search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஸ்ஸி"

    • ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
    • ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    மெஸ்ஸியின் மாயாஜாலத்தை எதிர்பார்த்து டிக்கெட் வாங்கிய ஹாங்காங் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்ப அளிக்க நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.

    ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.

    ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ரசிகர்கள் கோபத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்தனர்.

    இதனால் போட்டியை முன்னெடுத்த நிர்வாகிகள் தரப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர்கள் டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்பப் பெறலாம் என்றும், ஆனால் சட்ட ரீதியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கட்டணத்தை திருப்பித் தருவதால் 7.1 மில்லியன் டாலர் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மெஸ்ஸி ரசிகர்கள் தோராயமாக 4,880 ஹாங்காங் டாலர் செலவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 38,000 ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர்.

    ரசிகர்கள் நீதிமன்றம் அளவுக்கு செல்ல காரணமாக இருந்தது மெஸ்ஸி இதற்கு அடுத்த போட்டியில் விளையாடியதுதான். இந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வெடுத்த மெஸ்ஸி, அடுத்த நாள் ஜப்பான் அணிக்கு எதிராக களமிறங்கினார் என்பதே ரசிகர்களை கொதிப்படைய வைத்திருந்தது.

    • 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
    • முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த கிளப் அணிகளுக்கு இடையேயான கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாஷ்வில்லே அணி மற்றும் இண்டர் மியாமி அணிகள் மோதின.

    இந்த போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஃபுளோரிடாவில் தொடங்கிய இப்போட்டியில், 7-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் போட முயற்சித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு சற்று மேல் நோக்கி சென்றது. எனினும், மியாமியின் மற்றொரு வீரர் லூயிஸ் சுவாரஸ் 8-வது நிமிடத்தில் மெஸ்ஸி பாஸ் செய்து கொடுத்த பந்தை கோல் ஆக மாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இரண்டாம் பாதியிலும் மியாமி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில், மியாமி வீரர் ராபர்ட் டெய்லர் தலையால் அபாரமாக கோல் அடித்தார்.

    கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த நாஷ்வில்லே அணி, 80-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. ஆனால் முக்தார் அடித்த அந்த கோல் ஆப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது.

    இறுதியாக 90+3 நிமிடத்தில் நாஷ்வில்லே அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் சாம் சுர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார்.

    ஆட்டநேர முடிவில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்வில்லேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.   

    • கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர்
    • கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன்

    இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி முதல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் காசா நகரில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

    ஹமாஸ் படை தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் எஸ்தர் குனியோ (வயது 90) என்ற மூதாட்டி ஒருவர் சாதுர்யமாக உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து எஸ்தர் குனியோ கூறியதாவது :-

    கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது நான் அர்ஜென்டீனாவை சேர்ந்தவர் என கூறினேன். அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன? என கேட்டனர்.

    கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன். அதனை கேட்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் 'செல்பி' போட்டோ எடுத்தனர். மேலும் என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர் என்று அவர் கூறினார்.

    • சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார்.
    • சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.

    லண்டனில் 2023-ம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவர் விருத்தினைத் தட்டிச் சென்றார்.

    கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த அணியின் மேலாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா வென்றார்.

    சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.    

    • அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது.
    • மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.

    புவெனஸ் ஐரிஸ்:

    கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.

    அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.

    கத்தாரில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. இதனால் அவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றது.
    • உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    நியூயார்க்:

    கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகி உள்ளதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ரொனால்டோவிடம் இளம் ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக் கூறினார்.
    • இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    துபாய்:

    சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்நிலையில், போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய ரொனால்டோவிடம் இளம் ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக் கூறினார்.

    இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ, அந்த ரசிகரைக் கடிந்துகொண்டு வேகமாக வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    • உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
    • மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.

    இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.

    ×