search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மகும்பல்"

    • கூலித்தொழிலாளியை மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    நத்தம் அருகே வலைய பட்டிைய சேர்ந்தவர் சின்னையா(45) . கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு தூங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அரிவாளால் சின்னையாவை சரமாரியாக வெட்டினர். இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் ஒன்றுகூடினர்.

    இதை பார்த்ததும் அவரை வெட்டிய மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயங்களுடன் சின்னை யாவை மீட்ட அக்கம்பக்க த்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசா ரணையில் முன்விரோதம் காரணமாக சின்னையாவை அந்த கும்பல் தாக்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை. வைத்தியநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் பாபு (47). இவர் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரும்பு சப்ளை செய்த கடைகளில் இரவில் பணம் வசூல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் பிரகாஷ் பாபு நேற்று இரவு மண்ணடி பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் மொத்தம் ரூ.8 லட்சம் பணத்தை வசூல் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    மழை பெய்து கொண்டு இருந்ததால் அவர் கடற்கரைசாலையோரம் உள்ள ஒரு கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார். அப்போது அருகில் நின்ற வாலிபர் ஒருவர் பணப்பை மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவர் ஒன்றை கொடுத்தார். அதனை பணம் இருந்த பை மீது சுற்றி வைத்துக்கொண்டு பிரகாஷ் பாபு சிறிது நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ்பாபு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய பிரகாஷ் பாபு மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். உடனே மர்ம நபர்களில் ஒருவன் அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் பணப்பைபை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்பாபு கத்தி கூச்சலிட்டதும் மர்ம கும்பல் கத்தியால் அவரை தாக்கினர். இதில் பிரகாஷ் பாபுவின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மர்ம கும்பல் ரூ.8 லட்சத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த பிரகாஷ்பாபு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது வலது கையில் 7 தையல் போடப்பட்டுள்ளது

    இதுகுறித்து பிரகாஷ்பாபு போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரகாஷ்பாபு பணம் வசூலித்து வருவதை அறிந்து மர்ம நபர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவரை நீண்ட நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தூத்துக்குடி கும்பலுக்கு வலைவீச்சு
    • ராணுவவீரர் வீட்டில் திருடியவர் கைது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காளபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவர் கவுதமபுரம் கிராமத்தில் நடந்த உறவினருடைய துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.

    இந்த நிலையில் பகல் 12 மணியளவில் அவருடைய இரும்பு கதவை மர்ம நபர் ஒருவர் உடைத்து வீட்டின் உள்ளே சென்றார்.

    இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்டு கூச்சலிட்டார். இதை அறிந்த மர்ம நபர் வீட்டின் சுவர் மீது ஏறி தப்பி ஓடி அருகில் இருந்த காட்டுப் பகுதியில் தலைமறைவாகினார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா (வயது 33) என்பது தெரிய வந்தது.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட கும்பல் குழுவாக வந்துள்ளது. குடியாத்தம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் தீவிர சோதனை செய்தனர். போலீசார் வருவதை அறிந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் மாவட்ட முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வீட்டில் திருடி பிடிபட்ட முத்து ராஜாவை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    • சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது

    சேலம்:

    சேலம் கருப்பூர் மேட்டுப்பதி சுடுகாடு அருகே தகரக்கொட்டகை வீட்டை வாடகைக்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், நேற்று மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு நம்பர் லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கருப்பூர் பனங்காட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 48), சங்ககிரி கேசவன் (35), கருப்பூர் செல்லப்பட்டி புதூர் செல்லதுரை (42) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்று வந்ததும், சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது. அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 840 ரூபாய், மடிக்கணினி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ஜன்னல் ஓரமாக ராகுலின் சட்டை இருந்தது அதை கீழே கம்பியால் சட்டையை லாவகமாக எடுத்தனர்.
    • வீட்டிற்குள் நுழைந்து வீட்டினுள் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பூந்தோட்ட பகுதியில் நாராயணன் நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 30) இவர் நேற்று சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அப்போது வீட்டின் ஓரமாக ஜன்னல் கதவு திறந்தபடி இருந்தது. பின்னர் அங்கு சென்ற மர்ம நபர் திறந்த ஜன்னல் ஓரமாக ராகுலின் சட்டை இருந்தது அதை கீழே கம்பியால் சட்டையை லாவகமாக எடுத்தனர். பின்னர் அந்த சட்டையில் இருந்த வாட்ச் மற்றும் 8000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இன்று வீட்டுக்கு திரும்பிய ராகுல் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாதுரியமாக திருடி சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோன்று விழுப்புரம் மணி நகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டினுள் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். வீட்டில் உரிமையாளர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை போனதை அறிந்தார் .இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.

    ×