என் மலர்
தொழில்நுட்பம்

ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியில் அற்புத அம்சங்கள்
ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #Twitter
ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ கன்ட்ரோல்கள் மிகவும் பயனுள்ள அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

திரையின் வலது புறம் அல்லது இடது புறங்களில் சிறிய கிளிக் செய்வதன் மூலம் வீடியோக்களை ஐந்து நொடிகளுக்கு முன்னரும், பின்னரும் ஃபார்வேர்டு செய்ய முடியும். யூடியூப் ஆப் இதற்கு ஏற்றார் போல் வேளை செய்கிறது, எனினும் இருமுறை கிளிக் செய்யும் போது வீடியோ பத்து நொடிகளுக்கு ஃபார்வேர்டு ஆகிறது.
ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் செயலியின் எந்த வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதனால் புது அம்சங்கள் அனைவருக்கும் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. #Twitter #Apps
Next Story






