.
அந்த வகையில் ஃபேஸ்புக் சார்பில் உருவாகி வரும் புதிய செயலியை ஃபேஸ்புக்கின் வீடியோ மற்றும் வாட்ச் குழுவினரால் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு தலைமை மூத்த வடிவமைப்பாளர் பிராடி வொஸ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வொஸ் முன்னதாக ஃபேஸ்புக்கின் டி.வி. செயலியில் பணியாற்றி வந்தார்.

ஃபேஸ்புக் நிறுவனம் இளைஞர்களுக்கான புதிய செயலியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே வருடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு இசை நிறுவனங்களிடம் உரிமையை கைப்பற்றும் பணிகளில் ஈடுபடத் துவங்கியது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க முடியும், பின் இந்த அம்சம் ஃபேஸ்புக்கிலும் சேர்க்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப் சின்க் அம்சத்தை நேரலை செய்யும் வசதியை சோதனை செய்ய துவங்கியிருக்கிறது.
மேலும் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களுக்கு விரும்பிய பாடல்களை பின் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படும் என்றும் இதனை நண்பர்கள் கேட்க முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் மைஸ்பேஸ் மியூசிக் போன்று இருக்கிறது.
ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டோரிக்களில் மியூசிக் சேர்க்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook
ஃபேஸ்புக் தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக் ஸ்டோரிக்களில் மியூசிக் சேர்க்கும் வசதி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்டோரிக்களில் சேர்க்கப்படும் இந்த வசதி, விரைவில் ப்ரோஃபைலிலும் சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் சேர்ப்பதை போன்றே ஃபேஸ்புக் தளத்திலும் புகைப்படம் மற்றும் வீடியோவில் பாடலை சேர்க்க முடியும். இதை செயல்படுத்த போட்டோ அல்லது வீடியோ எடுத்து, மியூசிக் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பயனர் விரும்பிய பாடலை சேர்த்ததும், பாடலில் உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேர்க்கலாம்.
பயனர்கள் ஸ்டிக்கரை விரும்பும் இடத்தில் வைத்துக் கொண்டு அவற்றில் எஃபெக்ட்களை சேர்த்து ஸ்டோரியை கஸ்டமைஸ் செய்யலாம். இத்துடன் ஃபேஸ்புக் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்த லிப் சின்க் லைவ் அம்சத்தை விரைவில் வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பாடல்களுக்கு லிப் சின்க் செய்ய முடியும். இந்த வசதி உலகம் முழுக்க அனைத்து ப்ரோஃபைல்களுக்கும் வழங்கப்படுகிறது.
புதிய அம்சம் அதிக ஆர்டிஸ்ட் மற்றும் கிரியேட்டர்களுக்கு வழங்கும் நோக்கில், பக்கங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிரபலங்கள் தங்களது நலம்விரும்பிகளுடன் இணைப்பில் இருக்க முடியும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபிரெட் பெடைல் தெரிவித்தார்.
மெசன்ஜர் செயலியின் எளிய பதிப்பினை மெசன்ஜர் 4 என்ற பெயரில் வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Messenger #Facebook
மெசன்ஜர் செயலியின் எளிய பதிப்பை மெசன்ஜர் 4 என்ற வடிவில் வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 10ல் 7 பேர் தங்களது மெசேஜிங் ஆப் எளிமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதன்படி புதிய மெசன்ஜரில் மூன்று டேப்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
மெசன்ஜர் 4ல் கேமரா ஆப்ஷன் வழங்கப்பட்டு இருப்பதால், மிக எளிமையாக செல்ஃபி எடுத்து அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மெசன்ஜர் 4ன் பீப்பிள் டேப் கிளிக் செய்து நண்பர்களை தேடவோ, ஸ்டோரிக்களை பார்க்கவோ அல்லது யார் யார் ஆன்லைனில் உள்ளனர் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இத்துடன் டிஸ்கவர் டேப் இருப்பதால், வியாபார நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு சமீபத்திய சலுகைகள், இன்ஸ்டன்ட் கேம்கள், செய்திகள் மற்றும் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். உரையாடல்களை தனித்துவப்படுத்தும் வகையில் கலர் கிரேடியன்ட்ஸ் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் கொண்டு உரையாடல்களை வெவ்வேறு நிறங்களில் பிரித்துக் கொள்ளலாம். சிவப்பு முதல் நீலம் வரையிலான நிறங்களை பார்க்க முடியும். உங்களது உரையாடல்களை உங்களது மனநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். மெசன்ஜர் 4 படிப்படியாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மெசன்ஜர் 4ல் டார்க் மோட், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ஃபேஸ்புக் மேலும் அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய லேப்டாப் ஃபிளாஷ் என அழைக்கப்படுகிறது. #Samsung #laptop
சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் 802.11 ac 2X2 ஜிகாபிட் வயர்லெஸ் LAN கார்டு கொண்டுள்ளது. இதனால் புதிய லேப்டாப்பில் நொடிக்கு 1.7 ஜிகாபைட் வேகம் வரை சீராக இயங்கும்.
இத்துடன் புதிய ஃபிளாஷ் லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் KT கார்ப் மொபைல் நெட்வொர்க்கிற்காக சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் சாம்சங் தனது ஃபிளாஷ் லேப்டாப்பில் அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பை வழங்கியிருக்கிறது. புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது.

கைரேகை சென்சார், சாம்சங் ரகசிய ஃபோல்டர் கொண்டிருக்கும் சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப்பில் பயனர்கள் தங்களது தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
சர்வதேச ஃபிளாஷ் ஸ்டோரேஜ் கார்டுகளை சப்போர்ட் செய்யும் ஃபிளாஷ் லேப்டாப் வழக்கமான மைக்ரோ எஸ்.டி. கார்டுகளை விட ஐந்து மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் புகிய ஃபிளாஷ் லேப்டாப் மாடல்கள் வைட், சார்கோல் மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8,20,000 வொன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,360 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Samsung #laptop
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்ப்லாஷ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Zebronics #splash
ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த தரகுறியீட்டினை கொண்ட ஐடி உதிரிபாகங்கள், சவுண்ட் சிஸ்டம், லைஃப்ஸ்டைல்/மொபைல் பாகங்கள்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் “ஸ்ப்லாஷ்” என்ற பெயரில் சிறிய வடிவிலான ஸ்பீக்கர் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் உங்கள் வீட்டு விசேஷங்களில் ஒரு உரையாடல் தொடங்கியாக இருக்கும். இதன் அழகிய வடிவம் மட்டும் இல்லாமல் இதனுடைய நவீன அம்சங்களும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. மேலும் உங்கள் மனம் விரும்பும் பாடல்களை நீங்கள் விரும்பியபடி கேட்கலாம். இந்த ஸ்பீக்கர் மேற்புறமாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில் ஒரு கைப்பிடியுடன் வருகிறது.
எங்களுடைய சிறந்த வெற்றி படைப்பான “ஆக்சில்” மாடலுக்கு பிறகு நன்கு ஆலோசித்த பிறகு தயாரிக்கப்பட்ட, அதிக பேஸ் கொண்ட சத்தமான ஒலிப்பெருக்கி மற்றும் அணைத்து வித சிறப்பு அம்சங்களும் அடங்கிய ஒரு சிறிய படைப்பே இந்த “ஸ்ப்லாஷ்” வயர்லெஸ் ஸ்பீகக்ர்.

ஸ்ப்லாஷ் ஸ்பீக்கரின் மேற்புறமாக உள்ள பட்டன்களின் மூலம்ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம், இணைப்பை மாற்றலாம். வயர் இல்லாமல் உங்கள் மொபைல், மெமரி கார்டு, AUX அல்லது USB மூலமாக தேவையான பாடல்களை கேட்கலாம். இந்த ஸ்பீக்கரில் நீங்கள் உங்களுக்கு வரும் அழைப்பை ஏற்கலாம் மற்றும் பேசவும் முடியும்.
நீங்கள் கேட்ட பாடல்களை மீண்டும் கேட்டு சலிப்படையும் பட்சத்தில் ஒரு மாற்றத்திற்காக இதில் ரேடியோ வசதியும் உள்ளது.
ஜெப்ரானிக்ஸ் இன் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி, இந்த புதிய வெளியீடை பற்றி பேசும்போது கூறியதாவது: “ சிறிய வடிவ, அதிக ஒலியை கொண்ட ஒலிப்பெருக்கிகளுக்கு அதிக தேவை உள்ளது. எங்களுடைய புதிய “ஸ்ப்லாஷ்” என்னும் இந்த புதிய வயர்லெஸ் ஒலிப்பெருக்கி அந்த ஒரு தேவையை கண்டிப்பாக அதிக ஒலியுடன் மற்றும் அழகிய வடிவத்துடன் பூர்த்தி செய்யும்.
இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி கருப்பு நிறத்தில் இந்தியாவின் முன்னணி கடைகளில் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஸ்கைலைன் கலெக்ஷன் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Apple #BeatsStudio3Wireless
ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் ஸ்டூடியோ 3 வயர்லெஸ் ஹெட்போனினை பல்வேறு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.
புகிய ஸ்கைலைன் கலெக்ஷன் கிரிஸ்டல் புளு, டிசர்ட் சேன்ட், மிட்நைட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்களுடன் ஹெட்போனில் தங்க நிற அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் தங்க நிற பீட்ஸ் லோகோ மற்றும் கோல்டு பேன்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.
பீட்ஸ் ஸ்டூடியோ 3 ஹெட்போனில் பியூர் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர் இருக்கும் சூழலில் நிலவும் சத்தத்திற்கு ஏற்ப நாய்ஸ் கேன்சலேஷன் அளவை மாற்றும். இந்த ஹெட்போனில் உள்ள நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் போட்டி நிறுவனங்களை விட சிறப்பானதாக இயங்கும் என பீட்ஸ் தெரிவித்துள்ளது.
அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் அம்சம் ஆஃப் செய்யப்பட்டால், ஸ்டூடியோ 3 அதிகபட்சம் 40 மணி நேர பேக்கப் வழங்கும், இந்த அம்சம் ஆன் செய்யப்பட்ட நிலையில், 22 மணி நேரம் பேக்கப் வழங்கும். புதிய ஹெட்போனினை மைக்ரோ யு.எஸ்.பி. கனெக்டர் மூலம் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பீட்ஸ் ஓவர்-இயர் ஹெட்போன்களில் W1 சிப் வழங்கப்பட்டுள்ளதால் ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் பேர் செய்வது எளிமையாக இருக்கும். இத்துடன் மிக்கி மவுஸ் 90-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் மிக்கி தீம் கொண்ட பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஹெட்போன்களில் கிரே ஃபெல்ட் கேரி கேஸ், கலெக்டெபிள் பின் மற்றும் டீக்கல் ஸ்டிக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மிக்கி மவுஸ் ஹெட்போன்கள் விரைவில் கிடைக்கும் என ஆப்பிள் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.
புதிய ஹெட்போன்கள் நவம்பர் 11-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. மிக்கி டிசைன் கொண்ட ஹெட்போனின் விலை 329.95 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கைலைன் கலெக்ஷன் விலை 349.95 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,720 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் பீட்ஸ் சோலோ 3 ஹெட்போன் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,
ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #AppleWatchSeries4
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் சீரிஸ் 4 மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 40 எம்.எம். மற்றும் 44 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டிஜிட்டல் கிரவுன், ஹெப்டிக் ஃபீட்பேக், 50% அதிக சத்தம் வழங்கும் ஸ்பீக்கர்கள், எஸ்4 சிப், 64-பிட் டூயல் கோர் பிராசஸர், புதிய உடல்நலன் அம்சங்கள், புதிய அக்செல்லோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் உள்ளிட்டவை கொண்டுள்ளது.
புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் பொருட்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வோரிடம் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விலை ரூ.40,000 முதல் துவங்கும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 19-ம் தேதி முதல் துவங்குகிறது.

முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களுக்குள் சில ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் விற்றுத் தீர்ந்துள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 40எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், சீஷெல் ஸ்போர்ட் லூப் / கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் லூப் விலை ரூ.40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.43,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.+செல்லுலார்) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.52,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் கடந்த மாதம் திருடப்பட்ட நிலையில், தற்சமயம் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. #Facebook #databreach
‘ஃபேஸ்புக்’ சமூக வலை தளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.
அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டுள்ளன.
இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.
மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #databreach
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இப்படியும் பயன்படுத்த முடியும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். #smartphone
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எஸ்.டி.சி. 2018 நிகழ்வில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டி.ஜெ. கோ தெரிவித்துள்ளார். அதன்படி சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக இருக்கும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் டிஸ்ப்ளே முழுமையாக மறைக்கப்படும். புதிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் பிரைமரி OLED டிஸ்ப்ளே மற்றும் 4.6 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்த விவரங்களை கோ தெரிவிக்காத நிலையில், ஸ்மார்ட்போனினை டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
"மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வழங்கும் போது, அது உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார். "பயனர் அனுபவத்தை மேம்படுத்தாது என்றால், இது போன்ற பொருட்களை வழங்க விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்."
"மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான தேவை இருப்பதை நான் நம்புகிறேன், நாம் மடிக்கக்கூடிய மொபைல் போன்களை வழங்கும் போது, இது சந்தையில் புதிதாக இருக்கும், நிச்சம் இதேபோன்ற மாடல்கள் அதிகம் வெளியாகும்" என டி.ஜெ. கோ தெரிவித்தார்.
யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SMARTTV
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மாட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த முதல் டி.வி. மாடலாக அமைந்திருக்கிறது.
யு யுஃபோரியா டி.வி.யில் 40-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் தரவுகளை டி.வி. திரையில் பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் யு யுஃபோரியா ஸ்மார்ட் டி.வி.யில் ஆப்டாய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிளே ஸ்டோரில் இருந்து பயனர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான செயலிகளை பயன்படுத்த முடியும். இதில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனினை டி.வி.யுடன் இணைத்து கேமிங் அனுபவிக்க முடியும்.

மேலும் ஸ்மார்ட்போன்களில் சில பட்டன்களை கிளிக் செய்து முழு டி.வி.யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் சாதனங்களில் இருந்து தகவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு யுஃபோரியா டி.வி.யில் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் 1 வி.ஜி.ஏ. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 வாட் சவுன்ட் அவுட்புட் கொண்டுள்ளது.
இந்தியாவில் யு யுஃபோரியா ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. விலை ரூ.18,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் தனது புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. #PixelSlate
கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் தனது புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம் ஓ.எஸ். மூலம் இயங்கும் புதிய டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே மூலம் பயன்படுத்த முடியும்.
பிக்சல் ஸ்லேட் என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 12.3 இன்ச் 3000x2000 பிக்சல் 293 PPI 2.5D வளைந்த கிளாஸ் மாலிகுலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வெறும் 7 மில்லிமீட்டர் அளவு மெல்லியதாக இருக்கும் பிக்சல் ஸ்லேட் முன்பக்கம் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதனத்தின் கடவுச்சொற்கள் மற்றும் ஓ.எஸ். பாதுகாப்பாக இருக்கும். பிக்சல் ஸ்லேட் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் M3, i5 அல்லது i7 பிராசஸர், இன்டெல் செலரான் பிராசஸர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 16 ஜி.பி. ரேம் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி மற்றும் 8 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதன் பவர் பட்டன் கைரேகை சென்சார் போன்றும் இயங்குகிறது. புதிய பிக்சல் ஸ்லேட் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டில் ஹஷ் பட்டன்கள், பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன் மற்றும் பெரிய டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் அறிமுகம் செய்த பிக்சல்புக் பேனாவுடன் புதிய பிக்சல் ஸ்லேட் இயங்குகிறது.
கூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்:
- 12.3 இன்ச் 3000x2000 பிக்சல் 293 PPI LCD டிஸ்ப்ளே
- கூகுள் பிக்சல்புக் பேனா சப்போர்ட்
- இன்டெல் செலரான் பிராசஸர் / 8th Gen இன்டெல் கோர் m3 / கோர் i5 / கோர் i7 பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
- 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. எஸ்.எஸ்.டி. / 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி
- 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
- க்ரோம் ஓ.எஸ்.
- 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, f/1.8, 1.12μm பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.4μm பிக்சல்
- பிக்சல் இம்ப்ரின்ட் கைரேகை சென்சார்
- டைட்டன் சி செக்யூரிட்டி சிப்
- வைபை, ப்ளூடூத், 2 யு.எஸ்.பி. டைப்-சி, 4K டிஸ்ப்ளே அவுட்புட்
- முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர்கள், 2 மைக்
- 48Wh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய பிக்சல் ஸ்லேட் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்களில் துவங்குகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டு விலை 199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல்புக் பேனா விலை 99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






