என் மலர்tooltip icon

    கணினி

    சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன எக்சைனோஸ் பிராசஸரின் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனம் நவம்பர் 14ம் தேதி தனது புதிய எக்சைனோஸ் பிராசஸரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புது எக்சைனோஸ் பிராசஸரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

    நவம்பர் 14ம் தேதி சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய பிராசஸர் தற்போதைய கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் எக்சைனோஸ் 9810 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட பிராசஸராக இருக்கும்.

    சாம்சங் முந்தைய வழக்கப்படி எண்ணியல் முறையில் பெயரிடும் பட்சத்தில் புதிய பிராசஸர் எக்சைனோஸ் 9820 என அழைக்கப்படலாம். புதிய பிராசஸர் சாம்சங் நிறுவனத்தின் முதல் 7 என்.எம். LPP வழிமுறையில் உருவாக்கப்பட்ட பிராசஸராக இருக்கும்.

    இந்த தொழில்நுட்பம் 50 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்தி, சாதனத்தின் செயல்திறனை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.



    அறிமுக நிகழ்வு குறித்து சாம்சங் வெளியிட்டிருக்கும் டீசரில் “intelligence from within.” என எழுதப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் நியூரல் பிராசஸிங் யூனிட் வழங்கப்படலாம். முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் கேலக்ஸி எஸ்10 பிராசஸரில் பிரத்யேக நியூரல் பிராசஸிங் யூனிட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் புதிய பிராசஸர் டூயல்-கோர் செயற்கை நுண்ணறிவு சிப் கொண்டிருக்கும் என்றும் இதனால் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் கொண்டு கடினமான செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் அம்சங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எக்சைனோஸ் பிராசஸரில் 5ஜி மோடெம் வசதிக்கான சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் தனது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்க எக்சைனோஸ் 5100 மோடெம் ஒன்றை சாம்சங் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் 5ஜி வசதி கொண்ட தனி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    பிளே ஸ்டேஷனில் பப்ஜி கேமின் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்து இருக்கிறது. #PUBG #PlayStation4



    ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் பிளே ஸ்டேஷன் 4 சாதனத்திற்கு வழங்கப்பட இருக்கும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நவம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளே ஸ்டேஷன் 4ல் பப்ஜி கேம் டிசம்பர் 8ம் தேதி வழங்கப்படும் என தெரிகிறது. பிளே ஸ்டேஷனில் அறிமுகமானதும் பப்ஜி கேம், ஸ்மார்ட்போன், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்து தளங்களிலும் கிடைக்கும்.

    பிளே ஸ்டேஷன் 4 சாதனத்தில் பப்ஜி கேம் சில மாற்றங்களுடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாடுவதற்கு ஏற்ப அந்த மாற்றங்கள் இருக்கும் என்பதால், கேமின் அனுபவம் வேறாக இருக்கும். பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜியில் வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    அமேசானில் வெளியீட்டு விவரம் பிழை காரணமாக இடம்பெற்று இருந்த நிலையில், உடனடியாக பதிவு நீக்கப்பட்டு விட்டது. 

    முன்னதாக ரெஸ்ட்இரா எனும் கேமிங் தளம் மற்றும் பி.எஸ்.என்.ப்ரோஃபைல்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியான தகவல்களில் பி.எஸ்.4 கேமிங் டேட்டாபேசில் பப்ஜி இருப்பதை உறுதிப்படுத்தின.

    செப்டம்பர் மாதத்தில் கொரிய கேம் ரேட்டிங் மற்றும் நிர்வாக குழு பி.எஸ்.4-க்கான பப்ஜி கேமினை வரிசைப்படுத்தி இருந்தது. சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) தளத்தில் பப்ஜி 1.0 வெளியிடப்பட்ட நிலையில் மற்ற தளங்களிலும் பப்ஜி வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
    குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் கொண்ட ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஃபாசில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. #Fossil #smartwatch



    ஃபாசில் நிறுவனம் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் மற்றும் கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

    இத்துடன் நீட்டிக்கப்பட்ட பேட்டரி பேக்கப், புதிய பேட்டரி சேவிங் மோட், மேம்படுத்தப்பட்ட ஆம்பியன்ட் மோட், இன்டகிரேட் செய்யப்பட்ட இதயதுடிப்பு சென்சார், என்.எஃப்.சி., மற்றும் ஜி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் 41 மற்றும் 43 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    350 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் ரேபிட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி சேவிங் மோட் இரண்டு நாட்கள் டெல்லிங் டைம் வழங்ங்குகிறது. கூகுளின் வியர் ஓ.எஸ். கொண்டிருப்பதால் குவிக் ஸ்வைப், தகவல்களை வேகமாக இயக்கும் வசதி, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் ஃபிட் சேவைகளை பயன்படுத்த முடியும்.



    இதய துடிப்பு சென்சார், ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கனெக்டிவிட்டி, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய செயலிகள் ஆட்டோ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்பாடிஃபை மற்றும் நூன்லைட் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

    18 எம்.எம். மற்றும் 22 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் பிரேஸ்லெட்களில் மாற்றக்கூடிய ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட சாதனங்களில் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் இணைக்க முடியும். வயர்லெஸ் சின்கிங் மற்றும் மேக்னடிக் சார்ஜிங் வசதிகளை சப்போர்ட் செய்கிறது.

    ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை 225 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.18,440 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 12ம் தேதி முதல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. 
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Messenger



    வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.



    அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். #Messenger #Facebook
    ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் சுமார் 12 கோடி பேரின் விவரங்கள் களவாடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #databreach



    ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஓர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை, ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும் தகவல்களில், இம்முறை கிடைத்திருக்கும் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை ஹேக்கர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அவர்களின் குறுந்தகவல்களும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

    குறுந்தகவல் உள்ளிட்ட ஃபேஸ்புக் பயனர் விவரங்களை ஹேக்கர்கள் ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு 0.10 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7.28 பைசா எனும் கட்டணத்திற்கு விற்பனை செய்யப் போவதாக ஹேக்கர்கள் அச்சுறுத்தி இருப்பதோடு, அவற்றில் சில அக்கவுண்ட்களை வலைதளத்தில் விற்பனைக்கு பட்டியலிட்டனனர்.

    புதிய தகவல் திருட்டு சம்பவத்தை ஃபேஸ்புக் மறுத்திருக்கும் நிலையில் ஹேக்கர்கள் பயனர் விவரங்களை மால்வேர் எக்ஸ்டென்ஷன்கள் மூலம் திருடி இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இம்முறை நடந்திருக்கும் தகவல் திருட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பயனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில அக்கவுண்ட்கள் லண்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்தவை என கூறப்படுகிறது.



    பயனர் விவரங்களை வைத்திருக்கும் ஹேக்கர்கள் வலைதளம் ஒன்றில் வெளியிட்ட விளம்பரங்களில் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்கள் ஒரு அக்கவுண்ட்டுக்கு 0.10 டாலர்கள் கட்டணத்திற்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. ஹேக்கர்கள் பதிவிட்டிருக்கும் விளம்பரத்தில் உதாரணமாக 81,000 பயனர்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டன. எனினும் இந்த விளம்பரம் தற்சமயம் எடுக்கப்பட்டுவிட்டது.

    இதுகுறித்து டிஜிட்டல் ஷேடோஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் சுமார் 12 கோடி ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் திருடு போக அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் ஃபேஸ்புக் இத்தகைய தகவல்களை தவறவிட்டிருக்காது என தெரிவித்துள்ளது. மேலும் விளம்பரத்தில் பதிவிடப்பட்ட 81,000 ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில் தனிப்பட்ட குறுந்தகவல்கள் இடம்பெற்றிருந்ததை டிஜிட்டல் ஷேடோஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    பிரவுசர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு மால்வேர் நிறைந்த எக்ஸ்டென்ஷன்களை தங்களது ஸ்டோர்களில் இருந்து எடுத்து விடுமாறு கேட்டு கொண்டிருக்கிறோம். மேலும் சட்டத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை பட்டியலிட்ட வலைதளத்தை முடக்கி இருக்கிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரோஷன் தெரிவித்தார்.

    பயனர்கள் எக்ஸ்டென்ஷன்களை டவுன்லோட் செய்யும் போது அதிக கவனமாக செயல்பட வேண்டும், இவ்வாறு செய்வோர் அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த நிறுவனங்களின் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.
    ஹூவாய் ஹானர் பிரான்டு ஹானர் வாட்ச் மேஜிக் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Honor #Smartwatch



    ஹூவாய் ஹானர் பிரான்டு ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனுடன் ஹானர் வாட்ச் மேஜிக் ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பார்க்க ஹூவாய் வாட்ச் ஜி.டி. போன்றே காட்சியளிக்கிறது, எனினும் இதன் டிஸ்ப்ளே சிறியதாக இருக்கிறது. 

    ஹானர் வாட்ச் மேஜிக் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.2 இன்ச் 390x390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, டூயல்-கிரவுன் டிசைன், 9.8எம்.எம். மெல்லிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், பின்புறம் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாட்ச் மேஜிக் 316L கோல்டு ஃபோர்ஜ் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

    இதன் சிலிகான் ஸ்டிராப் கருப்பு மற்றும் சிவப்பு என டூ-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இத்தாலிய லெதர் கொண்ட சில்வர் வெர்ஷனும் கிடைக்கிறது. பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் ட்ரூசென் 3.0 இதய துடிப்பு சென்சார், பயனர் ஓய்வு எடுக்கும் நேரம் மற்றும் துடிப்புடன் செயல்படும் நேரங்களில் டிராக் செய்யும்.



    ஹானர் வாட்ச் மேஜிக் சிறப்பம்சங்கள்

    - 1.2 இன்ச் 390x390 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
    - ARM M4 சிப்செட்
    - 16 எம்.பி. ரேம்
    - 128 எம்.பி. ரேம்
    - ப்ளூடூத் 4.2
    - 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - ஜி.பி.எஸ்., குளோனஸ், கலீலியோ, என்.எஃப்.சி.
    - 178 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் வாட்ச் மேஜிக் பிளாக், சிலிகான் பேன்ட் வெர்ஷன் விலை 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,500) என்றும் லெதர் பேன்ட் கொண்ட சில்வர் நிற எடிஷன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பது குறித்து அந்நிறுவன துணை தலைவர் க்ரிஸ் டேனிய்ல்ஸ் முக்கிய தகவலை வழங்கி இருக்கிறார். #whatsappstatus



    வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிகளில் விளம்பரங்கள் வழங்கப்படலாம் என் தகவல் வெளியானது. தற்சமயம் வாட்ஸ்அப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வணிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் துவங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    வணிகமயமாக்கும் முயற்சிகளின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மக்களை வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியான நிலையில், இதன் செயல்பாட்டுக்கு வரும் காலம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புகைப்படம், எழுத்துக்கள், வீடியோக்கள், அனிமேஷன் ஜிஃப் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து போகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் ஃபேஸ்புக் விளம்பர அமைப்பின் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாட்ஸ்அப் இணை நிறுவனரான ப்ரியான் ஆக்டன் பதவி விலகினார். மேலும் வாட்ஸ்அப் என்க்ரிப்ஷன் அம்சங்களை தளர்த்தி, செயலியில் இருந்து வருமானம் ஈட்டுவதில் மார்க் சூக்கர்பர்க் தீவிரமாக இருக்கிறார் என ப்ரியான் ஆக்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
    ஐஃபால்கன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #androidtv



    ஐஃபால்கன் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள்- ஐஃபால்கன் 40F2A மற்றும் ஐஃபால்கன் 49F2A இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    சமீபத்தில் நிறைவுற்ற பிளிப்கார்ட் வலைதளத்தில் பிரபலமான ஆன்ச்ராய்டு டி.வி. மாடல்களில் ஒன்றாக இருந்தது என ஐஃபால்கன் தெரிவித்துள்ளது. ஐஃபால்கன் F2A சீரிஸ் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் ஆகும். இவற்றில் ஏ.ஐ. அசிஸ்டன்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    இவற்றில் IPQ என்ஜின், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்காஸ்ட், வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டன்ட், ஏ.ஐ. மூலம் இயங்கும் விர்ச்சுவல் சூப்பர் அசிஸ்டன்ட் வழங்கப்பட்டுள்ளது.



    இதனால் புதிய F2A சீரிஸ் மாடல்களில் பொழுதுபோக்கு, தகவல் தேடல் மற்றும் வீட்டில் உள்ள இணைக்கப்பட்ட சாதனங்கள் உள்ளிட்டவற்றை பயனர்கள் தங்களது குரல் மூலம் இயக்க முடியும்.

    ஐஃபால்கன் 40F2A மாடலில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 2 ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைபை மற்றும் 320 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஐஃபால்கன் 40F2A மற்றும் 49F2A மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 எனும் சிறப்பு விலையில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்ட்களும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 2018 ஐபேட் ப்ரோ சாதனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #iPad2018



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படவில்லை, ஐபோன் X மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை போன்ற ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் அதிகம் மேம்பட்ட நிலையில், புதிய டேப்லெட்டில் ஆப்பிள் வழங்கியுள்ளது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடல் 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ப்ரோ ஏ12X 7என்.எம். பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏ12X பிராசஸரில் 8-கோர் சி.பி.யு., சிங்கிள் கோர் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 35 சதவிகிதம் வேகமாகவும், 90 சதவிகிதம் வேகமாகவும் இருக்கிறது.

    புதிய ஏ12X பயோனிக் சிப்செட்டில் இருமடங்கு கிராஃபிக்ஸ் செயல்திறன் மற்றும் ஒரு நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது. 



    ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம்
    - ஜெஸ்ட்யூர் இன்டர்ஃபேஸ்
    - ஏ12X பயோனிக் பிராசஸர், நியூரல் என்ஜின்
    - ட்ரூ டெப்த் கேமரா
    - குரூப் ஃபேஸ் டைம்
    - 12 எம்.பி. கேமரா, மேம்படுத்தப்பட்ட ட்ரூ டோன் ஃபிளாஷ்
    - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
    - 1000 ஜி.பி. மெமரி
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - புதிய ஆப்பிள் பென்சில்

    புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் பென்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பென்சில் ஐபேட் உடன் இணைந்து கொள்ள காந்த சக்தியும், தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளது. 

    புதிய ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் விலை 649 டாலர்கள், 11.0 இன்ச் விலை 799 டாலர்களும், 12.9 இன்ச் விலை 999 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இன்று துவங்கி இருக்கும் நிலையில், நவம்பர் 7ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக் மினி கம்ப்யூட்டர் ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. #AppleEvent #MacMini
    ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போர்டபிள் கம்ப்யூட்டரில் 8ம் தலைமுறை பிராசஸர்கள் அதிகபட்சம் 8 கோர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம் மற்றும் 2000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புதிய மேக் மினி மாடலிலும் ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மேக் மினி மாடலில் ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட் மற்றும் தன்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மேக் மினி பேஸ் வேரியன்ட் மாடலில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.



    மேக் மினி சிறப்பம்சங்கள்:

    - 8ம் தலைமுறை பிராசஸர்
    - 4, 6 மற்றும் 8 கோர்
    - 64 ஜி.பி. ரேம்
    - 2000 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட்
    - ஈத்தர்நெட், தன்டர்போல்ட் 3

    ஸ்பேஸ் கிரே நிறத்தில் கிடைக்கும் புதிய மேக் மினி மாடலில் 4, 6 மற்றும் 8 கோர் பிராசஸர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய மேக் மினி விலை 799 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதன் விற்பனையும் புதிய மேக்புக் ஏர் போன்றே நவம்பர் 7ம் தேதி துவங்குகிறது.#AppleEvent #MacMini
    ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் நிகழ்வில் புத்தம் புதிய மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ஏர் முந்தைய மாடல்களை விட அதிக அம்சங்களை புதிதாக கொண்டுள்ளது. #AppleEvent
    ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் நிகழ்வில் புத்தம் புதிய மேக்புக் ஏர் லேப்டாப் முதல் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லேப்டாப்பில் 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, கீபோர்டில் டச் ஐடி கைரேகை சென்சார், ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட், முந்தைய மாடல்களை விட பெரிய ஃபோர்ஸ் டச் டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 2 தன்டர்போல்ட் போர்ட், ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப், முந்தைய மாடலை விட 17 சதவிகிதம் சிறியதாகவும், 15.6 எம்.எம். தடிமனாக, 2.75 பவுன்ட் எடை கொண்டுள்ளது.



    புதிய மேக்புக் ஏர் சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆப்பிள் டி2 சிப்செட்
    - பேக்லிட் கீபோர்டு, ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
    - ஹே சிரி வாய்ஸ் கமான்ட்
    - டச் ஐ.டி. கைரேகை சென்சார்
    - இரண்டு தன்டர்போல்ட் 3.0 போர்ட்
    - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர்கள்
    - 16 ஜி.பி. ரேம்
    - 1500 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - ஒருநாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி
    - 1.5 கிலோ எடை

    புதிய மேக்புக் ஏர் விலை 1199 டாலர்கள் முதல் துவங்குகிறது. அமெரிக்காவில் இதன் முன்பதிவு இன்று துவங்குகிறது. விற்பனை நவம்பர் 7ம் தேதி துவங்குகிறது. #AppleEvent
    குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட் மாடலை இந்திய மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அறிமுகம் செய்தது. #qualcomm



    மொபைல் போன் சிப்செட் உருவாக்கும் குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலை இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

    வட அமெரிக்கா மற்றும் கொரியாவில் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பம் அதிவேக இணைய வேகத்தை சீராக வழங்குகிறது. 

    “4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை இயக்கும் வசதி கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன் வடிவம் இது. இந்த ஸ்மார்ட்போன் மில்லிமீட்டர் வேவ் பேன்ட்கள் மற்றும் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் பேன்ட்களை சப்போர்ட் செய்யும். 

    இதுபோன்ற வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கின்றன,” என குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணை தலைவர் துர்கா மல்லாடி தெரிவித்தார். 



    “இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிக பிரபலமானவையாக இருக்கின்றன. இங்கு சாதனம் மற்றும் உள்கட்டமைப்புகள் என இரண்டும் தயார் நிலையில் இருக்கும். அந்த வகையில் இந்திய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது இந்தியாவில் 5ஜி சேவை சீராக வெளியிடப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

    பொதுவாக புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் முதலில் பிரீமியம் சாதனங்களில் வழங்கி, அதன்பின் விலை குறைந்த சாதனங்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இதன் பின் புதிய தொழில்நுட்பம் வெகுஜன மக்களிடையே அதிக வரவேற்பை பெறும்.

    “தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் தான் உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நிறுவனங்கள் இதனை வெளியிட துவங்குவர், இதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
    ×