search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஆர் விஜயபாஸ்கர்"

    • தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.
    • 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அரங்கநாதன்பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார வாகனங்களுக்கு பின்னால் கண்காணிப்பு குழுவினர் சென்றனர்.

    இந்த வேளையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ்குமார், மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    • கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன?
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியிருந்தது.

    6 மாதமாக ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்குக்கு கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன? கவர்னர் மாளிகை 6.7.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டது.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கவர்னர் பொய் சொல்வது தெரிகிறது.

    இப்படி இருக்கும்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற சந்தேகம் இருக்கிறது.

    இந்த கேள்வியை நான் எழுப்பியதால் பா.ஜனதாவினர் தகராறு செய்தால் பரவாயில்லை. அ.தி.மு.க.வினர் ஏன் தகராறு செய்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வலிக்கிறது?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எங்கள் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் எலியும்-பூனையும் தான்.
    • செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இவ்வளவு எளிதாக அமலாக்கத்துறையிடம் சிக்கினார் என்பதற்கு கரூர் வாசிகள் கூறுவதாவது:-

    எங்கள் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் எலியும்-பூனையும் தான். பொருளாதாரத்திலும், செல்வாக்கிலும் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. கடந்த தேர்தலில் செந்தில்பாலாஜியிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோல்வியை தழுவியது தெரிந்ததே. அதனால் எப்படியாவது செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

    அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வாய்த்தது. அதாவது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்தான் அண்ணாமலையின் சகோதரி வாடகைக்கு குடியிருக்கிறார். அண்ணாமலை கரூருக்கு வரும் போதெல்லாம் சகோதரி வீட்டுக்கு வருவதுண்டு. அப்போது மரியாதை நிமித்தமாக இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    அந்த நேரத்தில்தான் செந்தில்பாலாஜி தொடர்பான பல தகவல்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் திரட்டி கொடுத்ததாகவும் அதை வைத்தே அண்ணாமலை தனது ஆட்டத்தை தொடங்கி செந்தில் பாலாஜியை ஆட்டம் காண வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

    ×