search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு வீராணம் ஏரி குடிநீர் நிறுத்தம்
    X

    நீர்மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரி குட்டைபோல் காட்சி அளிப்பதை காணலாம்.

    சென்னைக்கு வீராணம் ஏரி குடிநீர் நிறுத்தம்

    • சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
    • சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மேலும் நீர்மட்டத்திற்கு ஏற்ப ஏரியில் இருந்து சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கமுடியாது. அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து கடந்த மாதம் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக குறைந்ததால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றுலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    நீர் மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரி தற்போது விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி தற்போது வீராணம் ஏரி குட்டைபோன்று காட்சி அளிக்கிறது.

    Next Story
    ×