search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பொருட்கள்"

    • பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தையும் பாதிக்கும்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பருவமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை. கட்டுமானத்துக்கு தேவையான ஆற்று மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. ஆனாலும் மணல் கிடைக்கவில்லை.

    இதேபோல் செங்கல், சிமெண்ட், எம் சாண்ட் விலை உயர்ந்து உள்ளதால் பில்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இது கட்டுமானப் பணியில் பாதிப்பையும் சுணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று பில்டர்கள் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உள்ளூர் கடைகளில் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.440-க்கு விற்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ப்ளு மெட்டல், எம்சாண்ட் ஆகிய வற்றின் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு கட்டிடங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. செங்கற்கள் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக உள்ளது. பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தையும் பாதிக்கும்.

    உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும். இதனால் அவர்கள் திரும்பியவுடன் கட்டுமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத் தக்க தாமதம் ஏற்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கட்டிட அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவும் கால தாமதத்தை குறைக்கவும் வேண்டிய தேவையும் உள்ளது. அனுமதி வழங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையின் சுமையை குறைக்க 100 சதவீதம் உயர்த்தப்பட்ட கட்டிட திட்ட ஒப்புதல் கட்டணம் மற்றும் உள் கட்டமைப்பு மாற்றங்களில் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்யுமாறு பில்டர் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

    • ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருட்டுபோனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது37). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக திருமங்கலம் நகர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை இந்த நிறுவ னத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக சாலை யோரங்களில் கம்பி, பிளாஸ்டிக் பைப்கள் வைக்கப்பட்டிருந்தன.

    சம்பவத்தன்று திருமங்க லம் நகர் பகுதியில் சாலை யோரத்தில் வைக்கப்பட்டி ருந்த 1,500 மீட்டர் பிளாஸ்டிக் பைப்கள், 30 இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இதுகுறித்து கட்டுமான நிறுவன மேலாளர் சந்தோஷ் திருமங்கலம் நபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது.
    • நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி‌. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரில் ஒரு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அங்கிருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போஜராஜன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    • சிதறி கிடக்கும் பொருட்களின் மீது வாகனங்கள் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றது.
    • பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் அந்த பணிக்காக சாலைகளின் ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் சாலைகளில் சிதறி கிடக்கின்றது.

    இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி வரும் போது சிதறி கிடக்கும் பொருட்களின் மீது வாகனங்கள் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பணியினை எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கூறி கட்டுமான பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • தேங்காய்பட்டணம் துறைமுகத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், விஜய்வசந்த் எம்.பி., ராேஜஷ்குமார் எம்.எல்.ஏ., கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளான கல்குவாரிகளை முறைப்ப டுத்துவது, தேங்காய்பட்ட ணம் துறைமுக பணிகளை துரிதப்படுத்துவது, சாலை களை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மாவட்டத்திற்குட் பட்ட தேசிய நெடுஞ்சாலை களை சீரமைக்க ரூ.15 கோடி யில்நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படுவதோடு, தேங்காய்பட்டணம் துறைமு கத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் முன்பு 39 கல்குவாரிகள் இயங்கி வந்தன.

    தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்ற சூழலில் தற்போது கன்னியா குமரி மாவட்டம் வழியா கேரளாவிற்கு அதிக பாரத் துடன் கனரக வாகனங்கள் மூலமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவ தாக ஏராளமான குற்றச் சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக் கைகள் எடுத்ததன் விளை வாக ரூ.2 கோடிக்கும் மேலாக அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட எல்லை பகுதியில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் மூலம் கனிமவள பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது, எடைமேடை கள் அமைப்பது, களியக்கா விளை மற்றும் ஆரல்வாய் மொழி சோதனை சாவடி களில் எடை மேைடகள் அமைப்பதோடு கண்காணிப்புகளை தீவிரப் படுத்தப்படவுள்ளது. வெகு விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி முறைப் படுத்தவும் திட்டமிட்டுள் ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள எந்த கல்குவாரியில் இருந்தும் கேரளாவுக்கு கற் களை எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடை சீட்டு அனுமதி வழங் ப்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து நமது குமரி மாவட்டம் வழி யாக கேரளாவுக்கு கனிமங் கள் கடத்தப்படுவதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள் ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய் துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாது குமரி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கற்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏது வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    குமரி மாவட்ட கல்குவாரி களில் முைறகேடாக கற்கள் வெட்டப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளது. இக் குழுவின் மூலம் கல்குவாரி களில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் கல் குவாரி உரிமையாளர் கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது
    • 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் பேசியதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடங்களுக்கு பதிலாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்ட வேண்டும். குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் ஜல்லி, மணல் மற்றும் கருங்கற்கள் போன்ற கட்டுமான பொருட்கள் கிடைக்க பெறாததால் கட்டு மான பணிகளில் தேக்க நிலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர். எனவே இதனை நிவர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காளிகேசம் பகுதியில் கேபிள் கார் வசதி செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிய அழைப்பு விடுக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், குமரி மாவட்டத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வருகை தந்தபோது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை முறையாக அழைக்காததால் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீல பெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, செலின் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×