search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு புகுந்து"

    • காதலிகளுக்கு விதவிதமான நகைகளும், ஊட்டியில் நிலமும் வாங்கி கொடுத்து அசத்தினார்
    • யாரையும் கூட்டு சேர்ப்பதில்லை, தனியாக சென்று நோட்டமிட்டு கொள்ளை

    நாகர்கோவில் :

    தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள்.

    இதில் கொள்ளை அல்லது நகை பறிப்பில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகள் போலீசாரின் கைகளில் சிக்கி விடுவார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தும் போது, திருடியதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறும்தகவல்கள் போலீசாரை சிலநேரம் வியப்பில் ஆழ்த்தும்.

    பல நேரங்களில் அவர்கள் கூறும் காரணத்தை கேட்டு, இதற்காகவா? திருடினே என்று கேட்டு அவனை உண்டு, இல்லையென ஆக்கிவிடுவதுமுண்டு. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று குமரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது.

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் மகேஷ் கார்த்திக் என்பவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

    வடசேரி போலீசார் இந்த நகை திருட்டு பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும் ஒரு நபரின் உருவம் ஒன்றை கைப்பற்றினர்.

    அந்த உருவ படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்த் (வயது 24) என்ற வாலிபர் பிடிப்பட்டார். பார்க்க டிப்-டாப் உடையுடன் காட்சி அளித்த அந்த வாலிபர் மீது முதலில் போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை.

    பின்னர் அவரிடம் விசாரித்த போது அவரது பேச்சும், நடை, உைட, பாவனையும் சந்தேகத்தை ஏற்படுத்த அவரை தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் மகேஷ் கார்த்திக் வீட்டில் திருடியது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருடியதற்கான காரணத்தை கேட்டனர். அதோடு எப்படி திருடினாய்? திருடிய நகையை என்ன செய்தாய்? கூட்டாளிகள் யார்? என்றும் போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர்.

    அனைத்து கேள்விகளுக்கும் எந்த சலனமும் இன்றி ஆனந்த் சிரித்து கொண்டே பதில் அளித்தார். அதன்விபரம்:-

    குமரி மாவட்டத்தில் தான் திருட்டு தொழிலை தொடங்கினேன். இதற்காக யாருடனும் கூட்டு சேரவில்லை. முதலில் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று அங்கு பூட்டிய வீடுகளை நோட்டமிடுவேன்.

    அந்த வீடுகளில் யார் வசிக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வேன். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளையும் பார்த்து கொள்வேன். பின்னர் அந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் கையுறை மற்றும் காலில் ஷூ அணிந்து செல்வேன். அங்கு கிடைக்கும் பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுவேன்.

    கொள்ளை அடித்த பணத்தை பெண்களுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்வேன். ஒரு பெண்ணிடம் மட்டும் இல்லை பல பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது.

    குறிப்பாக பணத்தேவையில் இருக்கும் பெண்களிடம் மட்டுமே தொடர்பு கொள்வேன். முதலில் அவர்களுக்கு முதலில் தேவையான பணத்தை கொடுப்பேன். அதன்பின்பு என் ஆசையை தெரிவிப்பேன். பணம் வாங்கியதால் அவர்களும் நான் கேட்பதை தருவார்கள். அப்போது அவர்களுக்கு நகைகளையும் வாங்கி கொடுப்பேன். இதில் அவர்கள் என்னிடம் மயங்கி விடுவார்கள்.

    இப்படி குமரி மாவட்டத்தில் மட்டும் 6 பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இவர்களுக்கு திருடிய பணத்தில் விதவிதமான நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன்.

    பெண்களை சந்திக்க செல்வதற்கு ஒருபோதும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவ்வாறு சேர்த்தால் மாட்டி கொள்வோம். இதனால் நான் இந்த இடங்களுக்கு தனியாகத்தான் செல்வேன்.

    அவர்களிடம் நான் என்ன செய்கிறேன், எப்படி நகை வாங்கி வந்தேன் என்பது பற்றி கூறமாட்டேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரது அனுபவங்கள் போலீசாருக்கு புதிதாக இருந்தாலும் அவர் திருடிய பணத்தில் ஊட்டியில் நிலம் வாங்கியிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆனந்த் எங்கெங்கு திருடியுள்ளார்? மொத்தம் எத்தனை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உள்ளது? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • 2 வாலிபர்களில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளார்
    • மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்

    கொடுமுடி, 

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி பாவாத்தாள் ( 80 ). இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பாவாத்தாள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர்.

    அருகில் உள்ள குடிநீர் பைப்பில் குடிக்குமாறு கூறிவிட்டு பாவாத்தாள் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து 2 வாலிபர்களில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

    திடீரென அந்த வாலிபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மூதாட்டி திருடன்.. திருடன் என கூச்சலிட்டார்.

    ஆனால் அந்த வாலிபர் வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.

    மூதாட்டி இதுகுறித்து ஈரோட்டில் உள்ள அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது மகன் வீட்டுக்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    • இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது
    • பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சார்ந்தவர் ஜனகராஜ் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (27).

    தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது தாயார் ஜெயந்தியை வீட்டில் விட்டுவிட்டு இவரும் இவரது மனைவி தாரணியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளனர். வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார்.

    இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ லாக்கரும் உடைக்கப் பட்டு இருந்தது.

    அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் காணாமல் போயிருந்தது. உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பார்த்த சந்தோஷ் குமார்

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வீட்டிற்கு சென்ற தானபாலின் தாய்மாமா சீரங்கன் குடும்பத்தினர் வந்து பழனியம்மாள் மற்றும் தனபாலின் மனைவி விஜயலட்சுமி
    • சின்னப்பொண்ணு. தனசேகர். செல்வராஜ் ஆகி யோரை கைது செய்துள்ளனர்.


    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சேடப்பட்டி கிராமம் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 32) இவர் தாரமங்கலம் அண்ணாசிலை அருகே டைலர் கடை வைதுள்ளார்.

    நேற்று வழக்கம் போல் தனபால் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற தானபாலின் தாய்மாமா சீரங்கன் குடும்பத்தினர் வந்து பழனியம்மாள் மற்றும் தனபாலின் மனைவி விஜயலட்சுமி ஆகியோரிடம் உங்களுடைய சொத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூறி இருவரையும் தாக்கி வீட்டிற்கு உள்ளே இருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.இதுபற்றி தனபால் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சின்னப்பொண்ணு. தங்க ராஜ். கோவிந்தம்மாள். பூபதி. கார்த்தி. மாணிக்கம். தனசேகர். செல்வராஜ் ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து சின்னப்பொண்ணு. தனசேகர். செல்வராஜ் ஆகி யோரை கைது செய்துள்ளனர்.தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    • தீபின் தாய் மற்றும் தந்தையையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
    • போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு பன்னீர்கோணத்தைச் சேர்ந்தவர் தீபின் (வயது 31). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது செம்மாங்காலையை சேர்ந்த சந்தோஷ், ஜித்து, மகேஷ், கடமகோட்டை சேர்ந்த ரகு மேலும் 3 பேர் வந்து தீபினிடம் பேச வேண்டும் என கோரி அழைத்துள்ளனர். ஆனால் தீபின் வர முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இதனால் தீபினை கம்பி மற்றும் கையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தடுக்க சென்ற தீபின் தாய் மற்றும் தந்தையையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல இடைக்கோடு புல்லுவிளையை சேர்ந்த சந்தோஷ் கொடுத்த புகாரில் மேல்புறம் சந்திப்பில் சந்தோஷ் மற்றும் தனசேகர் ஆகி யோர் டீ குடித்து க்கொண்டிருந்த போது தீபின் இருவரையும் அடித்து காயப்படுத்தியதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள மல்லிக்குட்டை பகுதியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுவின் வீட்டிற்கு சென்ற லோகு அவரிடம் தகராறு செய்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த அழகேசன் மனைவி மஞ்சு (வயது 38). இவருக்கும் சின்னசோரகை, தேங்காய் கொட்டாய் பகுதியை சேர்ந்த லோகு (35) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுவின் வீட்டிற்கு சென்ற லோகு அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மஞ்சுவின் வீட்டில் இருந்த விசைத்தறியை சேதப்படுத்திவிட்டு சென்றார்.

    இதுபற்றி மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் லோகு மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றனர்.
    • பீரோவை உடைத்து பீரோவில்இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே செக்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபால் மனைவி பாலா (வயது 60) . கணவர் இல்லை வீட்டில் தனியாக வாஸ்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் இவரு வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து பீரோவில் உடைத்து விரைவில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை மிரட்டிய 10 பேர் கும்பல்
    • கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை 10 பேர் கொண்ட கும்பல் மிரட்டியது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் தாலுகா சிலம்பி மங்கலம் கிராமத்தை சேர்ந்த நான் தற்போது கடலூர் கோண்டூர் மீராகிரு–ஷ்ணன் நகரில் தற்காலிக–மாக வசித்து வருகிறேன். எனது தந்தை, தாயும் தனியாக இருக்கும் போது, ராமநாத குப்பத்தை சேர்ந்த சுந்தரபாலு, மல்லிகா, திலகா உள்ளிட்ட 10 பேர் கும்பல் எனது தாய், தந்தை–யை வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி அறிந்த நான் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோழி–பண்ணை வைத்திருப்ப–வர்கள் அந்த பகுதி யில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் ஏராளமான நாய்கள் அந்த கழிவுகளை தின்ப தற்காக வருகின்றன.

    இங்கு வரும் நாய்கள் அந்த பகுதியில் உள்ள கால்நடை களை கடிப்பதாகவும் கூறி எனது பெற்றோரை மிரட்டு–கின்ற னர். இதற்கு காரணம் அந்த பகுதியில் தனியார் கம்பணி உள்ளது. இங்கு திருட்டு செயலில் ஈடுபடும் கும்பலுக்கு எனது பெற்றோர் இடையூ–றாக இருப்பதாக கருதி பிரச்சினையை திசை–திருப்பி வருகிறார்கள். இதனால் எனது பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி புதுசத்திரம் போலீசில் புகார் தெரிவி–த்தும் எந்தவித நடவடிக்கை–யும் இல்லை. எனவே இது தொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×