search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 இடங்களில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம்
    X

    பயனற்ற பொருட்களை வாங்கும் மையத்தினை நகர மன்ற தலைவர் மோகனவேல் பஸ் நிலையத்தில் நேற்று திறந்து வைத்த போது எடுத்த படம்.

    4 இடங்களில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம்

    • நகரமன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்களிடம் உள்ள பயனற்ற பொருட்களை குறைத்தல், மறு பயன்பாடு, மற்றும் மறு சுழற்சி என்ற அடிப்படையில் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள் மற்றும் பயன்படாத காலணிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்காக நகராட்சி வளாகம், நந்தீஸ்வரர் கோயில் அருகில், பஸ் நிலையம், வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் ஆகிய 4 இடங்களில் பயனற்ற பொருட்களை வாங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை நகர மன்ற தலைவர் மோகனவேல் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், மணிவண்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×