சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு மகளிர் குழுக்கள் ஊர்வலமாகச் சென்ற போது எடுத்த படம்.
சோளிங்கர் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு மகளிர் குழுக்கள் ஊர்வலமாகச் சென்ற போது எடுத்த படம்.
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி அறங்காவலர் டாக்டர் கல்பனா சங்கர் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் துணை பொது மேலாளர் பிரபாகரன் மற்றும் முதன்மை பொது மேலாளர் மோசஸ் வழிகாட்டுதலின்படி 130-க்கும் மேலான மகளிர் குழு பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு கொண்டாடப்பட்டது.

ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜெய்சங்கர் சமூக ஒருங்கிணைப்பு மேலாளர் நடராஜன் இணைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டில்லிபாபு, ஒன்றிய குழு உறுப்பினர் யுவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிரவேல், அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் ரகு, கிராம ஊராட்சி செயலாளர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சுற்று சூழல் தின உறுதிமொழி மரக்கன்றுகள் வழங்குதல் விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது தூய்மை பணியாளர்கள் சவுசியா பரிசு வழங்கப்பட்டது.

சௌமியா செழியன் உதவி மண்டல பயிற்சியாளர் ரேவதி ராஜேஷ் மற்றும் அனுப்பிரியா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com