வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகிலுள்ள மல்லிக்குட்டை பகுதியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுவின் வீட்டிற்கு சென்ற லோகு அவரிடம் தகராறு செய்துள்ளார்.
வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த அழகேசன் மனைவி மஞ்சு (வயது 38). இவருக்கும் சின்னசோரகை, தேங்காய் கொட்டாய் பகுதியை சேர்ந்த லோகு (35) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுவின் வீட்டிற்கு சென்ற லோகு அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மஞ்சுவின் வீட்டில் இருந்த விசைத்தறியை சேதப்படுத்திவிட்டு சென்றார்.

இதுபற்றி மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் லோகு மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com