வீடு புகுந்து தாக்கிய 8 பேர் மீது வழக்கு 3 பேர் கைது, 5பேர் தலைமறைவு

வீட்டிற்கு சென்ற தானபாலின் தாய்மாமா சீரங்கன் குடும்பத்தினர் வந்து பழனியம்மாள் மற்றும் தனபாலின் மனைவி விஜயலட்சுமிசின்னப்பொண்ணு. தனசேகர். செல்வராஜ் ஆகி யோரை கைது செய்துள்ளனர்.
வீடு புகுந்து தாக்கிய 8 பேர் மீது வழக்கு 3 பேர் கைது, 5பேர் தலைமறைவு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள சேடப்பட்டி கிராமம் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 32) இவர் தாரமங்கலம் அண்ணாசிலை அருகே டைலர் கடை வைதுள்ளார்.

நேற்று வழக்கம் போல் தனபால் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற தானபாலின் தாய்மாமா சீரங்கன் குடும்பத்தினர் வந்து பழனியம்மாள் மற்றும் தனபாலின் மனைவி விஜயலட்சுமி ஆகியோரிடம் உங்களுடைய சொத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூறி இருவரையும் தாக்கி வீட்டிற்கு உள்ளே இருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.இதுபற்றி தனபால் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சின்னப்பொண்ணு. தங்க ராஜ். கோவிந்தம்மாள். பூபதி. கார்த்தி. மாணிக்கம். தனசேகர். செல்வராஜ் ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து சின்னப்பொண்ணு. தனசேகர். செல்வராஜ் ஆகி யோரை கைது செய்துள்ளனர்.தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com