search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்சீற்றம்"

    • மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • மீன் சந்தைகள் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே அரபிக்கடலோரம் அமைந்துள்ள கடற்கரை கிராமம் கோவளம். இங்கு மீனவர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித் தொழிலாகும். இந்திய பெருங்கடல், வங்க கடல் ஆகிய கடல்களை விட அரபிக்கடல் எப்போதுமே சீற்றமாகவே காணப்படும். இதனால் கோவளம் கடற்கரை கிராமத்தைச்சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக பாதுகாப்பான மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் கோவளம் மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று மீன் பிடிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. தற்போது நிலவிவரும் இந்த கடல் சீற்றம் காரணமாக கோவளம் மீனவர்கள் பக்கத்தில் உள்ள கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி கோவளம் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்து வருகிறது. இன்று2-வது நாளாக கோவளத்தில் கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கோவளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வதுநாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். கோவளம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கோவளத்தில் உள்ள மீன் சந்தைகள் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. கோவளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் மீன் ஏலம் எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் யாரும் கோவளத்துக்கு வரவில்லை.

    ×