search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரவணக்க நாள்"

    • பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
    • கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்லாவரம் கண்டோன்மெண்டில் மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.

    ஆண்களுக்கு நிகராக, ஆண்களைவிட அதிகமாக, தாய்மார்கள், பெண்கள் பங்கேற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    மொழி உரிமைதான் மாநில உரிமை.

    இன்றைக்கு என்னென்ன வழிகளில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒன்றிய அரசு மொழி திணிப்பை மேற்கொண்டு வருகிறது.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் அதை நம்பவேமாட்டார்கள். எனவே அ.தி.மு.க. பா.ஜ.க.வை விரட்டியடிக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் 2 கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம். இந்தி பாடம் இல்லாமலேயே இதையெல்லாம் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம்.

    இந்தி திணிப்பை போலவே இப்போது நீட் நெக்ஸ்ட் என்று அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறார்கள். இதை மாற்றிக்காட்டுவோம்.

    2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொதுக் கூட்டம் நடைபெற்ற இடம் மட்டுமின்றி பக்கத்து ரோடுகளிலும் கூட்டம் அலை மோதியது.

    • 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.
    • வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    திருவள்ளூர்:

    ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

    அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 188 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு ஆயுதப்படை துணைப் போலீஸ் சூப்பிரண்டு குமரன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

    • அ.ம.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.

    வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

    நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி தலைவர் என்.ஜி.தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துக் குமார் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பிரிவு செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன், தலைமை கழக பேச்சாளர் காரை கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் குறித்து பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம், சரளா தினகரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.மணி, சிட்டிபாபு, ராஜாமணி, மணிவண்ணன், நகர செயலாளர்கள் கண்ணதாசன், முத்துமுஹம்மத் யூனூஸ், சீனிவாசன், ஐயப்பன் உள்பட மாவட்ட பிற அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவரணி செயலாளர் பரத் நன்றி கூறினார்.

    • மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.
    • மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார்

     திருப்பூர்  :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஏம்.எம்.சதீஷ் தலைமை தாங்கினார்.

    மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் வேலம்பாளையம் பகுதி செயலாளர் சுப்பிரமணியம்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,மாவட்ட பொருளாளர்கே.ஜி.கிஷோர் குமார், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் ,அன்பகம் திருப்பதி, கே பி ஜி .மகேஸ்ராம், ஹரிஹரசுதன், எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் தண்ணீர் பந்தல் தனபால், நிர்வாகிகள் கண்ணபிரான் ,ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் நாளை ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ எம்.பி. பேசுகிறார்.
    • திரளாக பங்கேற்க பூமிநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை (25-ந் தேதி) வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ரோட்டில் உள்ள ஒபுளா படித்துறை சந்திப்பில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத் திற்கு மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். மாநில தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மொழிப்போர் தியாகி களுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க. சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திராவிட இயக்க போர்வாள், கழகப் பொதுச் செயலாளர், வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணிகளின் செய லாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×