search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் ஹெச்.டி., 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 50 இன்ச் ஃபுல் ஹெச்.டி. வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஆப்டொய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் வயர்லெஸ் கன்ட்ரோல் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை டி.வி.யுடன் எளிமையாக இணைத்து, முழு டி.வி. மற்றும் கேம்களை விளையாட முடியும்.



    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் (1366x768 பிக்சல்) ஹெச்.டி. ரெடி 
    - 40 இன்ச் / 50 இன்ச் (1920x1080) ஃபுல் ஹெச்.டி. டைரக் எல்.இ.டி. பேனல்
    - குவாட்-கோர் பிராசஸர் டூயல் கோர் GPU
    - 1 ஜிபி ரேம்
    - 5.5 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டி.வி. சார்ந்த ஆன்ட்ராய்டு 7.0
    - வைபை 802.11b/g/n, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட் போர்ட்
    - 24W இன்பில்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் வேரியன்ட் விலை ரூ.13,999 என்றும், 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 50 இன்ச் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 
    Next Story
    ×