search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மீண்டும் ஃபேஸ்புக் பயனர் தகவல் திருட்டு
    X

    மீண்டும் ஃபேஸ்புக் பயனர் தகவல் திருட்டு

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் கடந்த மாதம் திருடப்பட்ட நிலையில், தற்சமயம் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. #Facebook #databreach



    ‘ஃபேஸ்புக்’ சமூக வலை தளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

    அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டுள்ளன. 

    இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.

    மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #databreach
    Next Story
    ×