என் மலர்tooltip icon

    கணினி

    வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Whatsapp #Apps



    வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. 

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது. 

    இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிஃபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.



    இதன் மூலம் மெசேஜை பார்த்தாலே பயனர்களின் லாஸ்ட் சீன் மாறிவிடும். மேலும் புதிய வசதியுடன் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே செயலியில் வரும் அனைத்து வித மெசேஜ்களையும் பார்க்க முடியும் என்பதோடு, லாஸ்ட் சீன் மாறாமல் இருக்கும். சில பயனர்களுக்கு லாஸ்ட் சீன் நேரம் பெரியதாக இல்லை என்றாலும், சிலர் அவற்றை முக்கியமானதாக பார்ப்பர். 

    லாஸ்ட் சீன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களின் குறுந்தகவல்களை பார்த்து இருப்பார்களா, இல்லையா என்பதை குறுந்தகவல் அனுப்பியவர் பார்த்து புரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர் ஆன்லைனில் இருந்துகொண்டு குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

    புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை WABetaInfo மூலம் தெரியவந்து இருக்கிறது. புதிய வசதியை வாட்ஸ்அப் முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களை அழிப்பதாக ஆப்பிள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் போஸ்ட்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் கமென்ட்கள் பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட போஸ்ட்களின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும், பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

    தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜிமெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை போன்றதாகும், எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.



    நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் ஃபேஸ்புக் பரிந்துரை செய்திருக்கும் கமென்ட்கள் சிறியதாக இருந்தாலும், அவை சீராக வேலை செய்வதாகவே தெரிகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

    சமீபத்தில் ஃபேஸ்புக் தளத்தில் யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறோம் என பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
    ஃபேஸ்புக்கில் ‘யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக்’ வசதி உலகம் முழுக்க வழங்கும் பணிகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது. #Facebook



    யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் அம்சம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பயன்பாட்டு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். முன்னதாக இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஃபேஸ்புக்கின் யுவர் டைம் அம்சத்திற்கான டேஷ்போர்டு ஃபேஸ்புக் செயலியில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளனர் என்பதை அன்றாடம், கடந்த வாரம் உல்ளிட்டவற்றை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    அன்றாடம் சேவையை பயன்படுத்துவதற்கான நேரத்தை செட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி பயன்பாட்டு அளவை கடந்ததும் ஃபேஸ்புக் நினைவூட்டும், பின் இதை நிறுத்திக் கொள்ள முடியும். மேலும் ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன், நியூஸ் ஃபீட் மற்றும் பிரென்ட் ரிக்வஸ்ட் செட்டிங்களை ஷார்ட்கட் மூலம் இயக்க முடியும். 

    இரண்டு ஷார்ட்கட் மெனுக்களும் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபேஸ்புக் அம்சத்தினை இயக்க ஃபேஸ்புக்கின் மோர் டேப் -- செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி -- யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும்.




    கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வெல்பீயிங் அம்சங்களை தங்களது இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் சமீபத்தில் வழங்கியது. இதுமட்டுமின்றி டிஜிட்டல் வெல்பீயிங் அம்சம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும், இந்த அம்சங்கள் பயனர்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெல்பீயிங் அம்சங்களில் செயலியை வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யும் வசதிகள் வழங்கப்படவில்லை. 

    ஃபேஸ்புக்கின் யுவர் டைம் அம்சம் நியூஸ் ஃபீட் பிரவுசிங் நேரம், ஸ்டோரி பார்க்கும் நேரம் அல்லது ப்ரோஃபைல் படங்களை பார்ப்பது, போஸ்ட், கமென்ட் மற்றும் க்ரூப்களில் உரையாடுவது உள்ளிட்டவற்றில் செலவிடும் நேரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கும் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இந்த வசதிகள் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எல்.ஜி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. #LG #SmartDisplay



    எல்.ஜி. நிறுவனம் ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய சாதனம் எல்.ஜி. எக்ஸ் பூம் ஏ.ஐ. தின்க் WK9 என அழைக்கப்படுகிறது. எல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அதன்பின் மற்ற நாடுகளில் கிடைக்கும்.

    முன்னதாக இந்த சாதனம் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் அசிஸ்டன்ட் வசதியுடன் மெரிடியன் ஆடியோ சவுன்ட் தரம் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு WK9 மாடலில் மெரிடியன் ஆடியோவுடன் கூடிய அதிக துல்லியமான ஆடியோ, குரல் அங்கீகாரம் மற்றும் சிறப்பான பேஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.



    5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 20 வாட் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் எல்.ஜி. ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, எல்.ஜி தின்க் வசதி கொண்ட மற்ற சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் எல்.ஜி. WK9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே 1.51 கிலோ எடை கொண்டுள்ளது.

    எல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. 

    கூகுள் மற்றும் மெரிடியன் ஆடியோவுடனான கூட்டணி மூலம் சிறப்பான ஹோம் என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை ஸ்மார்ட் வசதிகளுடன் வழங்க முடிகிறது. மற்ற ஏ.ஐ. ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல், WK9 மாடல் முதல் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ வசதி கொண்டதாக இருக்கிறது. என எல்.ஜி. ஹோம் என்டர்டெயின்மென்ட் கம்பெனி வியாபார பிரிவு தலைவர் யங்-ஜெ தெரிவித்தார்.
    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4



    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

    பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.



    பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்

    டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
    லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
    சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் 
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
    சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999

    பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லெனோவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த தின்க்பேட் இ480 லேப்டாப் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #lenovo #laptop



    மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தின்க்பேட் இ480 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    முந்தைய மாடல்களைக் காட்டிலும் சிறப்பான செயல்திறன், மிகவும் உறுதியான வடிவமைப்பு என கொடுக்கும் பணத்திற்கு தரமான லேப்டாப் மாடலாக புதிய தின்க்பேட் இ480 உள்ளது. 14 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் புது லேப்டாப் விலை இந்தியாவில் ரூ. 57,496 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புது தின்க்பேட் இ480 லேப்டாப் முந்தைய மாடல்களை விட மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் உள்ளது. இது கருப்பு நிறத்தில் மிகச் சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இதன் கீ-போர்டில் ஒளிரும் தன்மை கொண்ட (பேக் லைட்) வசதி இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் செயல்படுத்த முடியும்.



    இதில் கைரேகை சென்சார் தின்க்பேட் லோகோவின் மேல் அழகாக இடம்பெற்றுள்ளது. தற்சமயம் வெளியாகும் லேப்டாப் மாடல்களில் கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், புது கீ-போர்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விஷயத்தில் லெனோவா தனது வாடிக்கையாளர்களின் மன நிலையை நன்கு உணர்ந்து தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள டிராக் பேட் மிகச் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

    பொதுவாக கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை சிறப்பாக இருந்தால் உங்களது டைப்பிங் திறன் மேம்படும். பிழைகளும் குறைவாக இருக்கும். அந்த வகையில் தின்க்பேட் கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை மிக வசதியான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    இதில் 7-வது தலைமுறை கோர் ஐ3 சி.பி.யு. உள்ளது. 4 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். மற்றும் 8-வது தலைமுறை கோர் ஐ7 மற்றும் 8 ஜி.பி. ரேம் 1 டெரா பைட் ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். ஆகியவற்றுடன் கிடைக்கிறது. இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் 13 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது.
    ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் தீவிரமாக பொறியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்கால ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறையலாம்.

    சான் டெய்கோவில் பணியாற்ற இந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் பத்து வேலைவாய்ப்பு தகவல்களை பதிவிட்டுள்ளது. அதன்படி பிராசஸர் வடிவமைப்பிற்கென தெற்கு கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாக ஆட்களை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    ஆப்பிள் விளம்பரங்களின் படி பொறியாளர்கள் அந்நிறுவனத்தின் சிப் உபகரணங்கள், ஆப்பிள் நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு பிராசஸர் மற்றும் வயர்லெஸ் சிப்செட்களில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



    வயர்லெஸ் உபகரணங்களில் உருவாக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஆப்பிள் சிப் வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐபோன்களில் வழங்க வெவ்வேறு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய இருக்கிறது. 

    இதன் மூலம் போட்டி நிறுவனங்களின் சாதனங்களை விட ஆப்பிள் ஃபிளாக்ஷிப் சாதனங்களை வித்தியாசப்படுத்த முடியும் என்பதோடு ஆப்பிள் செலவினங்களை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வயர்லெஸ் சிப்களை வழங்கி இருக்கிறது. எனினும் ஐபோன்களில் சொந்தமாக வயர்லெஸ் சிஸ்டம்களை உற்பத்தி செய்ததில்லை.

    ஆப்பிள் பணியமர்த்த இருக்கும் பொறியாளர்கள் எல்.டி.இ. மற்றும் ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் வயர்லெஸ் உபகரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. இதனால் ஆப்பிள் வயர்லெஸ் உபகரணங்களுக்காக குவால்காம் நிறுவனத்தை அதிகம் நம்பியிருந்தது, பின் இன்டெல் நிறுவனத்தை நாடி இருக்கிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனம் மூன்று புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. #Instagram



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கவும், மேம்படுத்துவும் அந்நிறுவனம் மூன்று புதிய அம்சங்களை  சேர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. 

    இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை வழங்கி இன்ஸ்டாவாசிகளுக்கு ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அந்நிறுவனம் புதிய பொருட்களை கண்டறிய மூன்று புது வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.

    அதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங்கின் முழு விவரங்களையும் பார்க்க புதிய அம்சம் வழி செய்கிறது. 

    இன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் அவற்றை பார்க்க முடியும். ஸ்டோரி அல்லது ஃபீட்களில் பொருட்களை கிளிக் செய்து வலது புறம் காணப்படும் சேவ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பொருளை ஷாப்பிங் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.



    ஷாப்பிங் பட்டியல் ஆப்ஷனை உங்களது ப்ரோஃபைல் பகுதிக்குச் சென்று இயக்க முடியும். புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் செயலியின் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் உள்ள ஷாப் டேப் ஆப்ஷனை புதுப்பிக்க இருப்பதாகவும், இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் ஷாப்பிங் சார்ந்த போஸ்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களை வேகமாக, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஷாப் டேப் மாற்றப்பட இருக்கிறது. அந்த வகையில் பிஸ்னஸ் ப்ரோஃபைல் செல்லும் போது, பொருட்களை பார்க்க ஷாப் பட்டனை கிளிக் செய்யும் போது குறிப்பிட்ட பொருளின் பெயர், விலை மற்றும் போஸ்ட் விவரங்களை பார்க்க முடியும்.

    நீங்கள் விரும்பும் பிரான்டுகளின் பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை ஃபீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
    வாட்ஸ்அப் செயலியில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp



    வாட்ஸ்ப் செயலியில் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செயலியில் புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. புதிய வசதியின் மூலம் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

    இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் நேம்டேக் (Nametag) அம்சம் போன்றே இயங்கும் என தெரிகிறது. மேலும் செயலியில் இருந்து நேரடியாக கான்டாக்ட் சேர்க்கும் அம்சத்தினை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஷேர் கான்டாக்ட் இன்ஃபோ வியா கியூ.ஆர். (share contact info via QR) அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் நேடம்டேக் அல்லது ஸ்னாப்சாட் செயலியில் ஸ்னாப்கோட் இயங்குவதை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வியாபார ரீதியாக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    புதிய அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியூ கான்டாக்ட் (New Contact) ஷார்ட்கட் அம்சத்திற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் நியூ கான்டாக்ட் அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மே மாதம் வழங்கப்பட்டது.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை உறுதி செய்திருந்த நிலையில், பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. #messengerupdate



    ஃபேஸ்புக் தளத்தில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இதற்கான அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மெசன்ஜரில் அனுப்பிய குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட முதல் பத்து நிமிடங்களுக்குள் அவற்றை திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் திரையில் தோன்றுகிறது. 

    ஃபேஸ்புக்கில் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும், இதனால் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்பட்டும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது.



    முதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.

    மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது. 

    மெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். 

    இவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம். #Twitter


     
    ட்விட்டர் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும், பலருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக ட்விட்களை எடிட் செய்யும் வசதி இருக்கிறது. ட்விட்டரில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி ட்விட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜாக் டொர்சி ட்விட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

    ட்விட்களை எடிட் செய்யும் அம்சத்தை பலரும் வீணடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ட்விட்களை எடிட் செய்யும் வசதி கட்டுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். மக்கள், ட்விட்டர் சேவையில் பிரச்சனையாக பார்ப்பதை நீக்கிவிட்டு, அதை சரி செய்யும் முயற்சிகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என டார்சி தெரிவித்தார்.



    ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து, அதை சரியாக வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியில் இருந்து எதையும் நேரடியாக எடுத்துவிடவோ அல்லது திசைத்திருப்பும் வகையிலோ இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

    ட்விட்களுக்கு எடிட் பட்டன் வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கப்படுகிறது என 2016ல் டொர்சி தெரிவித்திருந்தார். எனினும் இதுபற்றி எவ்வித முடிவும் இதுவரை உறுதியாகவில்லை.

    ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எடிட் வசதி பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கும் நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #ipadpro2018



    ஐபேட் ப்ரோ 2018 இந்திய வெளியீட்டு தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு டேப்லெட் மாடல்களும் இந்தியாவில் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இதன் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. 

    2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும் இரண்டு ஐபேட் மாடல்களின் துவக்க விலையை ஆப்பிள் அறிவித்தது.

    இந்தியாவில் 2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11-இன்ச் மாடல் இந்திய விலை ரூ.71,900ல் துவங்குகிறது. 12.9-இன்ச் மாடலின் இந்திய விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ஐபேட் ப்ரோ 2018 சிறப்பம்சங்கள்:

    - 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆப்பிள் ஏ12X பயோனிக் 7என்.எம். பிராசஸர்
    - 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
    ×