என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தெலுங்கானாவில் மெஸ்ஸி கால்பந்து போட்டிக்கு ரூ.100 கோடி செலவு: பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
    X

    தெலுங்கானாவில் மெஸ்ஸி கால்பந்து போட்டிக்கு ரூ.100 கோடி செலவு: பா.ஜ.க.வினர் எதிர்ப்பு

    • ரேவந்த் ரெட்டி தனது கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி பொது மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
    • இதே பணத்தை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடலாம்.

    திருப்பதி:

    அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ரெட் ஹில்சில் உள்ள சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    அவருடன் படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெஸ்ஸி வருகைக்காக அதிகளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கால்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்றக் எதிர் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வர் ரெட்டி தலைமையில் நேற்று சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர்.

    போலீசார் அவர்களை போலீசார் தடுத்தபோது பதட்டமான சூழல் ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.பா.ஜ.க தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது மகேஸ்வர் ரெட்டி கூறுவையில்:-

    முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி பொது மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

    இதே பணத்தை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடலாம். நாட்டின் சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சிங்கரேணி மைதானம் கால்பந்து கண்காட்சிக்காக உழப்படுகிறது.

    மெஸ்ஸிக்கு அரசாங்கம் எந்தத் துறைகளிலிருந்து பணத்தை எடுத்தது. அது எப்படி செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் எங்களிடம் சொல்ல வில்லை என்றால், நாங்கள் கால்பந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம்.

    முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் உங்களுடன் கால்பந்து விளையாடுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×