search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GigaFiber"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள் வெளியாகியுள்ளது. #JioGigafiber #offer



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிராட்பேன்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

    முழுவீச்சில் சேவைகள் துவங்கப்படும் முன்பாகவே பிரீவியூ சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சலுகையின் படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு வேகத்தை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

    அந்த வகையில் 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    எனினும், 100 ஜிபி டேட்டாவை ஒரே மாதத்திற்குள் பயன்படுத்திவிட்டால், பிரீவியூ சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது. பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.



    ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தில் டேட்டா வேகத்தை பொருத்த வரை நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் 4K தரம் கொண்ட வீடியோக்களையும் ஸ்டிரீம் செய்து கண்டுகளிக்க முடியும். முன்பதிவு செய்யக்கோரும் வலைத்தளத்தில் ஜிகாபிட் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் போது விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாட முடியும்.

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை பயன்படுத்த பாதுகாப்பு முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் ஜிகாஹப் ஹோம் சேவைக்கான நுழைவுத்தளமாக இருக்கும். முதற்கட்ட முன்பண கட்டணம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ மனி அல்லது பே.டி.எம். மூலம் செலுத்த முடியும். மொபைல் வயர்லெஸ் சேவையை போன்றே பிராட்பேன்ட் சேவைகளும் பிரீபெயிட் திட்டங்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    90 நாட்கள் பிரீவியூ திட்டம் நிறைவுற்றவுடன் வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். சேவையை தொடர விருப்பமில்லாதவர்கள் தங்களது சேவையை துண்டித்து, பாதுபாக்கு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவு நாடு முழுக்க அமோக வரவேற்பு பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JioGigafiber



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜிகாஃபைபர் சேவைக்கான வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு முக்கிய சந்தைகளில் இறுதிகட்ட இணைப்புகளுக்கான பணிகளுக்கு உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ சேவை துவங்கியதும், ஜியோ உடனான போட்டியை சமாளிக்க உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் அச்சம் கொள்வதே இந்த பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது.



    கேபிள் ஆப்பரேட்டர்களுடனான பிரச்சனையை தீர்க்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    “இறுதிகட்ட இணைப்புகளில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், மேலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தையில் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வோம்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் “நாடு முழுக்க சுமார் 900 நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.” என அவர் தெரிவித்தார்.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் வெற்றி இறுதிகட்ட கனெக்டிவிட்டி சார்ந்தது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜிகாஃபைபர் வணிக ரீதியில் துவங்க ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இணைப்பு வழங்க வேண்டியிருக்கும், அந்த வகையில் இது மொபைல் சேவைகளை டவர்கள் மூலம் வழங்குவதை விட கடினமானதாகும்.
    இந்தியாவில் ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிரீவியூ சலுகைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #JioGigafiber


    ஜியோ ஜிகாஃபைபர் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், சேவை இன்னும் முழுவீச்சில் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. எனினும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஜியோஃபைபர் பிரீவியூ சலுகை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்படும் போதும் இதேபோன்ற பிரீவியூ சலுகைகள் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் மூன்று மாத காலத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர்கள் ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 முன்பணம் செலுத்தி சேவைகளை பெறலாம். முதல் மூன்று மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சலுகைகளை பெற முடியும்.

    வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் அதிகளவு முன்பதிவு பெறும் நகரத்தில் சேவை முதலில் துவங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ டெலிகாம் சேவையில் ஆறு மாத காலம் இலவச பிரீவியூ சலுகை வழங்கப்பட்ட நிலையில், ஜிகாஃபைபர் சலுகையிலும் இலவச பிரீவியூ சலுகை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட டேட்டா மட்டுமின்றி கூடுதல் டேட்டா பெற டேட்டா டார்-அப் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் பயனர்கள் அதிவேக பிராட்பேன்ட் சேவையை சீராக பயன்படுத்தலாம். ஒவ்வொரு டேட்டா டாப்-அப் சலுகையிலும் குறைந்தபட்சம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் டேட்டா டாப்-அப்களை ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25 முறை பயன்படுத்த முடியும், இதனால் அதிகபட்சம் 1100 ஜிபி டேட்டா பெற முடியும். கடந்த வெளியான புகைப்படங்களின் படி பிரீவியூ சலுகை சார்ந்த விவரங்கள் தெரியவந்தது.
    ×