search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுச்சூழல் தினம்- சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய யோகாசன கலைஞர்கள்
    X

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

    உலக சுற்றுச்சூழல் தினம்- சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய யோகாசன கலைஞர்கள்

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கடற்கரையில் தூக்கி வீசப்படும் குப்பைகளால் கடற்கரை பகுதி நாளுக்கு நாள், மாசடைந்து வருகிறது.

    இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்த யோகா கலைஞர்கள் ஒருங்கிணைந்து கடற்கரை கோயில் அருகில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது கடற்கரையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், காலணிகள், உணவு கழிவுகள், கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்பட்ட பழைய துணிகள், காகித அட்டைகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட குப்பைககளை தரம் பிரித்து கடற்கரை மணலில் வண்ண கலரில் இந்திய வரைபடம் வரைந்து அதனை சுற்றி தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை காட்சி படுத்தினர்.

    பிறகு அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் இதுபோன்ற குப்பைகளால் கடற்கரை பகுதி மாசு ஏற்படுகிறது என்றும், அதனால் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்றும், குப்பைகளை கடற்கரையில் கண்ட இடங்களில் வீசாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது யோகா கலைஞர்கள் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி வட்ட வடிவில் நின்று மாமல்லபுரம் யோகாசன மூத்த பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    அப்போது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் இதுமாதிரி குப்பைகளால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்றும், இங்கு யாரும் குப்பைகளை போடாதீர்கள் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். காட்சி ஓவியம் வடிவில் என்ன மாதியான குப்பைகளால் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்பதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சி சுற்றுலா வந்த பயணிகளையும், பொதுமக்களையும் அதிகமாக கவர்ந்தது.

    Next Story
    ×