search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள உயர்நீதிமன்றம்"

    உயர்நீதிமன்ற தீர்ப்பால் நாங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என அதிலா-பாத்திமா ஜோடி தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர். 

    அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். 

    இது குறித்த அறிந்த இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்  பாத்திமா அவரது உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். 

    இதை அடுத்து அதிலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  அதில் தானும் தனது துணைவியார் பாத்திமா நூராவும் குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். 

    தன்னுடன் தங்குவதற்காக ஆலுவாவுக்கு வந்த பாத்திமாவை அவரது குடும்பத்தினர் கடத்திச் சென்றதாகவும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று நீதிபதி வினோத் சந்திரன் உத்தரவிட்டார். மேலும் ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கையும் அவர் முடித்து வைத்தார்.

    இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிலா, ஓரின சேர்க்கையாளர்கள் சமூகத்திடம் இருந்து தங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும்,  கேரள உயர் நீதிமன்ற உத்தரவால், நாங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்றும் கூறினார்.

    எனினும்  நாங்கள் முற்றிலும் சுதந்திரமாக இல்லை, எங்கள் குடும்பங்கள் இன்னும் எங்களை அச்சுறுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. #SabarimalaForAll #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.

    மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.



    வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.

    சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.



    இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SabarimalaForAll #Sabarimala

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மக்கள் அமைப்புகளும், பாஜகவும் போர்க்கொடி தூக்கினர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டங்கள் நடத்தி திருப்பி அனுப்பினர்.

    மேலும், போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் வலியுறுத்தலால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய சம்மதித்தது. மேலும், பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்து இருந்தது.



    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு அளிக்கும்படி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
    ×