என் மலர்
கணினி
சோனி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் பப்ஜி கேம் வெளியிடப்பட்டது. பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜி பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. #PUBGPS4 #PlayStation4
ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான கேமாக இருக்கும் பப்ஜி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் வெளியிடப்பட்டது. பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு இருக்கும் பப்ஜி ஒவ்வொன்றும் தனித்தனி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பிரத்யேக அணிகளை பொருத்த வரை பப்ஜி பி.எஸ்.4 பப்ஜி பி.எஸ்.4 பிக்சல் ஆர்ட் பாராசூட் உடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாட கேமர்கள் தங்களது கேமில் லாக்-இன் செய்தாலே போதும். பிளே ஸ்டேஷனுக்கென இருக்கும் நீல நிற பாராசூட் கிடைக்கும்.
இதனுடன் நாதன் டிரேக் டெசர்ட், அன்சார்ட்டெட் உள்ளிட்டவை பி.எஸ். 4 கேமில் இருக்கும். மேலும் எலைட் பேக்பேக்கில் இருந்து தி லாஸ்ட் ஆஃப் யு, பப்ஜி அவதார், பப்ஜி மிராமர் போன்ற தீம்கள் பிளே ஸ்டேஷனுக்கு என பிரத்யேக அணிகளாக இருக்கின்றன.
பப்ஜி பி.எஸ்.4: டிஸ்க் எடிஷன், பப்ஜி லூட்டர்ஸ் எடிஷன், பப்ஜி சர்வைவர்ஸ் எடிஷன் மற்றும் பப்ஜி சேம்பியன்ஸ் எடிஷன் என நான்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்க் எடிஷன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Drop into #PUBG on PS4 for the first time LIVE with @IGN at 10AM PST TODAY. Watch Here: https://t.co/PcH5E1ElOxpic.twitter.com/4xLw4U1lpr
— PUBG (@PUBG) December 7, 2018
பப்ஜி லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டுமே. பப்ஜி சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை அடங்கும்.
பப்ஜி சேம்பியன்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 6,000 ஜி காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் தவிர எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலில் மட்டும் பப்ஜி வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இந்த கேம் பிளே ஸ்டேஷனிற்கும் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ். 4 வெளியீட்டிற்கு முன்னரே பப்ஜி டெவலப்பர்கள் கேமின் முழு வரைபடத்தை அவர்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #Twitter
ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ கன்ட்ரோல்கள் மிகவும் பயனுள்ள அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

திரையின் வலது புறம் அல்லது இடது புறங்களில் சிறிய கிளிக் செய்வதன் மூலம் வீடியோக்களை ஐந்து நொடிகளுக்கு முன்னரும், பின்னரும் ஃபார்வேர்டு செய்ய முடியும். யூடியூப் ஆப் இதற்கு ஏற்றார் போல் வேளை செய்கிறது, எனினும் இருமுறை கிளிக் செய்யும் போது வீடியோ பத்து நொடிகளுக்கு ஃபார்வேர்டு ஆகிறது.
ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் செயலியின் எந்த வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதனால் புது அம்சங்கள் அனைவருக்கும் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. #Twitter #Apps
ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலியில் ஜிஃப், எமோஜி, ஃபைல் ஷேரிங் என பல்வேறு புது வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. #Facebook #Apps
மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலிக்கு வழங்கப்படும் புது அப்டேட் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜிஃப் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு கீபோர்டு தேவைப்படும். இதைக் கொண்டு ஜிஃப்களை சேமித்துக் கொள்ளவும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.
இதனுடன் எமோஜிக்களை வெவ்வேறு நிறங்களில் தேர்வு செய்யும் வசதியும், எமோஜிக்களுக்கான வசதியும் வழங்கப்படுகிறது. எமோஜிக்களை பயன்படுத்த, வலதுபுறமாக இருக்கும் இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து நிறங்கள், நிக்நேம் மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றம் செய்யும் போது, நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை நீங்கள் சாட் செய்வோரும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இனி மெசஞ்சரில் ஃபைல், பிக்சர், வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். தரவுகளை பகிர்ந்து கொள்ள “+” பட்டனை கிளிக் செய்து நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய தரவுகளை தேர்வு செய்து அவற்றை அனுப்பலாம்.
வெறும் 10 எம்.பி. மெமரி கொண்டிருக்கும் மெசஞ்சர் லைட் செயலியில் வீடியோ காலிங் வசதி இந்த ஆண்டின் துவக்கத்தில் சேர்க்கப்பட்டது. செயலியில் பிழைகள் அடிக்கடி சரி செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை அடிக்கடி எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. #Facebook #Apps
குவால்காம் நிறுவனம் வர்த்தக ரீதியிலான உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்தது. #Qualcomm
ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்காம் நிறுவனம் உலகின் வர்த்தர ரீதியிலான முதல் 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என அழைக்கப்படும் இந்த பிராசஸர் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் மொபைல் சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கும்.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் QTM052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல்கள் மற்றும் இதர சிக்னல் உபகரணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மொபைல் போன் வடிவமைப்பாளர்கள் புதிய சாதனங்களை வடிவமைக்க அதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, 5ஜி சேவையை 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைவான எம்.எம். வேவ் பேன்ட்களை வழங்குகிறது.

அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை 2019 ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது. 2020 மற்றும் 2021 ஆண்டு வாக்கில் இந்தியா மற்றும் லத்தின் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.எம். வேவ் வசதி மற்றும் 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைந்த வர்த்தக ரீதியில் உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என குவால்காம் தெரிவித்துள்ளது.

இதுதவிர புது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 4ம் தலைமுறை ஆன்-டிவைஸ் ஏ.ஐ. என்ஜின், முந்தைய தலைமுறை மொபைல் பிராசஸரை விட மும்மடங்கு சிறப்பான ஏ.ஐ. செயல்திறன், ட்ரூ 4K HDR வீடியோ பதிவு செய்யும் வசதி, 3டி சோனிக் செனசார், உலகின் முதல் வர்த்தக ரீதியிலான அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 7 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் மூலம் உருவாகி இருக்கிறது. இந்த பிராசஸர் உலகின் முதல் கம்ப்யூட்டர் விஷன் ஐ.எஸ்.பி. வழங்கப்பட்டு இருப்பதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக தரத்தில் படமாக்கும் வசதி கொண்டிருக்கிறது. #Qualcomm #Snapdragon855
ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 2 இயர்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Apple #airpods2
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனம் இந்த ஆண்டு செப்டம்பரில் புது ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. பின் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற விசேஷ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இரு எதிர்பார்ப்புகளும் பொய்யாகி விட்ட நிலையில், பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியோ ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 2 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் இயர்போன் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேம்படுத்தப்பட்ட புது இயர்போன்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் ஐபோன் பயன்படுத்துவோரில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானோர் மட்டுமே ஏர்பாட்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் மாடல்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஏர்பாட்ஸ் இயர்போன்களின் விற்பனை அதிகரிக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக மேம்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ் சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கியோ தெரிவித்திருந்தார். எனினும் ஏர்பவர் சார்ஜிங் மேட் சாதனத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏர்பாட்ஸ் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டது. #Apple #airpods2
ஐபோன் மாடல்களில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் செயலியை அனுமதிக்க ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. #Apple #TRAI
டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.
ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.
அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது.
எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும்.
ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது. #Apple #TRAI
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் இயர்போன் ஜெப்-பீஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #bluetoothheadphones
இந்தியாவின் முன்னணி மின்சாதன உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் இந்தியாவில் புதிய ப்ளூடூத் ஹெட்போன்களை அறிமுகம் செய்தது. ஜெப்-பீஸ் (ZEB Peace) என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் கச்சிதமானதாகவும், வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியையும் கொண்டிருக்கிறது.
இசைப்பயிற்சிக்காக பழையரக இயர்போன் மூலம் கொண்ட சலிப்பும் மணிக்கணக்கிலுமான கடினப்பயிற்சிகளை கைவிட்டு, ஜெப்-பீஸ் உதவியுடன் வயர்களின் சிக்கல்களின்றி தடையில்லாத இசை அனுபவத்தை பெற முடியும்.
ஜெப்-பீஸ் ஒரு உண்மையான வயர்களில்லாத தனித்துவமான கருவியாக தரம் உயர்ந்துள்ளது. பார்க்கும் போதே ஸ்போர்ட் தோற்றத்துடன் பளபளப்பு கூட்டப்பட்டு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிரத்யேகமாக பிறை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஒலிச்சிதறல் இல்லாமல் இயங்க கூடியது.
காதுகளில் அதிக நேரம் பயன்படுத்த ஏதுவாக மிகவும் கனமில்லாத வகையில் வெறும் 4 கிராம்கள் மட்டுமே எடையை உடையது.

வசதியான வடிவமைப்பு:
ஜெப்-பீஸ் ஏர்போட்கள் மிகவும் துல்லியமாக இயங்கக் கூடிய வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, காதுகளுக்கு ஏற்ற வசதியான வடிவமைப்பினை கொண்டது. தினசரி உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்யும் போதும் ஏர்போட்கள் காதுகளில் இருந்து நழுவி விழாது என ஜெப்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய முக்கிய வேளைகளில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்.
இந்த ஹெட்செட்டுடன் மொபைல் போனை இணைப்பது மிக எளிமையாக துரிதமுமாக செய்திட முடியும். ஜெப்-பீஸ் இயர்போனில் அழைப்புகள் வரும்போது தானாகவே ஒரு இயர்போனாக மாறி துல்லியமான ஒலியினை தந்து கூடிய விரைவில் செயல்படத்துவங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாய்ஸ் அசிஸ்டண்ட்:
ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுடன் இணைந்து இயங்கும் ஜெப்-பீஸ் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இயர்போனை தட்டினாலே வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக்டிவேட் ஆகிவிடுவதால், இதனை பயன்படுத்துவது எளிமையாக இருக்கும்.

ரீசார்ஜபிள் பேட்டரி பெட்டகம்:
விரைவில் பேட்டரி அதன் சக்தியை இழந்துவிட்டதா கவலை வேண்டாம், பிரத்யேகமாக இயர்போட்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ரீசார்ஜபிள் பேட்டரி கேசில் வைத்துவிட்டால் கூடுதலாக 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைத்துவிடும். இந்த பேட்டரிகேஸ் மிகவும் எடைகுறைந்த, அளவில் சிறியதாக இருப்பதால் பயனர்கள் தங்களின் சட்டைப்பையில் அழகாக வைத்துக்கொள்ளலாம்.
இந்த வயர்லெஸ் இயர்போன்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கவர்ச்சிகரமான கருப்பு நிறத்தில், இந்தியாவின் அனைத்து முண்ணனி மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். இந்தியாவில் ஜெப்-பீஸ் இயர்போன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் நிறுவனம் புதிய எல்.இ.டி. மற்றும் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Philips
டி.பி.வி. டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய தொலைகாட்சிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்.இ.டி. டி.வி.க்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது.
தொலைகாட்சியின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அறையில் விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் மின்விளக்குகளை மிளிரச் செய்யும். புதிய டி.வி.க்களில் பிக்சல் பிரிசைஸ் ஹெச்.டி. வழங்கப்பட்டிருக்கிறது. இது புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக தெளிவான காட்சியை பிரதிபலிக்கும்.

பிலிப்ஸ் 4K டி.வி.க்கள் (6100/ 6700 சீரிஸ்) ஹெச்.டி.ஆர். பிளஸ் மற்றும் SAPHI வழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் தரவுகளை மிக எளிமையாக இயக்க வழி செய்கிறது. இதன் மைக்ரோ டிம்மிங் மென்பொருள் படத்தை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை மாற்றியமைக்கும்.
இதனுடன் டி.டி.எஸ். ஹெச்.டி. (DTS HD) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருப்பதால், சவுண்டு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, ஆடியோ தரம் இயற்கையாக வெளிப்படுகிறது.
புதிய 22 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடல் விலை ரூ.9,990 முதல் துவங்கி டாப்-என்ட் 65PUT6703S 65-இன்ச் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் நிறைந்து இருந்ததாக சுமார் 13 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். #Google #PlayStore #Apps
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 13 செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்து இருக்கிறது.
பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர செயலிகள் இடம்பெற்று இருந்தன.
இசெட் (ESET) பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர் பரப்பிய 13 செயலிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த செயலிகள் பிளே ஸ்டோரின் டிரென்டிங் பகுதியில் இடம்பெற்று இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Don't install these apps from Google Play - it's malware.
— Lukas Stefanko (@LukasStefanko) November 19, 2018
Details:
-13 apps
-all together 560,000+ installs
-after launch, hide itself icon
-downloads additional APK and makes user install it (unavailable now)
-2 apps are #Trending
-no legitimate functionality
-reported pic.twitter.com/1WDqrCPWFo
எனினும், மால்வேர் நிறைந்த செயலிகள் தற்சமயம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. கூகுள் இவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். கேமினை திறந்து விளையாட முற்படும் போது செயலி கிராஷ் ஆனது.
மேலும் இந்த செயலிகள் பயனர்களை கேம் சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது. இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருக்கிறது.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3.6 கோடி மொபைல் சாதனங்களை ஆட்வேர் மூலம் பாதிப்பில் ஆழ்த்த கூகுள் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. #Microsoft
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவின் மிதப்பு மிக்க நிறுவனங்களில் முதன்மை இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ம் ஆண்டில் இருந்து முதன்மையிடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் முதல் முறையாக பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவன மதிப்பு 75330 கோடி டாலர்களாக இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆகஸ்டு மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக உருவெடுத்த நிலையில், தற்சமயம் ஆப்பிள் நிறுவன மதிப்பு 74680 கோடி டாலர்களாக சரிந்துள்ளது. புதிய ஐபோன் மாடல்கள் எதி்ர்பார்த்த அளவு விற்பனையாகாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் 73660 கோடி டாலர்கள் மதிப்பு பெற்று மூன்றாவது இடத்திலும் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனம் 72550 கோடி டாலர்கள் மதிப்பு பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலிடம் பெற்று இருக்கும் நிலையில், சிலிகான் வேலியின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் ஆல்ஃபாபெட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக இருக்கிறது.
ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தகவல் திருட்டு விவகாரங்களில் சிக்கித்தவிக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் கிளவுட் சேவைகள் மற்றும் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர்.
கிளவுட், கேமிங் மற்றும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களின் விற்பனை மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மொத்தம் 2910 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது, இதில் 2019 முதல் காலாண்டு வருமானம் மட்டும் 880 கோடி ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம் மட்டும் 34 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் நிலையில், வருமானம் 19 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
குவால்காம் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் பிராசஸர் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Snapdragon
குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஃபிளாக்ஷிப் பிராசஸர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவால்காம் நிறுவனம் தனது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இவ்விழா டிசம்பர் 4ம் தேதி ஹவாயில் நடைபெற இருக்கிறது. இதே விழாவில் குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 8150 பிராசஸரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸர் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.
ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கடந்த ஆணஅடு நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப் உடன் அட்ரினோ 640 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய பிராசஸர் 'ஸ்னாப்டிராகன் 8XX' என்ற வகையில் பெயரிடப்படும் என கூறப்பட்டது.

புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மாடல் இருக்கும் என்றும், இது சில காலத்திற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்க்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குவால்காம் உருவாக்கி இருக்கும் புதிய பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 845 விட 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் மாநாட்டின் கரு முதல் 5ஜி அனுபவத்திற்கு தயாராகுகங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
குவால்காம் தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அசுஸ் நிறுவனத்தின் புதிய டியூரபிள் கேமிங் நோட்புக்-கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #ASUS #gaming #Laptop
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய TUF கேமிங் நோட்புக்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய TUF நோட்புக்-கள் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர் மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் நானோஎட்ஜ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டி.டி.எஸ். சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
புதிய அசுஸ் TUF FX505 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் MIL-STD-810G தர உறுதித் தன்மை கொண்டிருக்கிறது. இவற்றுடன் அசுஸ் நிறுவனம் TUF டெஸ்க்டாப் FX10CP மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த டெஸ்க்டாப் மாடலில் இன்டெல் கோர் i7 பிராசஸர் மற்றும் ஐசோலேட் செய்யப்பட்ட ஏர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP சிறப்பம்சங்கள்:
அசுஸ் TUF FX505 மாடலில் 15.6 இன்ச் LED-பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் ஆன்டி-கிளேர் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் வழங்கப்பட்டுள்ளது.
அசுஸ் TUF FX505 போன்று இல்லாமல், TUF FX705 மாடலில் 17.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920x1080 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் கொண்டிருக்கிறது.

புதிய TUF நோட்புக் மாடல்களை அசுஸ் நிறுவனம் MIL-810G மிலிட்டரி தரத்தில் உருவாக்கியிருக்கிறது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் பேக்லிட் கீபோர்டு, WASD கீகேப் டிசைன் கொண்டிருக்கிறது.
அசுஸ் TUF FX507 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் 2T2R MU-MIMO 802.11ac வைபை வசதி, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-ஏ 2.0 மற்றும் 3.1, ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் கொண்டிருக்கிறது.
இத்துடன் 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அரே மைக்ரோபோன், டி.டி.எஸ். ஹெட்போன்: X மற்றும் 7.1 சேனல் விர்ச்சுவல் சரவுன்ட் சவுன்ட் அனுபவம் வழங்குகிறது. மேலும் அசுஸ் ஹைப்பர்கூல் தெர்மல் தொழில்நுட்பம், ஆன்டி-டஸ்ட் கூலிங் சிஸ்டம், ஃபேன் ஓவர்பூஸ்ட் தொழில்நுட்பம், டூயல்-ஃபேன் கூலிங் சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் TUF டெஸ்க்டாப் FX10CP மாடலில் இன்டெல் கோர் i7 8700 பிராசஸர், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு, 32 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹார்டு டிரைவ், 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. கொண்டிருக்கிறது. இந்த டெஸ்க்டாப் மாடலிலும் தெர்மல் வடிவமைப்பு 802.11ac Wave 2 வைபை 2x2 ஆன்டெனாக்களை கொண்டுள்ளது.
அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP இந்திய விலை:
அசுஸ் TUF FX505 விலை இந்தியாவில் ரூ.79,990 என்றும், FX705 மாடலின் துவக்க விலை ரூ.1,24,990 என்றும் TUF டெஸ்க்டாப் FX10CP துவக்க விலை ரூ.91,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்புக் மற்றும் டெஸ்க்டாப் மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.






