என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியீட்டு தேதி
    X

    பிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியீட்டு தேதி

    பிளே ஸ்டேஷனில் பப்ஜி கேமின் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்து இருக்கிறது. #PUBG #PlayStation4



    ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் பிளே ஸ்டேஷன் 4 சாதனத்திற்கு வழங்கப்பட இருக்கும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நவம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளே ஸ்டேஷன் 4ல் பப்ஜி கேம் டிசம்பர் 8ம் தேதி வழங்கப்படும் என தெரிகிறது. பிளே ஸ்டேஷனில் அறிமுகமானதும் பப்ஜி கேம், ஸ்மார்ட்போன், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்து தளங்களிலும் கிடைக்கும்.

    பிளே ஸ்டேஷன் 4 சாதனத்தில் பப்ஜி கேம் சில மாற்றங்களுடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாடுவதற்கு ஏற்ப அந்த மாற்றங்கள் இருக்கும் என்பதால், கேமின் அனுபவம் வேறாக இருக்கும். பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜியில் வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    அமேசானில் வெளியீட்டு விவரம் பிழை காரணமாக இடம்பெற்று இருந்த நிலையில், உடனடியாக பதிவு நீக்கப்பட்டு விட்டது. 

    முன்னதாக ரெஸ்ட்இரா எனும் கேமிங் தளம் மற்றும் பி.எஸ்.என்.ப்ரோஃபைல்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியான தகவல்களில் பி.எஸ்.4 கேமிங் டேட்டாபேசில் பப்ஜி இருப்பதை உறுதிப்படுத்தின.

    செப்டம்பர் மாதத்தில் கொரிய கேம் ரேட்டிங் மற்றும் நிர்வாக குழு பி.எஸ்.4-க்கான பப்ஜி கேமினை வரிசைப்படுத்தி இருந்தது. சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) தளத்தில் பப்ஜி 1.0 வெளியிடப்பட்ட நிலையில் மற்ற தளங்களிலும் பப்ஜி வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
    Next Story
    ×