search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple killed"

    • விழுப்புரம் அருகே இன்று காலை விபத்து நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி பலி
    • தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி லாரி மற்றும் கண்டெய்னர்களை நிறுத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருக உள்ள பையூர்கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.(வயது 45). அவரது மனைவி அம்சவள்ளி. இவர்கள் 2 பேரும் புதுவை அருகே திருக்கனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு செங்கல் சூளையில் தீ வைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்ததும் இன்று அதிகாலை கணவன்- மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பையூர் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

    விழுப்புரம் அருகே அயனம்பாளையம் பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சாலை ஒரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி அம்சவள்ளி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜயசங்கர் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கான முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த சிலநாட்களாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி லாரி மற்றும் கண்டெய்னர்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால்தான் இது போன்ற உயிர்ப்பலி ஏற்படுகிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே வாகனங்களை நிறுத்துவதை தடை செய்யவேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டு உள்ளது. 

    கடலாடி அருகே கணவன் மனைவி கிணற்றில் பிணமாக கிடந்தது குறித்து மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் கடலாடி குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (58), விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (52). இவர்களது மகன்வெங்கடேசன், மகள் சுகுணா ஆகியோர் திருப்பூரில் வசித்து வருகின்றனர்.

    கண்ணனுக்கு குன்னத்தூரில் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பயிர் செய்ய அவரும், அவரது மனைவியும் நிலத்திலேயே வீடு கட்டி தங்கியிருந்தனர்.

    நேற்று முன்தினம் காலை கண்ணனும், வள்ளியம்மாளும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்களை கொன்று மர்ம கும்பல் கிணற்றில் வீசி சென்றனர்.

    இந்த இரட்டை கொலை குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து, அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் பக்கத்து நில விவசாயி பாபு மற்றும் அப்பகுதி மக்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், கொடூர கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. வனிதா மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் அண்ணாதுரை, சின்னராஜ், குணசேகரன் ஆகியோரது தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

    இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இவர்களுக்கு முன்விரோதியும் இல்லை தம்பதியரின் மகன் வெங்கடேசன் மற்றும் உறவினர்களிடம் வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×