search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skyworth"

    • புதிய ஸ்கைவொர்த் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 620கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
    • இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இன் உள்புறம் டச் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன் உள்ளது.

    ஸ்கைவொர்த் EV6 II எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கைவொர்த் எலெக்ட்ரிக் வாகனம் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் ன்று CLTC சான்று பெற்று இருக்கிறது. சீன சந்தையில் புதிய EV6 II மாடலின் விலை 1 லட்சத்து 56 ஆயிரத்து 800 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரத்து 392 என்று துவங்குகிறது.

    ஸ்கைவொர்த் EV6 II மாடல் ஏர், பிளஸ், மேக்ஸ் மற்றும் பெரிசிடன்ட் எடிஷன் என நான்கு வித எடிஷன்களில் கிடைக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை புதிய EV6 II மாடல் 4720mm நீளம், 1908mm அகலம், 1696mm உயரம், 2800mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் வீல்கள், சிங்கில் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     

    இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இன் உள்புறம் டச் சென்சிடிவ் எல்சிடி ஸ்கிரீன், 12.3 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் மல்டிமீடியா, நேவிகேஷன் மற்றும் மொபைல் கம்யுனிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் சன்ரூஃப், ஏசி, ரியல் டைம் ஜிபிஎஸ், சியோமியின் விர்ச்சுவல் இன்டெலிஜன்ட் ரோபோட் வழங்ப்பட்டுள்ளது.

    புதிய ஸ்கைவொர்த் EV6 II மாடலில் 150 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் AIR மாடலில் 71.98 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்குகிறது. மற்ற மாடல்களில் 85.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    ஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.12,999 முதல் துவங்குகிறது. #smarttv


    சீன நிறுவனமான ஸ்கைவொர்த் இந்தியாவில் எம்20 சீரிஸ் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் இன்பில்ட் கேம், வைபை, லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் ஆப் ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. சீரிஸ் DTS சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், சிறப்பான ஆடியோ அனுபவம் கிடைக்கும். கூடுதலாக பயனர் விருப்பப்படி தேர்வு செய்ய பல்வேறு பிக்சர் மற்றும் ஆடியோ மோட் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 49-இன்ச் மாடலை தவிர்த்து 32 மற்றும் 43-இன்ச் மாடல்களில் ஐ.பி.எஸ். பேனல் கொண்ட ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்கைவொர்த் எம்20 சீரிஸ் பேஸ் மாடலாக இருக்கும் 32-இன்ச் டி.வி.யில் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே, 1366×768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், குவாட்-கோர் பிராசஸர் மற்றும் டூயல்-கோர் கிராஃபிக்ஸ் பிராசஸர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய எம்20 சீரிஸ் 43 இன்ச் மாடலில் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே 1920×1080 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் இன்பில்ட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இறுதியில் 49-இன்ச் மாடலிலும் ஃபுல் ஹெச்.டி. 1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 20 வாட் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 2 ஹெச்.டி.எம்.ஐ., 2 யு.எஸ்.பி. மற்றும் ஒரு வி.ஜி.ஏ. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஆப் ஸ்டோர் மற்றும் ஏ.பி.கே. செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி 32-இன்ச் வேரியன்ட் விலை ரூ.12,999, 43-இன்ச் வேரியன்ட் ரூ.22,999 மற்றும் 49-இன்ச் வேரியன்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் மூன்று டி.வி. மாடல்களையும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. #smarttv
    ×