search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுற்றுச்சூழல் தினம்"

    • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.

    இதில் ஆணையர் (பொ) ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு மரங்களின் அவசியம் எடுத்துரைக்க அனைத்து பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் அனைத்து வார்டுகளில் விநியோகம் செய்யப்பட்டன.

    • உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
    • இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.

    தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.

    இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்களிடம் உள்ள பயனற்ற பொருட்களை குறைத்தல், மறு பயன்பாடு, மற்றும் மறு சுழற்சி என்ற அடிப்படையில் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள் மற்றும் பயன்படாத காலணிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி வளாகம், நந்தீஸ்வரர் கோயில் அருகில், பஸ் நிலையம், வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் பயனற்ற பொருட்களை வாங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை நகர மன்ற தலைவர் மோகனவேல் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், மணிவண்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
    • இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.

    பழனி:

    கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம வனக்குழு மக்களை தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் மற்றும் பிரேம்நாத், ஜெயசீலன், வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர். இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.

    மேலும் காற்று மாசினை தடுக்கும் விதமாக தேக்கந்தோட்டம் வன சோதனை சாவடியிலிருந்து வருகிற ஜூன் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மிதிவண்டி வைத்திருப்போர் பழனி வாழ் மக்கள் ஒன்றிணைந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நெகிழிகளை அகற்ற ஒன்று சேருமாறு பழனி வனச்சரத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி அறங்காவலர் டாக்டர் கல்பனா சங்கர் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் துணை பொது மேலாளர் பிரபாகரன் மற்றும் முதன்மை பொது மேலாளர் மோசஸ் வழிகாட்டுதலின்படி 130-க்கும் மேலான மகளிர் குழு பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு கொண்டாடப்பட்டது.

    ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜெய்சங்கர் சமூக ஒருங்கிணைப்பு மேலாளர் நடராஜன் இணைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டில்லிபாபு, ஒன்றிய குழு உறுப்பினர் யுவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிரவேல், அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் ரகு, கிராம ஊராட்சி செயலாளர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சுற்று சூழல் தின உறுதிமொழி மரக்கன்றுகள் வழங்குதல் விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது தூய்மை பணியாளர்கள் சவுசியா பரிசு வழங்கப்பட்டது.

    சௌமியா செழியன் உதவி மண்டல பயிற்சியாளர் ரேவதி ராஜேஷ் மற்றும் அனுப்பிரியா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கடற்கரையில் தூக்கி வீசப்படும் குப்பைகளால் கடற்கரை பகுதி நாளுக்கு நாள், மாசடைந்து வருகிறது.

    இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்த யோகா கலைஞர்கள் ஒருங்கிணைந்து கடற்கரை கோயில் அருகில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது கடற்கரையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், காலணிகள், உணவு கழிவுகள், கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்பட்ட பழைய துணிகள், காகித அட்டைகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட குப்பைககளை தரம் பிரித்து கடற்கரை மணலில் வண்ண கலரில் இந்திய வரைபடம் வரைந்து அதனை சுற்றி தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை காட்சி படுத்தினர்.

    பிறகு அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் இதுபோன்ற குப்பைகளால் கடற்கரை பகுதி மாசு ஏற்படுகிறது என்றும், அதனால் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்றும், குப்பைகளை கடற்கரையில் கண்ட இடங்களில் வீசாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது யோகா கலைஞர்கள் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி வட்ட வடிவில் நின்று மாமல்லபுரம் யோகாசன மூத்த பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    அப்போது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் இதுமாதிரி குப்பைகளால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்றும், இங்கு யாரும் குப்பைகளை போடாதீர்கள் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். காட்சி ஓவியம் வடிவில் என்ன மாதியான குப்பைகளால் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்பதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சி சுற்றுலா வந்த பயணிகளையும், பொதுமக்களையும் அதிகமாக கவர்ந்தது.

    • உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சுவாமிமலை:

    இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் உலக மிதிவண்டி தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.

    இந்த பேரணியை அன்பழகன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடக்கி வைத்தார். கும்பகோணம் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தார். விழாவிற்கு வி.ஏ. ரோசரியோ செஞ்சிலுவை சங்க துணை தலைவர் தலைமை தாங்கினார்.

    கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் விஜயபாலன், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சிவக்குமார், பெஞ்சமின் கலந்து கொண்டனர். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, பூமி மாசுபடுவதை தடுக்க மரக்கன்று நடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் தேசிய பசுமைப்படை சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது,

    உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், தங்களது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் பள்ளி வளாகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதனை முறையாக பராமரித்திட வேண்டும்.

    மேலும், மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் தேவையற்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்று கிடைப்பதோடு சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

    மரங்கள் மழை வளம் பெருவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. இயற்கை சம நிலை மேம்படைவதற்கும், புவி வெப்ப மயமாதலை குறைப்பதற்கும் இயற்கை சீற்றங்களை தணிக்கக் கூடிய தன்மையும் மரங்களுக்கு உண்டு.

    மேலும், பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை மரங்கள் உருவாக்குகின்றன. மனிதனின் வாழ்வில் மரங்கள் என்பது இன்றியமையாதவையாகும். மரங்களின் தேவைகளை நல்ல முறையில் அறிந்து கொண்டு பிறருக்கும் அதன் தேவையை எடுத்துரைக்க வேண்டும்.

    எனவே, மாணவர்களாகிய நீங்கள் பூமி மாசுபடுவதை தடுத்து பூமிக்கு மேல் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாத்திடவும் இயற்கையோடு ஒன்றிட எதிர்கால சந்ததியினருக்காக மரக்கன்றுகளை நாம் நட்டு அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
    ×