என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் பேசிய போது எடுத்த படம்.
மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- அ.ம.மு.க. சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.
வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்
நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி தலைவர் என்.ஜி.தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துக் குமார் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பிரிவு செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன், தலைமை கழக பேச்சாளர் காரை கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம், சரளா தினகரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.மணி, சிட்டிபாபு, ராஜாமணி, மணிவண்ணன், நகர செயலாளர்கள் கண்ணதாசன், முத்துமுஹம்மத் யூனூஸ், சீனிவாசன், ஐயப்பன் உள்பட மாவட்ட பிற அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவரணி செயலாளர் பரத் நன்றி கூறினார்.






