search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த காயம்"

    • ரேஷ்மா தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த வர் முருகன் (வயது 36). கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேஷ்மா சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது மகளை அழைத்து வர பிரிதிவிமங்கலத்தில் இருந்து மூரார்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தேரிப்பட்டு அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

    தகவல் அறிந்த தியாகதுரு கம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து முருகன் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரை வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விடு முறைக்காக தனது மகளை அழைத்து வர சென்ற தந்தை விபத்தில் இறந்து போன சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர்.
    • இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    சென்னை திருவெற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க பிரமுகர். இவரது மகன் காமராஜ் (வயது 35) இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர். கடந்த மாதம் 26-ந் தேதி காமராஜ் தனது அலுவகத்தில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் காமராஜை சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூரை சேர்ந்த அரவிந்தன்(25), இளந்தமிழன்(23), தினேஷ்(31), மனோ என்கிற மணவாளன்(29),காந்தி(23), திருவள்ளுர் மாவட்டம் கவுண்டர்பாளையம் ஜமாலுதின்(31) ஆகியோர் இன்று கடலூர் ஜே.எம். எண்.3 நீதிபதி ரகோத்தம்மன் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எண்ணூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின
    • கோபத்தில் ரஜாவத் ஓடிச்சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்தார்

    மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம்.

    இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து வந்த ரஜாவத்தின் அண்டை வீட்டுக்காரர் விமல் அசலா (35). அசலா, அந்நகரின் நிபானியா பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆளுக்கொரு நாய் வளர்த்து வந்தனர். இருவரும் அவரவர் நாய்களுடன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    இவர்கள் வழக்கம் போல நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கிருஷ்னா பாக் காலனியில் நடந்து சென்ற போது அவர்களது இரு நாய்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின. இதனை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

    இதில் கோபமடைந்த ரஜாவத், வேகமாக தான் வசிக்கும் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தார். வந்ததும் முதலில் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்ட ரஜாவத், அசாலா நின்றிருந்த இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் அசலா மற்றும் அங்கிருந்த 27 வயதான ராகுல் வர்மா என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. அங்கு சண்டையின் போது அருகில் நின்றிருந்தவர்களில் 6 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் மிக தீவிரமாக காயமடைந்துள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததை அடுத்து கஜ்ரானா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அசலாவும், ராகுல் வர்மாவும் உயிரிழந்ததாக அறிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து ரஜாவத், அவருக்கு உதவியதாக அவர் மகன் சுதிர் மற்றும் உறவினர் சுபம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறது.

    எந்தவித முன்பகையும் இல்லாதவர்களுக்கிடையே நாய்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மோதல் ஏற்பட்டதும், மோதல் கொலையில் முடிந்து இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ரமேஷ் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). வியாபாரி. இவர் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கொரல் அருகேயுள்ள சாலையில் வந்த போது, நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
    • மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ராமநாதன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன் ஹரிகரன் (13) சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். ராமநாதன்குப்பம் பகுதியில் சுமார் 40 அடி உயர தண்ணீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பட்டத்தின் நூல் அறுந்தது. உடனே பட்டத்தை பிடிப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மீது ஓடிய ஹரிகரன் கால் தவறி எதிர்பாராத விதமாக தொட்டியில் இருந்து கீழே விழுந்தான். பயங்கர சத்தத்துடன் அலறி கொண்டு தரையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வலியால் உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்து மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலியானார்.
    • குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 50) அதே ஊரைசேர்ந்த குணபூசணி (வயது 52) இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகில் ரோட்டோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சேந்தநாடு சென்ற வேன் இவர்கள் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். ராணி சம்பவ இடத்திலே இறந்தார். குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    மேலும்இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கோபு மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் கோபு (வயது 32) , இவர் மோட்டார் சைக்கிளில் சிறுநெசலூர் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேப்பூர் கூட்டுரோட்டில் பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32), என்பவரும், ராமசந்திரன் (வயது 24) ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2பேரையும் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நீதிமன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார் சேலம் விருத்தாசலம் சாலையில் வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி அருகே தே புடையூர் கைகாட்டி அருகே சென்றபோது விருத்தாசலத்திலிருந்து கர்நாடக கார் கோபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய கோபுபலத்த காயமடைந்தார் அவருடன் சென்ற ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சு பகுதியிலும் காயம் ஏற்பட்டது இவர்கள் 3 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைகாக கோபுவை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் ராமச்சந்திரன் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைகாக சேர்க்கபட்டுள்ளனர். 

    விபத்தில் காயம் அடைந்த 3 பேரும் கனியாமூர் தனியார் பள்ளி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி ஏற்கனவே கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யபட்டனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வந்து தற்போது விருத்தாசலம் நீதி மன்றத்தில் தினந்தோறும் கையெப்பம் போட்டு வருகின்றனர் நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட சென்ற போது தான் விபத்தில் சிக்கி கொண்டனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

    • கள்ளக்குறிச்சியில் இருந்து சார்வாய் ஊருக்கு செல்ல தனியார் பஸ் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார்.
    • அப்பொழுது இந்திலியை கடக்கும் பொழுது பஸ்ஓசை டிவைர் திடீரென பிரேக் போட்டதால் செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

     கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகம்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர். செல்லம்மாள். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சார்வாய் ஊருக்கு செல்ல தனியார் பஸ் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்திலியை கடக்கும் பொழுது பஸ்ஓசை டிவைர் திடீரென பிரேக் போட்டதால் செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    • ரவுண்டானா பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது எதிரே வந்த ஆட்டோ மொபட் மீது மோதியது இதில் சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). விவசாயி.

    இவர் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×