வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

2 வாலிபர்களில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளார்மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்
வீடு புகுந்து மூதாட்டியிடம்  7 பவுன்  நகை பறிப்பு
Published on

கொடுமுடி, 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி பாவாத்தாள் ( 80 ). இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பாவாத்தாள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர்.

அருகில் உள்ள குடிநீர் பைப்பில் குடிக்குமாறு கூறிவிட்டு பாவாத்தாள் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து 2 வாலிபர்களில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

திடீரென அந்த வாலிபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மூதாட்டி திருடன்.. திருடன் என கூச்சலிட்டார்.

ஆனால் அந்த வாலிபர் வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.

மூதாட்டி இதுகுறித்து ஈரோட்டில் உள்ள அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது மகன் வீட்டுக்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com