search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்
    X

    யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

    யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. #SMARTTV



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் யு யுஃபோரியா ஆன்ட்ராய்டு ஸ்மாட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த முதல் டி.வி. மாடலாக அமைந்திருக்கிறது.

    யு யுஃபோரியா டி.வி.யில் 40-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் தரவுகளை டி.வி. திரையில் பார்க்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் யு யுஃபோரியா ஸ்மார்ட் டி.வி.யில் ஆப்டாய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிளே ஸ்டோரில் இருந்து பயனர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான செயலிகளை பயன்படுத்த முடியும். இதில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனினை டி.வி.யுடன் இணைத்து கேமிங் அனுபவிக்க முடியும்.



    மேலும் ஸ்மார்ட்போன்களில் சில பட்டன்களை கிளிக் செய்து முழு டி.வி.யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் சாதனங்களில் இருந்து தகவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு யுஃபோரியா டி.வி.யில் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 2 யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் 1 வி.ஜி.ஏ. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 வாட் சவுன்ட் அவுட்புட் கொண்டுள்ளது.

    இந்தியாவில் யு யுஃபோரியா ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. விலை ரூ.18,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
    Next Story
    ×