search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பதி பலி"

    • பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    • விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா(20). நேற்றிரவு இவர்கள் மோட்டார்சைக்கிளில் பண்ணக்காரன்பட்டி திருமண விழாவிற்கு சென்றனர்.

    கோவிந்தராஜ் மோட்டார்சைக்கிளை ஓட்டினார், ரேணுகா பின்னால் அமர்ந்திருந்தார். செஞ்சேரி பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரி கோவிந்தராஜ் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேணுகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ரேணுகாவை மீட்டு பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரேணுகாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

    விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவளம் அருகே நடந்து சென்றனர்.
    • சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் தம்பதி மீது மோதியது.

    கோவை:

    கோவை கணபதி நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கார் டிரைவர்.

    இவரது மனைவி லதா (43). இவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீஜா (21), ஜீவஸ்ரீ (17) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வேதனை அடைந்து வந்தனர்.

    சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவளம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தலை நசுங்கி கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஞ்ஜின் உடனே கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி தம்பதி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இந்த தம்பதியினருக்கு தர்னிஷ், வாசுலேகா என 2 குழந்தைகள் உள்ளனர்.

    ராஜேந்திரனும், அவரது மனைவி தேவியும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தனர். தினமும் கணவன், மனைவி 2 பேரும் அதிகாலையிலேயே சைக்கிளில் புறப்பட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலையும் வழக்கம்போல கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு புறப்பட்டனர். காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து பூலுவப்பட்டிக்கு சைக்கிளில் சென்றனர்.

    அப்போது சிறுவாணி சாலையில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஆலாந்துறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    திடீரென அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பஸ்சில் 2 பேர் சிக்கியது தெரியாமல் பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரின் உடலும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

    இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். மேலும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.

    அவரை தொண்டாமுத்தூர் போலீசார், ஆலாந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் வேலைக்கு சென்ற கணவன்- மனைவி அரசு பஸ் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது உருக்குவதாக இருந்தது.

    இதற்கிடையே சிறுவாணி சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது.

    இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே இங்கு சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    தம்பதிக்கு சொந்தமாக விவசாய நிலம் வீட்டின் அருகே உள்ளது. நிலத்திற்கு செல்வதற்காக இன்று காலை சுமார் 7 மணி அளவில் சரவணன் நடந்து சென்றார். வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.

    அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    இதனை அறியாமல் சரவணன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தி நிலத்திற்கு ஓடி வந்தார். அப்போது சரவணன் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியாமல் அவரை தூக்க முயன்றார். இதில் சாந்தி மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விழுப்புரம் அருகே இன்று காலை விபத்து நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி
    • தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி லாரி மற்றும் கண்டெய்னர்களை நிறுத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருக உள்ள பையூர்கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.(வயது 45). அவரது மனைவி அம்சவள்ளி. இவர்கள் 2 பேரும் புதுவை அருகே திருக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு செங்கல் சூளையில் தீ வைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்ததும் இன்று அதிகாலை கணவன்- மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பையூர் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

    விழுப்புரம் அருகே அயனம்பாளையம் பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சாலை ஒரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி அம்சவள்ளி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜயசங்கர் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கான முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த சிலநாட்களாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி லாரி மற்றும் கண்டெய்னர்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால்தான் இது போன்ற உயிர்ப்பலி ஏற்படுகிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே வாகனங்களை நிறுத்துவதை தடை செய்யவேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டு உள்ளது. 

    ×