search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் நிறுத்தம்"

    • சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
    • சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மேலும் நீர்மட்டத்திற்கு ஏற்ப ஏரியில் இருந்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து கடந்த மாதம் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக குறைந்ததால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றுலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    நீர் மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரி தற்போது விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி தற்போது வீராணம் ஏரி குட்டைபோன்று காட்சி அளிக்கிறது.

    • 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் அந்த பகுதிகளில் செல்லும் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தி.நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சி.ஐ.டி. நகர், தாய்சா அடுக்குமாடி வளாகம் பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

    • வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 தினங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
    • உள்ளூர் நீராதரங்களை பயன்படுத்தி கொள்ளவும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டி கேட்டு கொள்ளபடுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிருஷ்ணகிரி கோட்டத்தின் மூலம் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில் 32 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக தருமபுரி ராயக்கோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெறகிறது. இதனால் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 தினங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

    எனவே, பயன்படுத்தி மேற்கண்ட 4 தினங்களுக்கு உள்ளூர் நீராதரங்களை பயன்படுத்தி கொள்ளவும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டி கேட்டு கொள்ளபடுகிறது. இவ்வாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற் கொள்ள உள்ளனர்.
    • பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற் கொள்ள உள்ளனர். இதன் காரணமாக பகுதி 7, 8, 9, 10, 11, 12 மற்றும் 12 பகுதிக்குட்பட்ட இடங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறுக்கு உட்பட்ட பகுதிகளில் 14-ந்தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய தள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையும் இல்லாமல் வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் உந்து பிரதான குழாயில் இணைப்புப் பணிகள் 21-ந்தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

    பகுதி 6-க்குட்பட்ட அயனாவரம், ஏகாங்கி புரம், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

    பகுதி பொறியாளர்-6 தொலைபேசி எண்: 8144930906 (திரு.வி.க.நகர்), துணை பகுதி பொறியாளர்-16 தொலைபேசி எண்:8144930216, துணை பகுதி பொறியாளர்-17, தொலைபேசி எண்: 8144930217 ஆகியோரை தொடர்பு கொள்ளும்படி சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    ×