மார்த்தாண்டம் அருகே வீடு புகுந்து தாக்குதல்

தீபின் தாய் மற்றும் தந்தையையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே வீடு புகுந்து தாக்குதல்
Published on

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு பன்னீர்கோணத்தைச் சேர்ந்தவர் தீபின் (வயது 31). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது செம்மாங்காலையை சேர்ந்த சந்தோஷ், ஜித்து, மகேஷ், கடமகோட்டை சேர்ந்த ரகு மேலும் 3 பேர் வந்து தீபினிடம் பேச வேண்டும் என கோரி அழைத்துள்ளனர். ஆனால் தீபின் வர முடியாது என கூறியதாக தெரிகிறது.

இதனால் தீபினை கம்பி மற்றும் கையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தடுக்க சென்ற தீபின் தாய் மற்றும் தந்தையையும் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல இடைக்கோடு புல்லுவிளையை சேர்ந்த சந்தோஷ் கொடுத்த புகாரில் மேல்புறம் சந்திப்பில் சந்தோஷ் மற்றும் தனசேகர் ஆகி யோர் டீ குடித்து க்கொண்டிருந்த போது தீபின் இருவரையும் அடித்து காயப்படுத்தியதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com